மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கமையே முக்கிய காரணியாக அமைந்திருந்தது. குறிப்பாக வடக்கு மக்களைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் எனப் புலிகள் தடைசெய்தனர். இதற்காக ராஜபகசவின் தரப்பிலிருந்து 784 மில்லியன் ரூபா புலிகளுக்கு வழங்க்கப்பட்டது. இலங்கையைச் சூறையாடி பெரும் பணக்காரக் குடும்பமாக மாறியுள்ள ராஜபக்ச குடும்பத்திடம் 2005 ஆம் ஆண்டில் அந்தளவிற்குப் பணம் கையிருப்பில் இருந்திருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ராஜபக்ச சுனாமி நிவாரணத்திற்கு என ஆரம்பித்த தன்னார்வ நிறுவனமான ‘ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட’ இனூடாகவே பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்கிய முக்கிய நிறுவனங்களில் பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட பிளான் இன்டர்னாஷனலில் இலங்கைக் கிளையான பிளான் சிறீலங்கா ஒன்றாகும். பிரித்தானிய அரசு மற்றும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் ஆதரவுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின் பின்னணியில், சுவிஸ் கிரடிட், பார்க்ளைஸ் வங்கி, ஆகிய நிறுவனங்கள் செயற்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு ஹெல்பிங் ஹம்பாந்தோட்ட நிறுவனத்தின் ஆரம்பத்துடன் இனப்படுகொலைக்கான திட்டமும் ஆரம்பமாகிவிட்டது எனலாம்.
விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தொலையை மௌபிம என்ற சிங்கள ஊடக நிறுவனமே எடுத்துச் சென்றது என்றும் அத்தகவலை அவர்கள் வெளியிட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது 784 மில்லியன் ரூபாவை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் யார் எடுத்துச் சென்றது என்பதை மௌபிம ஊடக நிறுவனத்தார் வெளியிட வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் பணம் எவ்வாறு, யாரால் எடுத்துச் செல்லப்பட்டது என்பதை மௌபிம தரப்பினரால் வெளியிட முடியாவிட்டால் அதனை எதிர்காலத்தில் தாங்கள் வெளிப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://plan-international.org/what-you-can-do/corporate-partnerships
கடந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 10, 15கோடி ரூபா நிதியில் 662கோடி ரூபா மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. எஞ்சிய 352கோடி ரூபா நிதி மீளவும் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு சில வேளை கடந்த ஆண்டு வட மாகாண சபை இயங்காமை ஒரு காரணமாக இருக்கலாம். 2014 வரவு செலவுத் திட்டத்தினூ டாக வடமாகாண சபைக்காக 1733 கோடி பத்து இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது.இந்த பணமும் திறைசேரிக்கே திரும்பிசெல்லுமா…???
காலந்தான் பதில் சொல்லும்…
கிழக்கு மாகாணசபைக்கு 1257கோடி ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும் 853கோடி ரூபா மட்டுமே செலவிடப்பட்ட நிலையில் எஞ்சிய 404 கோடி ரூபா திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளது. கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது முதலமைச்சராக நஜீப் ஏ.மஜீத் தெரிவானதிலிருந்து சபை செயலூக்கமற்று காணப்படுவதே இதற்கு காரணமாகும்.மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகளை நம்பி எவ்வளவோ வேலைத்திட்டங்கள் காத்துக்கிடக்கின்றன.
போராலும் சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்டு கிடக்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்கு சேர வேண்டிய இப்பெருந்தொகை நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச்செல்வதென்பது சகிக்கமுடியாத விடயமாகும்.
அரசியல் வாதிகளின் அசமந்த போக்குகள் காரணமாக பல்லாயிரம் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற கூடிய வாய்ப்புகள் கைநழுவி செல்லுகின்றன.மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை பூரணமாக பயன்படுத்த தெரியாத தலைமைகள் தமிழ் மக்களுக்கு வாய்த்த சாபக்கேடுகள் அன்றி வேறென்ன…???