பேசினால் உள்ளே வைத்து விடுவார்கள் என்று வைகோ முதல் சீமான் வரை எல்லோருமே ஜெயலலிதாவுக்குப் பயப்படுகிறார்கள். ராஜபக்சவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தமிழ் ஈழத்தின் முதல் எதிரியே ஜெயலலிதாதான். இவ்வாறு விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
என்னை ஜெயலலிதா அழைத்து, நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டா கலைஞருடன் சேர்ந்தேன்? ஜெயலலிதா எங்களை வேண்டாம் என்று சொன்னதால்தான் கலைஞருடன் போனேன். நாங்கள் நடுத்தெருவில் நிற்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகுதான் கலைஞருடன் சேர்ந்தேன் என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
ஓ..அப்படியா திருமா சார். அப்போ , கருனாநிதிக்கும் றாஜபக்சேக்கும் உள்ள வித்தியாசத்தை எப்போ கண்டுபிடிக்கப் போறிங்க திருமா சார். ஒருவேளை , அடுத்த தேர்தலில் கூட்டணி மாறு போது இருக்கலாமோ ?
திருமாவளவனுக்கும் கருனாவின் சாயள் அடிக்கிறது பார்த்தீர்களா .திமுக …என்னவோ போங்க…
ஈழத்தமிழருக்கான உண்மையான போராளி அய்யா திருமாவளவன்…நன்றி திருமா அண்ணா