இலங்கையின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி இந்தியாவின்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு அளித்துள்ளதாக இந்திய ஜனதாகட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 21ம் நூற்றாண்டு மிகப் பெரிய வெற்றியாக தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு,இந்திய அரசாங்கம் அதி உயர் விருதுகளை வழங்கி கௌரவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ராஜபக்சவிற்கு இந்திய அரசாங்கம் உயர்மட்ட விருது வழங்கி கௌரவம் செலுத்தவேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
தமிழின விரோதியும் சாதி வெறியரும் இந்துத்துவ அடிப்படைவாதியுமான சுப்பிரமணியம் சுவாமி இனப்படுகொலை நிகழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (Human Rights Protection Centre-HRPC)போன்ற அமைப்புக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாமி தமிழ்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் திகதி தெளிவற்றதாக உள்ளது.
“21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதப் படுகொலையாளி”- இப்படி ஒரு பெயரில் ஒரு விருதைத் தெரிவு செய்யப் பரிந்துரைக்கலாம்
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதப் படுகொலையாளி 2009 ம் ஆண்டு இறந்தாரே
2009 ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் தான் விதைக்க பட்டார்கள்… துரோகிகலுக்கு அது தெரியாது.
தண்ணீர் ஊற்றுகின்றீர்களா
There are diplomatic protocols, courtesy and decorum. Then there are diplomatic channels to work out matters. Things are going great.
கொடுக்கத்தானே வேண்டும் தேசிய தலைவரே இவரை யதார்த்த வாதி என்று பதவிக்கு வர வழிசெய்தார், தேர்தல் பகிஸ்கரிப்பு என்று, அவரிடமே யதார்த்த வாதி என்றுநல்ல பெயர் வாங்கிய ராஜபக்சவுக்கு விருதை வழங்கலாம், யமனுக்கு அதாவது (தேசிய தலைவருக்கு) இரும்பு கொடுத்தவர் என்ற பட்டமும் வழங்கலாம்
சூப்புறசாமி சொன்னதில், இதுதான் சூப்பறோ சூப்பர்….
சிங்கள சமர வீராவா ?உங்களுக்கு காலன் காத்திருக்கிறான்.
காலன் எல்லோருக்கும் காத்திருப்பான், ஆனால் அவனது ஏஜென்ட் 2009 ம் ஆண்டு இறந்து போனான்
வீரன் பெயரில் வருவது விளங்காத ஒன்று என்று தெரிந்தும் அதற்கு எல்லோரும் பதில் எழுதுவது பொழுதுபோவதற்காகத்தான் சீரியசாக எடுத்துக்கொல்லவேண்டாம்.
அட மெத்தப்படித்த மேதாவி இவர்
உண்மைதான் என்னெருமை தோழரே, மே இல் தாவித்தான் வந்திருக்கின்றேன், நான் எப்போது தங்களைப் புகழ்வது யாதேனில் குண்டுசட்டிக்குள் தாவித்தாவி குதிரையோட்டும் கோமாளி விகடன் நீர் என்பதை மட்டுமே.
கொல்லப்பட்டது ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள். சீரழிக்கப்பட்டது பல இலட்சம் தமிழரின் வாழ்வு. இதற்கு காரணமானவரைப் பாராட்டுவது ஒரு தமிழர்! ஒரு இனத்தின் அழிவில் இரு நாடுகளின் பாதுகாப்பு. என்ன அதிசயம். கொல்லப்பட்டது புழுக்களல்ல பூச்சிகளல்ல உங்களைப் போன்ற மனிதர்கள். மறந்து விடாதீர்கள் மனிதர்கள். வாழ்க உலக நீதி!
Three years have gone by. People are throwing all kinds of figures. They say that none can be more Catholic than the Pope. Let us hope for the best.