ராஜபக்ச அராசின் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு நிழல் உலக மாபியாவும் போதைப்பொருள் வர்த்தகருமான லோரன்ஸ் ரொமேலோ துமிந்த சில்வா என்பவர் அவரது எதிரியான பாரத லக்ஷ்மன் பிரமேச்சந்ரவை நடுத்தெருவில் வைத்துக் கொலைசெய்தார். கொலையின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துமிந்த சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று மீண்டும் இலங்கை திரும்பி தனது நிழல் உலக வலையமைப்பை ராஜபக்ச குடும்பத்தின் துணையோடு நடத்திவருகிறார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிக்கா பிரேமச்சந்ர. இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிக்க ஹிருணிகா கடந்தவாரம் மகிந்தவின் எதிரணி ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் துமிந்த குழுவினர் ஹிருணிக்காவிற்குக் கொலை மிரட்டல் விடுக்க அவர் சிங்கபூர் பயணமாகியுள்ளதாக உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹிருணிகா நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் நாடுதிரும்புவார் எனக் கூறியுள்ளார்.
ஹிருணிகா அவரது தாயார் சுமணா ஆகிய இருவரும் சிங்கப்பூரில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.
ராஜபக்ச பாசிஸ்டுகள் தமது எதிரிகளை அழிக்கும் வேலையை வெவ்வேறு தளங்களில் ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை ராஜபக்ச பாசிசத்தின் நம்பிக்கைகுரிய உறுப்பினர்களான மைத்திரிபால மற்றும் ராஜித செனிவரத்ன ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட எதிரணி இலங்கை பேரினவாதப் பாசிசக் கருத்தியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தத் தயாரில்லை. மக்களை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்துவதற்கு எதிராக போலி இடதுசாரிகள் தாமும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஹிருணிகா பிரேமச்சந்திரவும் குடும்பத்தாரும் ஒரு கட்டத்தில் ஐ.நா மனித உரிமைச் சபையில் (இன்னொரு ஜெனீவா உல்லாசப் பயணம் போல்) பிரசன்னமாகியது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
தற்போது ஐ.நா மனித உரிமைச் சபையை அமெரிக்க எகாதிபத்தியம் தனக்கேற்றவாறு தானே படுகொலை செய்ய முற்றிலும் உதவிய ஈழத்தமிழரைப் பாவித்து முன்னகர்த்த தாம் எதோ செய்து விட்டோம் என கொக்கரித்து உரிமை கொண்டாடும் தமிழ் அமைப்புகளும் தனி நபர்கள் பலரும் ஐ.நா மன்றக் கூட்டங்களிலுன் மண்டபங்களிலும் ஒடித்திரிந்து பின்னர் தமக்குள்ளேயே சண்டைகளையும் உருவாக்கி பலரையும் பேய்க்காட்டி தாமும் ஏமாறுவது வழக்கமாகி விட்டது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அந்திரத்தில் புதைந்துள்ள விபரத்தின் ஆழத்தை இனியொருவும் தவற விடுகிறது.
துமிந்த சில்வா பட்டப்பகலில் மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான லக்ஷ்மண் பிரேமச்சந்திரவை எஅடுத்தெருவில் சுட்டுக்கொன்ற பின்னர் மீண்டும் உயர் அரச பதவியில் கூட அமர்வதற்கு அவன் கோத்தப்பயா ராஜபக்ச-இன் நகர அபிவிருத்தி அமைச்சுப் பட்டத்துக்கு இன்றியமையாததே காரணம். கொழும்பு நகரின் ஏழை மக்களின் சேரிகளை உடைத்தெறியவே துமிந்த சில்வா-க்கு அவ்வளவு செல்வாக்கு.
கொலைகார சண்டியன் துமிந்த சில்வா-இன் அச்செல்வாக்கு முன்னைய ஸ்ரீ லங்கா பொலிஸ் மா அதிபன் மகிந்த பாலசூரிய ரஷ்யாவில் கலாநிதி பட்டம் பெற உதவுமளவிற்குக் கூட சென்றிருந்தது. கலாநிதி மகிந்த பாலசூரிய ஒருகட்டத்தில் கட்டுநாயக்கா ஆடைத் தொழிலாளரின் ஆர்ப்பட்டத்தை அடக்கிய சூட்டுச் சம்பவம் காரணமாக மகிந்த ராஜபக்சவால் பொலீஸ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டான்.
தற்போது நாட்டு அடக்குமுறைமைகள் சூடுபிடித்துள்ள நிலையில் புதிதாக ஐ. நா மனித உரிமை ஆணையாளராக இருந்த நவிப்பிள்ளைக்கு பேய்க்காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு எனும் மேலும் இராணுவ மயமாக்கப்பட்ட பொலிஸ் அடக்கு முறைமைக்கு கலாநிதி மகிந்த பாலசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டான்.
ஏற்கனவே பிரித்தானிய ராணுவமயமான பொலிஸ் முறைமையால் ரகசியமாக உருவாக்கப்பட்ட பொலிஸ்-அதிரடைப் படை (STF வல்வை நகரையும் அண்டிய பகுதிகளையும் அடக்க வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர அடக்குமுறை பாணியில் பெல்பாஸ்ட் நகரில் 1983 இன் ஆரம்ப காலகட்டங்களில் ரகசியமாக உருவாக்கப்படது) -இன் 2005, 2006 காலப்பகுதி கட்டளைத் தளபதியாக திருகோணமலை மற்றும் வடமேல் பிராந்தியத்தின் மூதூர் 17 படுகொலை, கோணமலை 5 மாணவர் படுகொலை என பல பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவன் தான் அன்றைய விசேட உதவி பொலிஸ் மா அதிபன் மகிந்த பாலசூரிய.
இவை அனைத்தும் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் தனது தந்தையின் கொலையாளி துமிந்த சில்வா, அவனை பாதுகாக்க நேரடியாக ஈடுபட்ட பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய ஆகிய இருவரின் மேலுள்ள தனிக் கோபமே இவளின் அந்திரத்துக்கு காரனம். ஆனால் அவளுக்குத் தெரியாமலிருக்கக் கூடிய இன்னொரு விடயம் என்னவென்றால் அவளுக்காக ஊது குழலாக செயற்படத் தொடங்கியிருக்கும் இன்னுமொரு கலாநிதி ராஜித சேனாரட்ன ஏற்கனவே துமிந்த சில்வா மற்றும் கலாநிதி மகிந்த பாலசூரிய உடன் கள்ளத்தொடர்புகளை வியாபார நோக்கில் பேணுபவன் .
http://www.wcbl.ru/index.php?option=com_content&view=article&id=48:vip-members-of-the-wcbl&catid=1:latest-news&Itemid=50
Prof. Mahinda Balasuriya / VIP Member of WCBL
Mr. Duminda Silva / VIP Member of the WCBL
Dr. Rajitha Senaratne / VIP Member of the WCBL
இங்கு வேடிக்கையான விடயம் ஒன்று என்னவென்றால் ரஷ்யாவில் துமிந்த சில்வாவுக்கும் கலாநிதி பட்டம் மகிந்த பாலசூரியவோடு ஏதோ ஒரு முடுக்கில் சொருகப்பட்டது. ஆனால் கலாநிதி துமிந்த சில்வா என்ற பட்டம் நகைப்புக்குரியதாகும் என்ற காரணமாக இருக்கலாம் அப் பட்டம் பாவிக்கப்படுவது இல்லை.
http://lankanewsweb.net/news/3709-rajitha-tries-to-buy-a-doctorate-from-russia
Who bother about these people??
// நவிப்பிள்ளைக்கு பேய்க்காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு எனும் மேலும் இராணுவ மயமாக்கப்பட்ட பொலிஸ் அடக்கு முறைமைக்கு கலாநிதி மகிந்த பாலசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டான் //
தெளிவாக கருத்தைப் பதிவு செய்யமுடியாமைக்கு மன்னிக்கவும்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு-க்கு புதிய செயலாளனாக அண்மையில் அக்டோபர் 2014 நியமிக்கப் பட்டது ஈழத் தமிழரை மேலும் அடக்குமுறைகளுக்கு ஒரு புது யுக்தி என்றும் நோக்கப்படல் வேண்டும்
http://newsfirst.lk/english/2014/10/dr-mahinda-balasuriya-assume-duties-secretary-ministry-law-order/58979
மேலும் இனியொருவில் அண்மைய பதிவுகள் இரண்டை நோக்கவும்:-
https://inioru.com/?p=42910
// இனக்கொலைக்கு ஆதரவாக வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்தவர் எதிரணியில் முக்கிய புள்ளி
https://inioru.com/?p=43095
// இலங்கையிலிருந்தே பெல் பொட்டிங்கரோடு தொடர்புவைத்திருந்த ராஜித செனிவரத்னாவே அரசாங்கத்திலிருந்து மைத்திரிபாலவுடன் முதலில் எதிர்க்கட்சிக்குத் தாவியவர்//
அதாவது ‘கலாநிதி’ ராஜித சேனாரட்ன-வின் தொடரும் சாகசங்கள் அவதானிக்கப் பட வேண்டியது