ரஷ்ய அதிபர் புதினின் வருகை ஒத்திவைக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார், ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது இல்லை என்பதை இவர்களே உறுதி செய்துள்ளார்கள்’ என கூறினார்.
மேலும் அவர் இதுபற்றிக் கூறுகையில் “உலகத்திலேயே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது, இந்த அணு உலைத் திட்டம் உன்னதமானது என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் அணு உலையில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு மட்டும் வழங்க மாட்டோம் என்று சொல்வது ஏன்? பாதுகாப்பாகத்தானே இருக்கிறது, விபத்துதான் ஏற்படாதே இழப்பீடு வழங்குவதில் ஏன் இவ்வளவு சிக்கல்? இதை யோசிக்க வேண்டும். அமெரிக்க தொழில் நுட்பமும் ஜப்பான் தொழில் நுட்பமும் சேர்ந்த அணுமின் திட்டமான புகோஷிமாவே தோல்வி எனும்போது, ரஷ்ய தொழில் நுட்பம் எப்போதுமே தோல்விதான். இது அவர்களிடம் நாம் வாங்கிய விமானங்களின் தொடர் விபத்தே எடுத்துக் கூறும்.
இதன் மூலம் மறைமுகமாக அவர்கள் தெரிவிப்பது கூடங்குளம் அணு உலை பாதுகாப்பாக இல்லை என்பதைத்தான் என கூறினார்.
அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதிக்குள் புடின் இந்தியா வருவதாக இருந்தது. இந்நிலையில், திடீரென அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வரும் டிசம்பர் 24ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் பிரச்னை மற்றும் ரஷ்ய நிறுவனமான சிஸ்டெமாவின் ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து ஆகியவற்றால் புடின் அதிருப்தி அடைந்திருப்பதாலேயே தனது வருகையை ஒத்திவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
//அமெரிக்க தொழில் நுட்பமும் ஜப்பான் தொழில் நுட்பமும் சேர்ந்த அணுமின் திட்டமான புகோஷிமாவே தோல்வி எனும்போது, ரஷ்ய தொழில் நுட்பம் எப்போதுமே தோல்விதான்// இவரின் நம்பிக்கை இவரின் எஜமானனை பற்றியது, இவரது ஐயம் எஜமானனின் எதிரியைப் பற்றியது. அமெரிக்க தொழில் நுட்பம் ஜப்பானில் தோல்வி கண்டது குறித்து. 40 வருடத்திற்கு மேலான அணு உலை. தனியார்மயத்தால் உருவான அணு உலை. அணு உலை சீர்மைப்பதற்கான முன்பு கமிட்டி கொடுத்த எந்த விசயத்தையும் செய்யவில்லை. அதிலும் அமெரிக்கா அணு உலையில் உள்ள தொழில் நுட்பம் 39 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதற்குப் பிறகு அது அணு உலையை நிறுவவும் இல்லை. அப்படி இருக்கும் போது அது தோல்வி காண்கிறது என்றால் அங்கு நம்பிக்கை அல்ல ஐயம் எழவேண்டும். ஆனால் இவருக்கு நம்பிக்கை பிறக்கிறது.
இன்னொன்று ரஷ்ய அணு உலை என்றால் எப்போதுமே தொல்விதான் என்பது அவரின் ஆவல். அதுவும் அமெரிக்காவின் எதிரி என்பதால் அது மட்டுமல்ல கம்யூனிசம் என்றாலே அவருக்கு எதிரிதா (பார்க்க தீராநதி பேட்டி). அதிலும் ஸ்டாலின் என்றாலே அலர்ஜி அவருக்கு. அதற்கு ஆயிரம் காரணம் வேறுவேறு வகையில் கூறுவார். இன்றுள்ள ரஷ்யாவை பற்றி அவருக்கிருக்கும் வெறுப்பு அது அமெரிககவின் ஜெர்மனியின் எதிரியாக இருப்பதால். சரி இருக்கட்டும். அந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்க வேண்டியதுதான். இது நம் கருத்து. ஆனால் அவர் கருத்து என்ன தெரியுமா? அவரும் முறியடிக்க வேண்டியது என்கிறார், அது ஏகாதிபத்தியத்தை முறியடிக்க வேண்டும் என்ற காரணத்தால் அல்ல. அமெரிக்காவின், ஜெர்மனியின் எதிரியாக இருப்பதால். இந்தியாவின் பிரச்சினை, அமெரிக்காவின் ஆதிக்கம் மிகவும் மேலோங்கியே இருக்கிறது. அமெரிக்காவை நோக்கிய காலனிய போக்கே இந்தியாவில் இருக்கிறது. இங்கு பிரதானமாக எதிர்த்து போராட வேண்டியது அமெரிக்காவை. இரு நாடுகளுடனான ஒப்பந்தத்தில் அடிமை ஒப்பந்தம் அமெரிக்காவுடன் செய்து கொண்டது. அதுதான் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய அமெரிக்க அணு சக்த்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க பொருளாதார ஒப்பந்தம் என்ற ஒப்பந்தங்களை நேரடியாக அமெரிக்காவின் ஹைட் சட்டத்துக்கு உட்பட்டு போடப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நம் இராணுவத்தை நாயாக நினைத்து ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க சார்பாக காவல் காக்க அனுப்பியது. ஈராக்குக்கும் அனுப்பியது. தற்போது ஈரானுக்கு சார்பாக நடக்கச் சொல்லி நிர்பந்திப்பது, அமெரிக்காவுக்கு சார்பாக நிலையெடுக்க தூண்டுவது. இங்குள்ள அமைச்சர்களையே மாற்றுவது. யார் அமைச்சராக வேண்டும் என்று நிர்ணயிப்பது என்று அவர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறக்கிறது. இருந்தும் இந்த தரகுமுதாளித்துவக் கும்பல் தனது தரகு புத்தியோடு அணு உலை விசயத்தில் அதிகம் பேரம் கிடைக்கும் இடமான இரஷ்யாவுக்கும் சென்றது, பிரான்ஸ்க்கும் சென்றது. அதனுடைய இரண்டு உலைகளையும் இந்தியாவில் இரண்டு இடங்களில் நிறுவ முயற்சித்தது. இதில் ஒரு வேடிக்கையான ஒரு விசயம் என்றால் அணு உலை தொழில் நுட்பத்தில் இந்த இருநாடுகள்தான் இன்று முன்னோடியாக இருக்கிறது என்பது உலகறிந்த உன்மை. ஆனால் பாவம் உதயகுமாருக்கு இந்த உண்மை தெரியாதாம்? நம்பச்சொல்கிறார். (நம்பிட்டோம்…!?) இப்படி இந்தியாவை அரசியல் ரீதியாக புதிய காலனியாதிக்கத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கும் கும்பல் அமெரிக்கா. ஆனால் இப்படி தரகுத் தன்மையையும் ஏற்காத அமெரிக்கா எல்லாவற்றையும் தனக்கு வாரி வழங்கியது போல் ஏற்கெனவே இந்தியாவின் ஆற்றல் துறையில் ஆதிக்கம் வகிக்கும் அமெரிக்கா அதற்கு போட்டியாளன் இல்லாமல் செய்யவேண்டும் என்று நிர்பந்தம். அதிலும் அணு உலையில் அமெரிக்கா பின் தங்கிய தொழில்நுட்பத்தை வேறு வைத்திருக்கிறது. தாம் விற்க நேர்ந்தால் அந்த தொழில்நுட்பமே பிரச்சினையாக இருக்கும். ஆகையால் அமெரிககவின் போட்டியாளன் பிரான்ஸ், ரஷ்யாவை அகற்ற வேண்டும் என்றவெறியில் தனக்கான எடுபிடிகளை அரபு நாடான எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் நிறுவியது போல் இங்கும் என்.ஜி.ஓக்களை நிறுவி வெளியேற்ற வேண்டும். இதில் ரஷ்யாவுடன் போடப்பட்டுள்ள இந்த கூடங்குளம் ஒப்பந்தம் பொருளாதார ஒப்பந்தம், அமெரிக்காவுடன் போடப்பட்ட அரசியல் ஒப்பந்தம் போல் அல்ல. ஆனால் விட்டுக்கொடுத்தலாக நட்ட ஈட்டு ஒப்பந்தமும், அணு உலை கழிவு ஒப்பந்தமும். இதை எதிர்த்துப் போராடி மாற்றியமைப்பது வேறு. அணு உலையே அமெரிக்காவின் சார்பாக வேண்டாம் என்று சொல்வது வேறு.
இதில் உதயகுமாரின் விசயத்துக்கு வருகிறேன்.உதயகுமாரும் கிரீன் பார்டி ஆஃப் இந்தியா என்ற கட்சியின் இணை நிறுவனர், SACCER (South Asian Community Center for Education and Research) என்ற அமைப்பையும் நடத்துகிறார். ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் பல நாடுகளிலும் கிரீன் பார்ட்டி செயல்பட்டு வருகிறது. அவர் அடிக்கடி அமெரிக்காவிற்கு பயனம் செய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று. அங்கு போய் என்ன ஆய்வை செய்கிறார். அவர் படித்தது அரசியல். அங்குபோய் எப்படி ஆட்சிக் கவிழ்ப்பது என்று வகுப்பு எடுக்கிறாரா?
பீப்பிள்ஸ் எஜுகேஷன் ஃபார் ஆக்ஷன் அண்டு கம்யூனிட்டி எம்பவர்மெண்ட் (PEACE) 2010-2011 ஆண்டு (ரூ.2,64,05,409) இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் உதயகுமாரோடு தொடர்புடையது, இந்த அணு சக்திக்கு எதிரான இயக்கத்தோடு இணைந்து செயல்படுகிறது. தூத்துக்குடி மல்டிபர்ஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (ரூ. 2,44,37,807) என்ற அமைப்பு அணு எதிர்ப்பு இயக்கத்தில் முன்னோடியாக செயல்படுபவர்களில் உள்ள பிஷப் ஆவார். அதிகமாக பணம் பெறும் தன்னார்வ அமைப்புகளில் வேர்ல்ட் விஷன் (ரூ.233.74 கோடி) பணம் பெறுகிறது. அந்நிய நிதி தரும் நாடுகளில் அமெரிக்காதான் அதிகமாக கொடுக்கும் நாடு (2009-2010ல் ரூ. 3,105.73 கோடி, அதற்கடுத்து ஜெர்மனி (ரூ.1,046.30 கோடி)). மேற்கண்ட பெரிய தொண்டு நிறுவனங்கள் வாங்கும் நிதியை சிறிய நிறுவனங்களுக்கு தேவைக்கேற்றார் போல் திருப்பிவிடவும் செய்கிறார்கள். ஆனால் அதை சரியாக எப்படி என்று இவர்கள் கணக்கு காட்டுவதே கிடையாது. அவர்கள் காண்பிப்பதெல்லாம் போலி கணக்குகளாக இருக்கும். சுனாமி ஒட்டி நிறைய நிதிகள் பெறப்பட்டு அவையெல்லாம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது பல்வேறு வகையில் செய்திதாளில் நாம் படித்திருப்போம். இதை எப்படி மாற்று வழிகளில் பயன்படுத்துவார்கள் என்பதும் ஏராளத் தகவல்கள் இருக்கிறது.
உண்மையில் எல்லா ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி இந்தியாவை ஒரு சுயேட்சையான சுதந்திரமான நாடாக மாற்றவேண்டும் என்று சொல்லவேண்டும். அதே போல் ஜனநாயகமான நாடாக மாற்ற ஒரு புதிய ஜனநாயக ஆட்சிக்கு அணி திரளவேண்டும் என்று சொல்லவேண்டும். ஆனால் அமெரிக்காவின் திட்டமான தனக்கு சாதகமில்லாத அரசுகளையும் மக்கள் மத்தியில் தம் பொம்மை அரசுகள் அம்பலமான அரசுகளையும் அகற்றுவதற்கு “ஜனநாயகம்”, “மனிதநேயம்”, “ஒடுக்குமுறை” என்ற பெயரில் என்.ஜி.ஓக்களை வைத்து அங்கு அரசுக்கு எதிராக மக்களை திரட்டவது. அந்த அரசை வாய்ப்பிருக்கும் வரை பயன்படுத்திவிட்டு பிறகு துப்பிவிட்டு புதியதாக வேறொரு அரசை இவர்களை வைத்து தமக்கான பொம்மையை நிறுவுவது. இதுதான் மேற்கண்ட அரபு நாடுகளில் நடந்தது. இதையேதான் இங்கும் நடத்திக்கொண்டிருக்கிறது. ஈழத்திலும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறது. அமெரிகக ஒரு தீர்மானம் எடுத்து வந்தது (வெற்று தீர்மானம், ராஜபட்சே அமைத்த கமிட்டியின் தீர்மானத்தை அவர்களே செயல்படுத்தவேண்டும் என்ற உள்ளடக்கம்), அதையே அவர்களுக்கான பேரமாக பயன்படுத்திக்கொண்டது. அதுவும் “ஜனநாயகம்”, “மனித உரிமை” என்ற பெயரால். (மறந்தும் இனப்படுகொலை என்று வாய்திறக்கவில்லை). அங்கு ரஷ்ய-சீன ஆதிக்கத்திற்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிகக்-இந்திய கூட்டாக தலையிட்டது. இதில் சில நேரங்களில் நேட்டோவோடு சேர்வதா, பிரிக் கூட்டமைப்பில் சேர்வதா என்ற குழப்பும் கூட நடந்தது. ஆனால் இறுதியில் இந்திய ஆளும் வர்க்கத்தை வென்றது அமெரிக்காதான். சில பேரங்களுக்கு மட்டுமேதான் வேறு ஏகாதிபத்தியத்திடம் கையேந்துகிறது. ஆனால் அந்த போட்டியாளன் கூட வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது அமெரிக்கா. இந்த விசயம்தான் கூடங்குளம் குறித்த அரசியலாக இருக்கிறது. இதில் உதயகுமாரின் பங்கு என்ன? இவர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேறு எதற்கும் போராடியது கிடையாது. ஏன் என்றால் அவரது தொழிற்பிரிவினையை தாண்டி அவர் எப்போதுமே சென்றது கிடையாது. அதில் அவர் நேர்மையாகவே இருந்துள்ளார். அதனால்தான் அவர் சுனாமிக்கான என்.ஜி.ஓவிற்கு கூப்பிட்டபோது மறுத்துவிட்டாராம். ஆனால் கிரீன்பார்ட்டி, SACCER என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பை நடத்துவாராம். (The US Engineered “Arab Spring”: The NGO Raids in Egypt) http://www.globalresearch.ca/the-us-engineered-arab-spring-the-ngo-raids-in-egypt. இது சொல்லும் எப்படி உருவாக்குகிறார்கள் என்று. அவர்களுக்கான திட்டம் என்ன என்று. யாருக்காக என்று.
எழுந்தமானத்துக்கு குறை சொல்லக் கூடாது முருகன். அணு மின் உற்பத்தி ஆபத்தானது என்று உலகமே ஏற்றுக்கொள்கிரது.
இல்லை தவறான தகவல். உலகம் முழுவதும் 500 அணு உலைகள் இயங்கிக்கொண்டிருக்கிறது.
மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு, அதாவது 81% இயற்கையில் இருந்து பெறுகிறான். அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்கப்படுகிறது. இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55% , இயற்கையாக கடல், மண் , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15 சதவீதம் மற்றும் இயற்கையாக மனிதன் உடலுக்குள் (Tritium, Carbon-14, மற்றும் பொட்டாசியம்-40) 11 சதவீதம் . மீதம் 19 சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான். அதாவது மருத்துவ சேவைகளினால் 15 சதவீதமும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் (டிவி, கம்ப்யூட்டர், மற்றும் பல) 3 சதவீதமும், மீதம் 1 சதவீதம் அணு மின் நிலையங்கள், ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது. இதில் எதை ஒழிக்கப் போகிறீர்கள் என்பதை கூறுங்கள்.
99 சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம். ஒரு நாளைக்கு நீங்கள் 20 சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280mrem/day கதிரியக்கத்தை பெறுகிறார்கள். நிலக்கரி எரித்து போக உள்ள மீதி உள்ள சாம்பலில் அதிககதிரியக்கம் கிடைக்கும். ஒரு 1000 Mwe அனல் மின் நிலையம் ஒரு ஆண்டில் 4380000 டன் நிலக்கரியைபயன்படுத்துகிறது எனவும் , அதன் மூலம் 320000 டன் சாம்பலும் 6 . 5 மில்லியன்டன் CO2 வாயுவும் ., 44000 டன் SO2 வாயுவும் , 22000 டன் NO2 வாயுவும்வெளியிடப்படுகிறது. அதனால்தான் அனல்மின் நிலையங்களை நீங்கள் மூடுவதற்கு போராடுகிறீர்கள் என்று சொல்வது இல்லை.
அதே போல் பல்வேறு வேதியல் ஆலைகள் யூரியா, கச்சா எண்ணெய் ஆலைகள், பிளாஸ்டிக் ஆலைகள், ஏன் இன்று வரை சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவ முடியாத அளவுக்கு வக்கற்று உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சாயப் பட்டரைகள் ஆகியவற்றை ஒழுங்கப்படுத்தவும், சுத்திகரிக்கவும், பாதுகாப்பினை உத்தரவாதமளிக்கவுமே போராடிக்கொண்டிருக்கிறோமே தவிர அவற்றையெல்லாம் இதுவரை மூடுவதற்கு என்றும் கோரியதில்லை. இவையிலும் பல்வேறு விபத்துக்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. விபத்தின் சதவீதத்தில் எவ்வளவு என்று ஏற்கெனவே குறிப்பிட்டு ஒரு வரைபடத்தை கொடுத்திருக்கிறேன். இருந்தும் மீண்டும் ஒரு முறை அதை தருகிறேன். ஒரு வருடத்திற்கு சிகரெட் பிடிப்பதால் 200 பேரில் ஒருவர் இறக்கிறார். ஆழ் கடல் மீன் பிடிப்பதில் 400 பேரில் ஒருவர், சாலை விபத்தில் 5000 பேரில் ஒருவர், வீட்டிலேயே விபத்தில் 10,000 பேருக்கு ஒருவர், வேலை செய்யும் இடத்தில் 20,000 பேரில் ஒருவர், கதிரியக்கத்தால் 20,000 பேரில் ஒருவர். அதுமட்டுமில்லாமல் மின்சாரம் தயாரிப்பதில் பல்வேறு விசயங்கள் உள்ளது. அதில் ஒரு டெர்ரா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடக்கும் அளவில் அதனுடைய விபத்தின் மதிப்பீடு என்னவென்று பார்ப்போம். புனல் மிசாரம் (நீர்) 883 பேர் விபத்தால் இறக்கிறார்கள். நிலக்கறி (அனல் மின்நிலையம்) 342 பேர் இறக்கிறார்கள். வாயுவிலிருந்து (gas) தயாரிக்கும் மின் நிலையங்களில் 85 பேர், அணு மின்நிலையங்கள் 8 பேர்.
அணு சக்தி குறித்த ஸ்டாலின் மற்றும் மாவோவின் கருத்துகள்: இதை ஆக்க சக்தியாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் அதில் முன்னேற வேண்டிய அவசியத்தையும் பறைசாற்றுகிறார். இது 1945ஆம் ஆண்டு அணு குண்டு வீசப்பட்டது. உலக வரலாற்றில் ஒரு ஆற்றல் அழிவு சக்தியாக அறிமுகமானது இதுவாகத்தான் இருக்கும். அது முதல் அணு என்றால் அழிவு என்ற பொருளில் பொருள் கொள்ளலாயிற்று. ஆனால் நிகழ்வுகள், வரலாறுகள் பின்னுக்குச் செல்ல முடியாது. கண்டுபிடித்த ஆற்றல் இனி தவிர்க்க முடியாத இடத்தினை பெற்றுவிட்டது. அதை அழிவு சக்தியாக விட்டுவிட முடியாது. உலக ஏகாதிபத்திய வாதிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டாலின் தலைமையிலான சோவியத் அரசாங்கம் அந்த அணு சக்தியை ஆக்க சக்தியாக பயன்படுத்துவது என்று முடிவு செய்தது. அணு சக்தி அழிவு சக்தியாக அணு குண்டு முற்றிலும் ஒழிக்கப்படும்வரை அதை சோவியத் வைத்துக்கொள்வது என்ற முடிவும் எடுக்கப்பட்டது. அணு உலை என்றால் அதுவரையில் அணு குண்டு தயாரிக்க மட்டுமே என்று இருந்ததை மாற்றி அது முதல் ஆக்க சக்தியாக பயன்படுத்த முடியும் என்று நிரூபித்தது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு அதை ஆக்க சக்தியாக பயன்படுத்த ஆரம்பித்தது.
இந்த வரலாற்றிலிருந்தே மாவோவும் இனி இதுவே வருங்காலத்தின் ஆக்க சக்தி என்று முடிவு செய்து அதை கற்பதற்கான அவசியத்தையும், சோசலிசத்தை நோக்கி செல்ல, தொழில்மயமாவதற்கான ஒரு ஆக்க சக்தியாக அணு சக்தியை பயன்படுத்துவது என்று முடிவு செய்து அதற்கு முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. அன்று ஏகாதிபத்தியங்கள் மற்ற நாடுகள் அணு சக்தியைக் கைக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்து அணு சக்தியை பயன்படுத்துவதை தடுத்தது. ஆனால் மாவோ அதை ஆக்க சக்தியாக பயன்படுத்த முன்னிறுத்தினார்.
J. V. Stalin
Coexistence, American-Soviet Cooperation, Atomic Energy, Europe
April 9, 1947
Stassen: In the development of the standards of living of the people, mechanization and electrification have been of major significance. The new development of atomic energy is of very great importance to all peoples of the world. I feel that the matter of international inspection, effective controls and outlawing the use for war of atomic energy is of supreme importance to all peoples of the world. Do you feel that there is a reasonable prospect of working out agreements for the long-term future for the peaceful development of atomic energy?
Stalin: I hope for this. There are big differences of views among us, but in the long run I hope we shall come to an understanding. International control and inspection will be established, in any view, and it will be of great importance. The peaceful use of atomic energy will bring great technological changes. It is a very great matter. As for the use of atomic energy for war purposes, this in all probability will be prohibited. It will be a problem in the long run that will be met by the consciences of the people and it will be prohibited.
——————-
மாவோ
நிறைவுரை, மார்ச் 31, 1955
(மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 5 (தமிழ்) பக்கம் 221 & 222)
… வரலாற்றின் புதிய கட்டத்துக்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். பல திட்டங்கள் நம் முன்னே உள்ளன. நாட்டின் தொழில்துறையை சோசலிச மயமாக்குவது, சோசலிச கட்டத்துக்கு கொண்டுசெல்வது, இராணுவத்தை நவீனமயமாக்குவது. அதே நேரத்தில் அணுசக்தி துறையிலும் இத்தகைய முன்னேற்றங்களை எட்ட வேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய பணிகளில் சில தோழர்களே ஆழமாகச் சென்றுள்ளார்கள், பெரும்பாலான தோழர்கள் தமது பணிகளில் இன்னும் ஆழமாக இறங்கவில்லை….
…இப்போதும் தத்துவப் பயிற்சி பெற்ற ஊழியர்கள் பெருமளவு இருக்கின்றார்கள். ஆனால் அது பலம் வாய்ந்த ஒரு தத்துவப் பயிற்சிப் படையாக இல்லை. இத்தகு ஒரு தத்துவப் படையில்லாமல் கட்சியின் இலட்சியங்களான நாட்டின் தொழில் துறையை சோசலிசமயமாக்குவது, தேசத்தை சோசலிச கட்டத்துக்கு கொண்டு செல்வது, இராணுவத்தை நவீனமயமாக்குவது, அணு சக்தித் துறையிலும் இத்தகைய முன்னேற்றத்தை எட்டுவது போன்ற தளங்களில் முன்னேறுவதோ வெற்றி பெறுவதோ சாத்தியமில்லை. எனவே நீங்கள் தத்துவம் பயில வேண்டும். பல தோழர்களுக்கு தத்துவம் படிப்பதென்றாலே பிடிப்பதில்லை, அவற்றை வாசிக்கும் பழக்கமும் இல்லை….
உங்களுக்கு முழுமையான பதில்
http://www.worldwatch.org/system/files/WorldNuclearIndustryStatusReport2011_%20FINAL.pdf
http://senthalamsamaran.blogspot.in/2012/09/80.html
http://senthalam.blogspot.in/2012/10/blog-post.html
ஆகியவை இது குறித்து விளக்கமாக் கூறும்.
திரு முருகன் ” வெறும் மட்டையடி” விவாதத்தில் இருந்து ஒளியுள்ள புதியதளத்திற்கு வாசகர்களை இழுத்துச் செல்லுகிறீர்கள்.
இதைத் தான் நீண்டகாலங்களாக எதிர்பார்த்தோம்.
அணுஉலை மட்டுமல்ல தற்கால அரசியல் நிலை பற்றி அறியவும் ஆவலாக உள்ளோம். அதில் இலங்கை- இந்தியா மட்டும் அடங்காது என்பது உங்களுக்கு சொல்லத் தெரிய வேண்டியதில்லை. அதற்கான ஒரு கட்டுரையை இனியொருவில் எழுதி புதியபாதையை ஆரம்பித்து வைக்கும் படி தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.
மாவோவும் ஸ்டாலினும் சொன்னால் அணு உலைகள் நிச்சயமாக பாதுகாப்பாகத்தான் இருக்கும். என்று தான் நாம் சொந்தமாகச் சிந்திப்போம்.
Mathu, Stalinism only suited and benefitted Mao Zhe Dong. Very soon we should see political pluralism taking shape in China. Mao Zhe Don’s gueriila warfare tactics only suited and benefitted Ho Chi MInch in Vietnam. They will restore Saigon and build a new capital called Ho Chi Mich City close to Hue in the centre.
நீங்கள் சொல்லுகிற சொந்தம் என்பது மார்க்சிய லெனினிய தத்துவ வழிமுறையிலிருந்தே வருகிறது. பூமி உருண்டை என்பது ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். இதில் நீங்கள் சொந்தமாக சிந்திப்பது என்பது மீண்டும் உங்களுக்கு நீங்களே அறிவியல் வழிமுறையோடு சோத்தித்துக்கொள்வதுதான்.
அதே போல் உங்களுக்கு இதுவரையில் இருக்கும் எந்த கருத்தும் ஒன்று ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டதாக இருக்கும், இல்லை நம் முன்னோடி அறிவியல் அறிஞர்களாலும், சமூக புரட்சியாளர்களாலும் உருவாக்கின கருத்துக்கள் இருக்கும். இதை எது சரியானது என்று மார்க்சிய லெனினிய வழிமுறை கொண்டு மீண்டும் மீண்டும் நீங்கள் உங்களையே சோதனை செய்துகொள்வதுதான். அதற்கு முதலில் மார்க்சியத்தையும், லெனினியத்தையும் கற்க வேண்டும். அதுதான் சமூக ஆய்வுக்கான அறிவியல். அதை விடுத்து சுயமாக போகிறேன் என்ற பெயரில் சுயம்புவாக இருக்காதீர்கள். இன்று வரை எயின்ஸ்டீன் சொல்லியுள்ளார் என்றுதான், நியூடன் சொல்லியுள்ளார் என்றுதான் கூறியுள்ளோம். நீங்கள் ஆய்வுத் தளத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த அறிவை பெறவேண்டும். அறிவியலை பற்றித் தெரியாமல் அதை எப்படி நீங்கள் மறுபரிசீலனை செய்யக்கூட முடியாதோ, அதே போல் சமூக வளர்ச்சியின் விதியில் மார்க்சியத்தினை லெனினியத்தினை அறியாமல் நீங்கள் எதையும் செய்யமுடியாது. அதை விடுத்து ஆய்வு செய்தவர்கள் ஏதோ ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் சேவையாளனானகவே வளர்ந்துள்ளார்கள். முதலில் மார்க்சியத்திற்கு மாணவனாக இருப்பதும் பிறகு ஆசிரியராக மாறுவதும் இருக்கவேண்டும். முதலில் கற்பது பிறகு கற்பிப்பது. அதில் தான் உங்கள் சுயம் அடங்கியிருக்கிறது.
திருச்சாபைகளின் வேதங்களை நம்புபவர்களுக்கு பரலோகத்துக்கு பாதை காட்டுபவர்களை ஆவி எழுப்புபவர்களை நம்புகிற மூடர்களுக்கு மார்க்சியமும் விஞ்ஞானமும் விளங்காது மாது
முதலில் உதயகுமார் மற்றும் இதர ண்Gஓ க்கள் குறித்து உண்மையை புரிந்துகொண்டால் அணு உலை குறித்த தொழில்நுட்ப விசயங்களில் முடிவுக்கு வந்துவிட முடியும்……இதே உதயகுமாரின் கிரீன்பார்ட்டி தான் ஈரானிலும் அணுசக்திக்கு எதிராகவும் , ஹோமோ செக்ஸ்க்கு ஆதரவாகவும் போராடிவருகிறது….. பார்க்க ந்ந்ந்.இரநெ-சப்ழ்.ஒர்க்/எஇன்டெx.க்ட்ம்ல் , இங்கு ஒரு உதயகுமார் மாதிரி அங்கொரு ஆட்காட்டி இல்லாமலா போய்விடுவான்……அங்கேயும் மக்களை பீதியூட்டி அணி திரட்டி ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடக்கும் சதிக்குத்தான் அங்கேயும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது……..
MURUGAN’s PROBLEM1. உதயகுமார்: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேறு எதற்கும் போராடியது கிடையாது
MURUGAN’s Problem 2. இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம் :
அதுதான் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், இந்திய அமெரிக்க அணு சக்த்தி ஒப்பந்தம், இந்திய அமெரிக்க பொருளாதார ஒப்பந்தம் என்ற ஒப்பந்தங்களை நேரடியாக அமெரிக்காவின் ஹைட் சட்டத்துக்கு உட்பட்டு போடப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நம் இராணுவத்தை நாயாக நினைத்து ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க சார்பாக காவல் காக்க அனுப்பியது.
therefore Solution from MURUGAN for his prolems is : அணு சக்தியை : வருங்காலத்தின் ஆக்க சக்தி என்று முடிவு செய்து அதை கற்பதற்கான அவசியத்தையும், சோசலிசத்தை நோக்கி செல்ல, தொழில்மயமாவதற்கான ஒரு ஆக்க சக்தியாக அணு சக்தியை பயன்படுத்துவது என்று முடிவு செய்து அதற்கு முன்னுரிமையும் கொடுக்கப்பட்டது. ///
என்னுடைய கேள்வி :
எவ்வாறு இந்த அணு சக்தி, இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் சோசலிசத்தை நோக்கி செல்லும் என்பதை தெளிவு படுத்துக
ஒவ்வொரு உற்பத்தி சக்தியும் எப்படி அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு சேவை செய்கிறதோ அப்படித்தான் இதுவும். இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் ஒழிப்பதில், ஒரு புதியகாலனியாதிக்கத்திற்கான அடிப்படையாக மாறும். அமெரிக்காவின் புதியகாலனி ஆதிக்கத்தை முறியடித்த ஒரு விடுதலைப் பாதைத்தான் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அடிப்படையாகும். இந்த மக்கள் சர்வாதிகாரத்தின் ஆட்சி சோசலிசத்திற்கு மாறிச்செல்ல அடிப்படையாகும்.
ஒன்று உற்பத்தி சக்தி, இன்னொன்று உற்பத்தி உறவு. அணு சக்தி உற்பத்தி சக்தியின் அடிப்படையிலானது. இன்னொன்று உடைத்து எரியவேண்டிய உற்பத்தி உறவாகும். அதிருக்கட்டும். நீங்கள் உற்பத்தி சக்தியினை பற்றிய மதிப்பீட்டினை கூறுங்களேன். அதை மார்க்சியம் எப்படி பார்க்கிறது, அணு சக்தி என்ற உற்பத்தி சக்திக்கு அடிப்படையான விஷயத்தை எப்படிப் பார்ப்பது. உற்பத்தி சக்தியின் மீதான நமது பார்வையை நீங்கள் விளக்கலாமே?