ரனில் விக்கிரமசிங்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவானதில் மகிந்த ராஜபக்ச பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என பரவலாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. ரனில் இற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று (20.12.2011) மகிந்த அரச படைகள் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இன்று அதிகாலை ஒரு மணியளவில் பல வக்கீல்களை இலங்கை அரசு கைது செய்துள்ளது. அதிகாலை ஒரு மணிக்கு மைத்திரி குணரத்னவின் வீட்டுக்குள் நுளைந்த பொலீசார் அவரைக் கைது செய்தனர். சிறீஹால் லக்திலகவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கபே அமைப்பின் அலுவலகம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.