தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றுகூறி, தாம் உட்பட்ட 51பேர் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை அகதியான ரஞ்சினி, அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.
மேல்போர்ன் மனித உரிமைகள் சட்டத்தரணி டேவிட் மன்னேயின் உதவியுடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஏன் மேன்முறையீடுகள் மறுக்கப்படுகின்றன என்பதை விளக்கக்கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையானது, ஆயுட்கால சிறைத்தண்டணைக்கு ஒப்பானது என்றும் சட்டத்தரணி மன்னே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வழக்கில், அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவு பணிப்பாளர், குடிவரவுத்துறை செயலாளர், குடிவரவுத்துறை அமைச்சர் கிரிஸ் பிரௌன் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்படவுள்ளனர்.