தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னையில் கொலைசெய்யப்பட்ட முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையை ஒழுங்கமைப்பதில் கே.பி செயற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக் கொலைக்காக இந்திய அதிகார வர்க்கமும் உச்ச நீதிமன்றமும் நிரபராதிகளுக்குத் தூக்க்குத் தண்டனைத் தீர்ப்பை அறிவித்துள்ளது. ஈழப் போராட்டட்டம் மட்டுமல்ல உலகின் எந்தப் போராட்டமும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரானது என்பதற்கான குறியீடாக தூக்குத் தண்டனைக் கைதிகள் உருவாகியுள்ள நிலையில், குற்றவாளிகள் அரசின் விருந்தாளிகளாக உலா வருகின்றனர்.
தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவரை இந்தியாவிற்கு கொண்டுவர முடியாமல்
போனதையிட்டு இந்தியா இப்போது வருத்தமடைகிறது. போர்பர்ஸ் ஊழல், ராஜீவ் கொலை,
கேபி கைது,….எப்போது இந்த முடிச்சு அவிழும்?. தனக்குத் தெரியாமல் தனது உறுப்பினர்
செய்த கொலை பேரழிவிற்கு காரணமாகி விட்டதால், ‘துன்பியல்’ சம்பவம் என்றார்களோ …
யாரறிவார் சந்திரசாமியே..
ரஜீவ் கொலை செய்யப் பட்டவுடன் எமது ஊரில்ப் புலிகள், தாங்கள் ரஜீவைப் போட்டுவிட்டதாக மார் தட்டி ஆரவாரம் செய்தனர். புத்திஜீவிகள் சொன்னார்கள் ” ரொம்பவும் ஆர்ப்பரிக்க வேண்டாம். நீங்கள் உங்களுக்கே மரணக் குழி வெட்டிவிட்டீர்கள் என்று. ” புலிகள் அவர்களை ஏளனம் செய்து அவமானப் படுத்தினர்.
ராஜீவ் காந்தி கொலையை செய்தது புலிகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அப்படியிருக்க சுப்பிரமணியசுவாமி, சந்திரசாமி, ஜயப்பசாமி என பரபரப்புக்கு செய்திகள் எழுதுவது இந்திய ஊடகங்களுக்கு கை வந்த கலை.
ராஜீவ் கொலை பற்றி புலிகள் அமைப்பிலேயே எவருக்கும் குறிப்பாக அதில் ஈடுபட்டவர்கள் தவர்ந்த எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க கேபிக்கு தெரியும் என்பது ஊடக கற்பனைதான்.
இதெல்லாம் இருக்க EXITE CBI அதிகாரி மோகன்ராஜ் 20 வருடங்கள் கழிந்து வீட்டில் உட்காந்திருந்து யோசித்துவிட்டு வந்து கேபி கதை சொல்கிறார். இவரையெல்லாம் சிபிஜயில் வைத்திருந்தால் வேலைக்காது என்று துரத்திவிட்ட அதிகாரியாகவே இவர் இருக்கவேண்டும்.
இவர் உளவுத்துறையில் இருப்பதிலும் காட்டில் பரபரப்பான புலனாய்வு செய்திபோடும் ஊடகங்களில் போய்சேர்ந்து செய்தி எழுதவே இவர் லாயக்கானவர்.
சும்மா ராஜீவ் காந்தி கொலையை வைச்சு நல்லா அவிச்சு தாழிக்கிறாங்கள்.
மற்றப்பக்கம் விடுதலை ராசேந்திரன் இன்னும் பொரிக்கிறார். ராசேந்திரன் ராஜீவ் கொலை எல்லாத்துக்கும் மேலாய் பிரேமதாசா கொலை வரைக்கும் போட்டு தாழிக்கிறார். இந்த கண்டுறாவிகளை வாசிக்க ஆட்கள் இருக்கும் வரை …..
The biggest achievement India had on Rajiv’s killing is the Jain commission report. That report says, Sandra swami and Subramaniya Swami’s involment needs to be investigated. Then Why the court is not doing it after 20 years…. Subramaniya Swami is an agent…. everybody knows that.
Tigers are used as an instrument – koolip padai –
Are you trying to defend KP, have fun?
சந்திரசாமிக்கும் ராஜீவ் கொலைக்கும் தொடர்பு அம்பலமானால் புலிகள் கூலிக்கு மாரடிதது அம்பலமாகிவிடும் அதனை காப்பாற்ற சிலர் முயலுகின்றனர்/
//////’துன்பியல்’ சம்பவம்///
ராஜீவ் கொலை வம்பியலா? துன்பியலா? எனத் தெரியவில்லை. ஆனால் ராஜபக்சவை ஆட்ச்சியில் இருத்தியது மாதிரி ராஜீவின் கொலையும் எல்லாம் தலைவர் பார்ப்பார் என்ற மேதாவித்தனங்களின் அல்லது தான் தோற்றி தனங்களின் விளைவு. நிற்க ராஜீவின் கொலை புலிகளால் திட்டமிட்டு நடத்தப் பட்டது அல்ல என்பது எனது அனுமானம். ராஜீவை கொலை செய்ய கூலிக்கு அமர்த்தப்
பட்டவர்களே புலிகள். ராஜீவை கொல்ல முனைந்த சக்திகள் பிரேமதாச அரசாங்கத்திடனும் புலிகளுடனும் பேரம் பேசியிருக்க கூடும் மாத்தையா
ராஜீவை கொல்லும் திட்டத்தை காவி வந்திருக்க முடியும் (சிலவேளை அதன் உள் குத்தை அவர் அறித்திருக்க மாட்டார்.) அக்காலத்தில் புலிகளின் தலைமைக்கு எதிராக இந்திய ஸ்ரீலங்கா புலனாய்வுப் பிரிவின் காய் நகர்த்தல்களுடன் மாத்தையா ஆதரவாளர்களால் எதிர் புரட்ச்சி ஓன்று
நிகழ்ந்து கொண்டிருந்தது இச் சந்தர்ப்பத்தில் மாத்தையாவின் முயற்சி வென்றிருக்குமாயின் பிரபாகரன் கைது செய்யப்பட்டு அவர் கொல்லப் பட்டிருப்பார் பின் ராஜீவ் கொல்லப் பட்ட பின் அக் கொலையை பிரபாகரனின் மேல் போட்டு விட்டு மாத்தையா இந்திய இலங்கை
விசுவாசியாக வலம் வந்திருப்பார். KP கொந்தராத்து வேலைக்குரிய தரகராக ஏன் இருந்திருக்க மாட்டார்? … புலிகளின் அழிவரசியலின் நீண்ட கால வடிகாலாகவே KP இருந்திருக்கிறார். பிரபாகரனின் துரதிஸ்டம் பிரபாகரனின் நம்பிக்கையான கூட்டாளிகள்
இவ்வாறானவர்கள் தான். 1990 – 1993 வரை புலிகள் பல மோசமான முன் ஜோசனை அற்ற நடவடிக்கைகளில்
இறங்கினர் மாற்று கருத்தாளர்கள் என பல பலகலை கலக்க மாணவர்கள் புத்தியீவிகள் என்பவர்களை
கைது செய்தனர் மாற்று அமைப்புகளின் முன்னாள் உறுப்பினர்களை கைது செய்தனர் இவ்வாறு ஆயிர கணக்கில் கைத்து செய்யப் பட்டு காணாமல் போகச் செய்யப் பட்டனர் இதற்குள் எனக்கு தெரிந்த பல யாழ் பேராதனை பல்கலைகழக மாணவர்களும் அடக்கம். இக்காலத்தில் தான் முஸ்லீம் மக்களும் புலிகளால் பாதிக்கப் பட்டனர் புலிகள் இவ்வாறு முன் ஜோசனை அற்று நடக்க தூண்டியதற்கு காரணம் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் புலிகளை நிதானமாக சிந்திக்க விடவில்லை. புலிகள் பொதுவாகவே நிதானமாக சிந்திப்பதில்லை என்பது வேறு விடயம்.
ரஜீவ் கொலைக்குப் பிறகு முதலில் கிழக்குக் கடலில் இரண்டு கப்பல்களில் புலிகளுக்குப் பெருந்தொகை ஆயுதம் வந்திறங்கியது. சில வாரங்களிலேயே வடமேற்கு கடலிலும் ஒரு கப்பல் ஆயுதம் வந்திறங்கியது. முதலில் வந்தது அமெரிக்காவில் இருந்து வந்ததாகவும் அது ஒப்பந்தக் கூலி எனவும், பின்னர் வந்தது பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும் அது போனஸ் என்றும் புலிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப் பட்டது. அப்போதான் ஈழத்தமிழர்கள் அறிந்தனர் இது கூலிக்கு நடத்தப்பட்ட ஒரு கொலை என்பதை. அந்தக் கொலைக்கும் எமது போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை ஈழத்தமிழர் தாமதமாகவே உணர்ந்தனர். அது வேறு யாருக்காகவோ புலிகளால்க் கூலிக்கு நடாத்தப்பட்ட கொலை என்பதை புலிகளின் தலைவர் ஒருவரின் வாய் மொழி மூலம் அறிந்தேன். அவர் 15 வருடங்களின் முன் தமிழ் நாட்டில்ப் பெரிய தொழிலதிபராக இருப்பதாக செய்தி அறிந்தேன்.
அந்த பெரு ராச்சியத்தின் இளவரசியையே போட்டுட்டு விபத்து என்கிறார்கள். ராஜிவை போட்டது பெரிய முட்டாள்த்தனம் என சொல்லித்திரியும் அறிவுயீவிகள் நீங்கள். வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத ஓர் அமைப்பு தாம் குற்றம் அற்றவர்கள் என்று எந்த அதிகாரம் உள்ள நீதி வரைமுறைகளுக்குள்ளும் நிருபிக்க முடியாது.