Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ரஜினிகாந்தின் திருட்டுக் காட்சிகளில் மூழ்கிப் போகும் ஈழம் : எம்.ரிஷான் ஷெரீப்

இனியொரு... by இனியொரு...
12/15/2014
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

Rajinikanth-Lingaபணமும், புகழும் தரக் கூடிய போதை ஒருவரை முழுமையாக மாற்றிவிடும். ஒருவர் கொண்டிருக்கும் திறமையை அவை மழுங்கடித்துவிடும். ரஜினிகாந்த் எனும் நடிகரை எனக்குப் பிடிக்கும். அவரது ‘அபூர்வ ராகங்கள்’, ‘முள்ளும் மலரும்’, ‘அவள் அப்படித்தான்’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டத்தில், அவரது நடிப்பின் மீது ஈர்ப்பைத் தரக் கூடியவராக அவர் இருந்தார். பின் வந்த நாட்களில் எல்லாமும் மாறிவிட்டது. அவரும் மாறிப் போயிருக்கிறார்.

சமீப காலங்களில் யதார்த்தத்தை மீறிய சினிமாக்களாக அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அது அவரது விருப்பம். பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், அவரது திரைப்படத்தில் இடம்பெறக் கூடிய திரைக்கதை, காட்சித் திருட்டுக்கக்களை அவரும், அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நேற்று ‘லிங்கா’ பார்த்தேன். அதே பழைய கதை. பலத்த தியாகியாக ரஜினி. காட்சிகளெல்லாமே அவரது முந்தைய படங்களின் பிரதிபண்ணல். சில காட்சிகள் மட்டும் புதிதாக இருக்கிறதே என வியந்தால் அவையும் பிற நாட்டுப் படங்களின் காட்சிகளை அப்படியே பிரதியெடுத்தவை.

இங்கு நான் தந்திருக்கும் காட்சி ஒரு உதாரணம்தான். இயக்குனர் William Wyler இயக்கத்தில் Audrey Hepburn, Peter O’Toole ஆகியோரின் நடிப்பில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த ‘How to Steal a Million’ எனும் பிற தேசத்து ஆங்கில மொழித் திரைப்படத்தின் காட்சியை உருவி, நாயகனையும், நாயகியையும் அப்படியே நடிக்க வைத்து ‘லிங்கா’ எனும் படத்தின் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இங்கு நடிகர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு இக் காட்சி ஏற்கனவே வெளிவந்தது என்ற விபரம் தெரிந்திருக்காது எனக் கருதலாம். ஆனால் இயக்குனர் இப்படியான திருட்டுக் காட்சியைத் தனது திரைப்படத்தில் புகுத்தியிருப்பதானது, அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது. அவரது ஏனைய வெற்றித் திரைப்படங்களும் இப்படித்தான் திருட்டுக் காட்சிகளால் பூர்த்தியானவையோ என எண்ண வைக்கிறது.

RAVIKUMAR_KSஒரு திரைப்பட இயக்குனர் நேர்மையானவராக இருக்கும்பட்சத்தில் தனது திரைப்படங்களுக்காக, தான் பிரதிபண்ணிய அல்லது தன்னைத் தூண்டிய திரைப்படங்களுக்குரிய இயக்குனர்களின் பெயர்களை நன்றிக் குறிப்பில் திரைப்படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட வேண்டும். இக் காலத் தமிழ் சினிமாவில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அண்மையில் வெளிவந்த பாதிக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் இவ்வாறான பிற தேசத்து திரைப்படக் காட்சிகளையும், திரைக்கதையையும் திருட்டுத்தனமாகப் பிரதிபண்ணியவை.

இந்த நிலைமையில், இவ்வாறான திருட்டுத் திரைப்படங்களை ஊடகங்களும், ரசிகர்களும் கொண்டாடுவதுதான் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் நடிகர்களின் கட் அவுட்களுக்கு பாலூற்றுவதும், நடிகைகளுக்கு சிலை வைப்பதுவும் இந்தியாவில் மாத்திரமல்ல. இன்றைய யாழ்ப்பாணத்திலும் இந் நிலைமைதான். ஒரு புறம், ஒருவேளை உணவின்றி அல்லற்படும் உயிர்கள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்க, மறுபுறம் இலட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து ரஜினிக்காக, அவர் பெயர் பொறித்த பெரிய கேக்குகளை வெட்டி அவரது பிறந்தநாளை அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஈழ ரசிகர்கள் சிலர்.

முறையான வழிகாட்டல் இல்லாமல், இன்றைய ஈழத்தில் வளர்ந்துவரும் வருங்காலத் தலைமுறை இப்படித்தான் இருக்கிறது. முன்பு கல்விமான்களும், கற்றறிந்தோரும், உழைப்பாளிகளும் மிகைத்திருந்த பூமி என இலங்கை முழுவதும் பிரசித்தம் பெற்றிருந்தது யாழ்ப்பாணம். இந்தியத் தமிழ் சினிமாக்களையொத்து இன்று வாள் வெட்டுக்களும், அடிதடியும், போதையும், விலைமாதுக்களும், பாலியல் வன்முறைகளும், கொள்ளையும், இந்திய நடிகர்களின் தீவிர ரசிகர்களும் என எல்லோரும், எல்லாமும் விரவிக் கிடக்கும் நிலமாக மாறியிருக்கிறது.

கண்மூடித்தனமாக, கோடிக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுக்காக, சொந்தப் பணத்தினை வாரியிறைத்துச் செலவழித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான். ஒழுங்கான பள்ளிக்கூடங்கள் இல்லாமல் அல்லற்படும் மாணவ மாணவிகளும், பென்சில் வாங்க வசதியின்றி படிப்பை நிறுத்திய சிறுவர் சிறுமிகளும், யுத்தத்தில் அங்கவீனமானவர்களும், ஆதரவிழந்தவர்களும், இருக்க இடமின்றி அவதிப்படுவோரும் இன்னும் உங்கள் ஊரில்தான் இருக்கிறார்கள். உங்கள் இஷ்ட நடிகருக்காக நீங்கள் செலவழிக்கும் இலட்சக்கணக்கான பணத்தை ஒன்று சேர்த்தாலே பெருமளவில் இவ்வாறான அபலைகளுக்கு உதவிட முடியும். முயற்சியுங்கள். பழைய யாழ்ப்பாணமாக, கற்றறிந்த பூமியாக உங்கள் பூமியை மாற்றியமையுங்கள். திரை நடிகர்களைப் போல வெளிச்சத்தில் மாத்திரம் மின்னுபவர்களல்ல; நீங்கள் நல்லவர்கள். உங்களால் முடியும். சிந்தியுங்கள்.

காப்பியடிக்கப்பட்ட ஆங்கிலப்பட ஆதாரம்:
https://www.facebook.com/video.php?v=518560438286766&set=vb.100003984431872&type=2&theater

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
சினிமாக் கூத்தாடிக்கு பிறந்த நாள் காணும் ஈழப் போர் ஈன்ற யாழ்ப்பாண இளைஞர்கள்

சினிமாக் கூத்தாடிக்கு பிறந்த நாள் காணும் ஈழப் போர் ஈன்ற யாழ்ப்பாண இளைஞர்கள்

Comments 1

  1. Kumar says:
    11 years ago

    அறியாமை எனும் கொடிய நோயினால் தமிழ் இனம் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.
     மற்றய மொழிகளில் வெளிவரும் எதையும் அறிவதற்கோ பாா்ப்பதற்கோ, அனுபவிப்பதற்கோ ஒருபோதும் முயலாது கிணற்றுத்தவழைகளாக வாழும் இந்த கூட்டத்திற்கு எப்படி இது புாியப்போகிறது.
    புலம் பெயா்  பல மந்தைகளும் எமது மொழி என்ற ஒன்றை காரணமாக வைத்து தமிழ் நாட்டு குப்பைகளை ரசிக்கின்றன. மற்றய மொழிகளில் வெளிவரும் யதாா்த்தம் கலந்த திரைப்படங்களை ரசிப்பவா்களால் தமிழ் திரைப்படங்களை ஒருபோதும் ரசிக்கவே முடியாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...