ராஜபக்ச பாசிஸ்டுக்கள் வன்னியில் தமது சொந்த நாட்டு மக்களையே அழித்து இனப்படுகொலை செய்ததை விழாவாகக் கொண்டாடினர். இந்த விழாவில் பல்வேறு இராணுவ அணிவகுப்புக்கள் நடைபெற்றன. காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த அணி வகுப்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை அண்டியே முடிவடைந்தது. இன அழிப்பில் ஈடுபட்ட ஐந்தாயிரம் இராணுவத்தினர் மன நோயாளர்களாகவும் இலங்கை அரசின் ஆணைப்படி ஒருலட்சம் மக்களைக் கொன்று குவித்த இராணுவம் என்ற அவப்பெயரையும் சுமந்த இந்தப் பேரணியில் மகிந்த ராஜபக்ச உடப்ட பல அரச பயங்கரவாதிகள் கலந்துகொண்டனர்.