இலங்கை அரசு வன்னியில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலைசெய்து யுத்ததில் வெற்றிகொண்ட இரண்டாமாண்டை இன்று கோலாகலமாகக் கொண்டாடுகிறது. இதனையொட்டி இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில், யுத்தத்தில் மரணித்த வீரம் மிக்க்க இராணுவ்த்தினருக்கு நாம் செய்யும் அஞ்சலியான பிரிவினை வாதத்திலிருந்தும் பயங்கரவாதத்திலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மக்கள்குறித்தோ எஞ்சியிருப்பவர்களின் அவலங்கள் குறித்தோ இச்செய்தியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் மஹிந்த மறுபடியும் தமிழினத்தை சீண்டிப்பார்க்கின்றான். மேலும் மேலும் தனது இனவாத நச்சை தமிழர்கள் மீது காட்டுகின்றான். இவைகளுக்கான தண்டனை விரைவில் இந்த கொலை வெறியனுக்குக் கிட்டும்.