சித்திரவதை, கடத்தப்பட்டுக் காணமல்போதல் போன்ற சம்பவங்கள் இலங்கையில் பரவலாகக் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச சபையின் இவ்வருட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, இலங்கையின் குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்வதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் பொது மக்களைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் கப்பங்கோரல் மற்றும் சட்டவிரோதமாகக் காணமல்போதல் சம்பவங்களுடன் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்பு உள்ளதாகக் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,
குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்குதல், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பங்களிப்புப் போதுமானதாக இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.