இந்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்படுவதையே விரும்பியதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் முன்னை நாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். தவிர, யுத்தப் பிரதேசத்தில் இந்திய அரசின் உளவுத்துறை செயற்பட்டதால் இந்திய அரசிற்கு பொது மக்கள் அழிக்கப்படுவது குறித்தும் தெளிவாகத் தெரிந்திருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் எந்தக் காத்திரமான நடவடிக்கைகளையும் அழிவுகளை நிறுத்துவதற்கு மேற்கொள்ளவில்லை எனவு தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையுடனான உரையாடலின் போதே அவர் இவற்றைத் தெரிவித்தார்.