‘கடந்த முப்பது வருடகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த யுத்தம் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஐனாதிபதியின் துணிச்சலாலேயே இன்று வடக்கு கிழக்கில் ஐனநாயகம் நிலை நாட்டப்பட்டுள்ளது. அந்த ஐனநாயகத்தைக் குழப்புகின்ற வகையில் சில தீயசக்திகள் செயற்படுகின்றன.
இத்தகைய சக்திகளினால் மாணவ சமுதாயம் திசை திருப்பப்படுகின்றது. தமது சுயநல அரசியல்களுக்காகவே மாணவர்களை திசை திருப்பி வருகின்றனர். இவ்வாறானதொரு சம்பவமே பல்கலைக்கழகத்தினுள் இடம்பெற்றுள்ளது.ஆயினும் இறந்து போன உறவுகளை மறக்க முடியாத அதே நேரம் நினைவு கூருவதனை மறுக்கவும் முடியாது. இறந்து போன உறவுகளை வீடுகளில் விளக்கேற்றி நினைவு கூறுவது ஒவ்வொருவரதும் கடமையாகும்’ என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
மகிந்த ‘பயங்கரவாதத்தை முடிவிற்குக்குக் கொண்டுவரும்’ போதில் தான் ஒரு லட்சம் உயிர்களைப் பலியெடுத்தார் என்பது முதல்வர் மறந்துவிட்டார் போலும். மகிந்த பலியெடுக்கும் போதெல்லாம் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் உரிமையை முதல்வர் நினைவுபடுத்தி துணைக்குழு ஜனநாயகத்தை நிலைநாட்டுவார் போலிருக்கிறது.









United Nations put the figure at 7,000. They say you cannot be more Catholic than the Pope. North and East it has to bring home the bacon. Please do not forget the role the USA played to bring the war to am end. 1975. Mayor Alfred Thuraiyappah.
இவாகளைப் போன்ற தமிழர்களால் தான் இன்னமும் தமிழரின் துயர் தீராதிருக்கின்றது. தமது பதவிக்கும் சொகுசு வாழ்விற்கும் பண்டமாற்றாக சிங்களக் காலடிகளை நக்கித் திரிபவர்கள் வேறு எதைச் சொல்வார்கள். இவர்களிடம் இருந்து அப்பாவித் தமிழர் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
Yarl. Please do not start this again. Single Sri Lankan Citizenship. That means rights, previlages and responsibilities.