பொதுஜன ஐக்கிய முன்னணின் ஆட்சியின் கீழ் இயங்கும் யாழ.மாநகரசபையின் நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து மாநகர சபையில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் மன்ற அமர்வுகளை புறக்கணித்தொடங்கியுள்ளன.
மாநகர சபையில் நிலவும் வெற்றிடங்களிற்கு, நியமனங்கள் தொடர்பிலான நடைமுறைகள் பின்பற்றப்படாது ஆட்கள் நியமிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சிகள் இந்த அமர்வுப் புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. கட்சி ரீதியில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும், அண்மைக்காலத்தில் பெருமளவான ஆட்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பெருமளவானோர் நியமிக்கப்பட்டுள்ளதால் மாநகர சபை நிதிநெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மாநகர சபை நிர்வகாம் அடுத்த ஆண்டிலிருந்து அதிக வருமானத்தைப் பெறும் வகையில் மண்டப வாடகைகள், வாகனத் தரிப்பிட கட்டணங்கள், விளம்பரக் கட்டணங்கள் என்பவற்றை அதிகரித்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.