யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தனுள்ளிட்ட இருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர்.
தமக்கான பாதுகாப்பை வலியுறுத்தியே அவர்கள் சரணடைந்துள்ளனர்.2006 முதல் 2008 வரையான காலப்பகுதிகளில் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற வகை தொகையற்ற ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பல இளைஞர்கள் யுவதிகள் தமது உயிரை காத்துக்கொள்ள இவ்வாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலகத்தில் சரணடைந்திருந்தனர்.
அத்தகைய சூழல் திரும்பியிருப்பதான மனோ நிலை யாழில் திரும்பியுள்ளமையே இச்சரணடைதல் மூலம் வெளிப்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினது யாழ்.அலுவலக இணைப்பதிகாரி கனகராஜ் இவ்வாறு இரண்டு மாணவர்கள் சரணடைந்தமை தொடர்பான தகவலினை உறுதிப்படுத்தினார்.அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது பற்றி பரிசலீக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Look like that is a good start. Time to get the Human Rights Commission in there too in Jaffna. People are confused about the post war developments. Dr. Pakiasothy Saravanamuthu mentioned the human beings before all else.