யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவுகள்:
மகிந்த ராஜபக்சவிற்கு கருத்துச் சுதந்திரத்தை விலைபேசும் ஜீவன் ஹூல்








தமிழ் பேசும் மக்களூடன் நெருக்கமாக இருங்கள்
தனது அxxxxxxxகு பதவி கொடுப்பது ரஜபக்செயின் வளக்கம்….இதன் அர்த்தம் அங்கே xxx விழுந்தால் இங்கே கிடைக்கும்…
வாழ்த்துக்கள் மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் வெட்கம் கெட்ட புரபெசரே! இனி யாழ் பல்ககலைக்கழகம் மகிந்தவினதும் அதன் அடிமைகளினதும் சத்திரம்தான். உருப்பட்ட மாதிரித்தான். இனி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டாதாரிகள் அல்ல சிங்கள அரசிற்கு முண்டுகொடுக்கும் முட்டாள்கள்தான் வெளிவருவார்களா? யாழ்ப்பாணத்தில் மானம், ரோசம் உள்ள மறத்தமிழன் இன்னும் இருக்கிறான் கவனம். உமது உபவேந்தர் வேலை அவ்வளவு இலகுவாக இருக்கப்போவதில்லை.
இதுவரை இருந்தவர்கள் எல்லாம் வெட்டிக்கிழித்தது போலவும் இவர்தான் மகிந்தவிற்கு வக்காலத்து வாங்கும் வெட்கம் கெட்ட புரபெசர் போலவும் இருக்கிறது உங்கள் கருத்து.
துரதிஷ்டவசமாக போராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் பல்கலைக் கழகத்திற்காகப் போராடிய தூர நோக்குடைய உபவேந்தர்கள் அங்கே இன்னமும் வரவில்லை.
கைலாசபதி பல பீடங்கள் உருவாகக் காரணமாயிருந்தார். வித்தியானந்தன் பல கட்டிங்களை எழுப்பினார். மற்றப்படி கருத்து வேறபாடுடையவர்கள் அங்கு காலந்தள்ள முடியாத நிலை உருவானது. துரைராஜாவின் காலத்தில் எதுவுமே நடக்கவில்லை – புலிகள் பல்கலைக் கழகத்தின் பேரில் வந்த பொருள்களைக் கொள்ளையாகக் கொடுத்ததைவிட. வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள் அங்கு ஓரங்கட்டப்பட்டார்கள்.
குணரத்தினம் பல்கலைக்கழகம் வன்னிக்கு இடம் மாறுகிறது என்று புலியின் அறிவுறுத்தலின் பேரில் அறிவித்ததை விட எதனையுமே செய்யவில்லை. தனது மகனுக்கு மட்டும் இரண்டாவது சான்றிதழ் கொடுத்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.
பாலசுந்தரம்பிள்ளை தடைப்பட்டடிருந்த கட்டிடங்களைக் கட்டினார். பின்னர் வந்த அனைவரும் டக்ளசின் வால்களும் வாய்ப்பேச்சு வீரர்களுமே.
பேராசிரியர் கூல் தனியனாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நடத்திய போராட்டங்களை மறுப்பதற்கில்லை. அவர் பேச மறந்த மறுத்த சில விடயங்கள் தொடர்பாக எனக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு.
மகிந்த தான் உபவேந்தரை நியமிப்பவர் என்பதை மறந்து விட்டுப்பேசாதீர்கள்.
Great! University and Jaffna society expect lot from Hoole.
Happy to hear this good news. University of Jaffna got a qualified VC. Jaffna’s and University’s future seems bright.
“உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும்
தன் ஆன்மாவை இழந்துபோனால் அடையப்போவது என்ன? –
இது பைபிளில் உள்ள வரிகள்!
இதையே திருமந்திரம் தன்னை அறீயத் தனக்கொரு கேடில்லை=தன்னை அறீயாமல் தானே கெடுகின்றான். என்றூம் தன்னை அறீந்திடும் தத்துவஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்.எனப் பாடும்.
தன் புத்திமதிகளை கேளாது வலையில் விழுந்த புறாக்களை காப்பாற்ற தானும் அந்த வலையில் வீழ்ந்து தங்களை காப்பாற்றிக்கொண்ட புறாவின் கதையை மீண்டும் தமிழினம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.
புறாக்கதையும் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி கதையும் கதையாகவே போயிற்றூ.
விரக்தியின் எல்லை முயற்சிக்கு தடையாகவே இருக்கும். அதனைவிட சமாதிநிலை மேலானது.
Prof deservs this, a man who had the guts oppose the LTTEs tyranny-
Prem