வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற போது அது குறித்து உலகம் முழுவதும் பரந்துள்ள மனிதாபிமானிகளையும், ஜனநாயக சக்திகளையும் போராட்ட சக்திகளையும் அணுகுவதற்கு புலிசார் தலைமைகள் மறுத்துவிட்டன. பிரிதானியாவில் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு போன்றன லட்சக்கணக்கான தமிழ் மக்களைத் தெருவிற்கு அழைத்துப் போராட்டம் நடத்தின..
இந்தப் போராட்டங்களுக்கு வந்த மக்கள் தொகையைப் பயன்படுத்தி இக்குழுக்களின் தலைமை மட்டத்திலிருந்த பலர் பிரித்தானியாவில் வாக்குப் பொறுக்கும் கட்சிகளோடு தமது செல்வாக்கை வளர்த்துக்கொண்டனர். அவர்களைப் போராட்டங்களைக்கு அழைத்துத் தமிழர்களை உணர்ச்சிவசப்படுத்தினர். இறுதியில் நட்சத்திர உணவகங்களில் பிரித்தானிய சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளோடு விருந்துண்டு மகிழந்தனர். போராட்டத்திற்கு என்று மக்கள் வழங்கிய பணத்தை இவர்கள் தமது செல்வாக்கை பிரித்தானி அரசியல் வாதிகளோடு வியாபாரப் பேரம் பேசுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டனர்.
பிரித்தானியவில் மட்டுமல்ல உலகில் மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல யாரும் இந்தப் போராட்டங்கள் குறித்து அணுகப்படவில்லை. இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் நடத்திய போராட்டம் யாருக்கும் அழுத்தங்கள் வழங்கவில்லை. பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்துகொண்டே தமிழர்களுக்கு ஆதரவு என்று நாடகமாட ஒருலட்சம் அப்பாவிகள் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனோடு கொல்லப்பட்டனர்.
ஈராக்கிற்கு பிரித்தானியா படை அனுப்பியபோது ஒரு மில்லியன் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். அழிவுகள் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டன. இதே போல பல முன்னணிப் போராட்டங்களில் ஐரோப்பிய மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இவர்கள் மத்த்தியில் ராஜப்கச அரசுக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும் எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை. இலங்கை அரசிற்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கபடுவதில்லை. இவர்களை தமிழ்த் தலைமைகள் அணுகுவது கூடக் கிடையாது. தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஜனநாய முற்போக்கு அணிகள் இவர்களை அணுகும் போதெல்லாம் ஒன்றைக் கேட்கிறார்கள். வாக்குப் பொறுக்கிகளோடும் இலங்கை அரசிற்கு ஆயுதம் வழங்கும் அரசுகளோடும் நீங்கள் உறவு வைத்துக்கொள்ளும் போது எப்படி நாங்கள் உங்களோடு இணைந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.
சாரிசாரியாக மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் உலக மக்கள் அபிப்பிராயத்தை உருவாக்கி அவர்களோடு இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க மறுத்து அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் இன்றெல்லாம் மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் அவ்வாறு போராட்டத்தை வேறு வழிகளில், வெற்றிபெற்ற பாதைகளில் முன்னெடுக்க முயலும் போதெல்லாம் கூட தமிழ்த் தலைமைகள் அதற்குத் தடையாகிறார்கள். போராட்ட சக்திகளை, ஐரோப்பிய அரசிற்கு அழுத்தம் வழங்கவல்வர்களை அணுகும் போதெல்லாம் தமிழர்களை கொலைகார அரசியல் வாதிகளோடு கைகோர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பவாதிகளாகவே கருதுகிறார்கள்.
எங்காவது போராட்டம் நடத்தினால் கூட தமிழ மக்களை வைத்தே தமிழ்த் தலைமைகளின் போராட்ட அரசியல் நடத்தப்படும். அவை எந்தப் பெறுமானமும் இல்லாமல் செத்துச் சிதறிவிடும். மக்கள் விரக்திக்கு உள்ளாவர்கள். ஒருலட்சம் சில ஆயிரங்களாகக் குறைவடைந்து சில நூறுகளாகி, இறுதியில் அழிந்து விடும்.
புலிசார் தலைமைகள் அதே தோற்றுப் போன வழிமுறைகளை இன்னும் விட்டபாடில்லை. பான் ஆபிரிக்கன் வோய்ஸ் என்ற லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பும், கிரேட் அன்ரெஸ்ட் குறூப் என்ற வேல்சை மையமாகக் கொண்ட அமைப்பும். மே 26 இயக்கம் என்ற பிரிட்டிஷ் ஐல்ஸ் ஐ மையமாகக் கொண்ட அமைப்பும், வேல்ஸ் பகுதியைச் சார்ந்த டெமோகிரசி அன்ட் கிளாஸ் ஸ்ரகிள் என்ற அமைப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
பிரித்தானியாவில் ஒடுக்குமுறைக்கு எதிரான பல போராட்டங்களை நடத்திய இவர்களை மட்டுமன்றி பிரித்தானிய பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களையும் இனியொரு சார்பில் அணுகியிருந்தோம். நிலைமைகள் ஆழகாமத் தெளிவுபடுத்தன் பின்னர் நேர்மறையான பதில்களே அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொண்டோம்.
இதன் முதல் கட்டமாக நான்கு அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை அனைத்து செய்தி ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை யாரும் இது வரை பிரசுரிக்கவில்லை. தேசியத்தைக் கையகப்படுத்தியதாகக் கூறும் எந்த தேசிய மஞ்சள் பத்திரிகைகளும் இதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அறிக்கை வெளியிட்ட அமைப்புக்கள் தமது வியாபார எல்லைக்குள் இல்லை என்பதே இவர்களின் துயரம்.
இந்தத் தடைகளை மீறி போராட்டம் புதிய நிலைகளை எட்டுவதற்கான புதிய பாதையில் பயணிக்க வேண்டும். தவறினால் கூட்டுச் சதிசெய்யும் தேசிய வியாபாரிகளின் கைகளில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும்.
நான்கு அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையின் ஆங்கில மூலம்:
No Peace without Justice – Support the Jaffna Students defend Tamil rights : March 26th Movement, Democracy and Class Struggle, Pan- Afrikan Voice, Great Unrest Group
We strongly condemn the Sri Lankan Military repression of a student Demonstration in Jaffna on Remeberance Day.
The continued rule by the Sri Lankan Military in Tamil areas is an insult to democracy as are the Sri Lankan Governments continued Land Grabs of Tamil Lands.
There can be no peace without justice.
We urge the people of Sri Lanka and our Tamil comrades to reject bourgeois nationalism with its pro imperialist movements and especially Indian expansionism .
The nature of any genuine nationalist movement should be anti capitalist and anti-imperialist.
The Sri Lankan Tamils fight for their self determination and should join the worlds anti-capitalist anti-imperialist movements.
Capitalist Global Imperialism planned the Tamils Genocide hand in hand with Indian expansioniism.
They fed Sri Lankan fascist president Rajapaksha.
We urge the Tamils who have a social conscience in the diaspora to take your place in the anti-imperialist movement thorough out the world.
.
We urge the Left in Sri Lanka to also reject the anti marxist bourgeois cosmopolitanism that rejects the right of self determination for the Tamil people.
With a new anti imperialist revolutionary leadership coming forward in the Tamil community and the Singhalese Left rejecting bourgeois cosmopolitanism then a new chapter can be written in Sri Lankan history with the unity and harmony of all its people’s.
Without class struggle against imperialism and its local cliques the Tamils will never achieve self determination and the Singhalese Left without rejecting bourgeois cosmopolitanism create their own barrier to a successful Tamil/Singhalese struggle for a better life for all working people..
Smash the twin evils of bourgeois cosmopolitanism and bourgeois nationalism – forward to a Socialist Republic of Sri Lanka
March 26th Movement – British Isles
Democracy and Class Struggle – Wales
Pan- Afrikan Voice – London
Great Unrest Group – Wales
Most of the media’s are biased and not genuine.One must do a good website which
should tell the truth only and analyse the message before they publish.Also give preference to students who are the next generation to take up the strugle.
That is right Skantha. After 1983 you have to put a Sri Lankan Tamil diaspora touch to everything and anything in this whole world.
தகவல் அனுப்பப்பட்ட தரவுகளுடன்,இந்தச் செய்தியை போட மறுத்த இணைய வியாபரிகளின் பெயர்களை வெளியிட ஏன் தயக்கம்?
இதனை எழுதும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதனை முதலில் திருப்பிப் பாருங்கள். சும்மா சும்மா தமிழ் அமைப்புக்களை குறை கூறுவதனை நிறுத்தவும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்குவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இதனையொட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அமெரிக்கா போன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் யுத்தத்திற்காக அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிராந்தியத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிக்காக குறித்த நோபல் பரிசினை வழங்குவதற்கு தீர்மானித்ததாக நோபல் சமாதான பரிசுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
படை பலத்தை பிரயோகித்து, அமைதியை நிலைநாட்டுவது நோபல் பரிசை பெற்றுக் கொள்வதற்கான தகைமையல்லவென விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென்னாபிரிக்காவின் நோபல் பரிசு பெற்றவரான பேராயர் பெஸ்மென் டுட்டு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் முக்கியமானவராக திகழ்கின்றார். இன்றைய தினம் ஒஸ்லோ நகர மண்டபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் பெரும்பான்மையோரின் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்காலத்தில் நோபல் சமாதான பரிசுக்கு சர்வதேச ரீதியில் நிலவும் கௌரவம் குறையுமென விமச்கர்கள் தெரிவிக்கின்றனர்.