வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்தசீலன் கதிர்காமர் எழுதிய யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் மற்றும் ஹன்டி பேரின்பநாயகம் நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பு ஆகிய நூல்களின் அறிமுக விழா நாளை 11.09.2013 புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர் கழகமும் கொக்குவில் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இவ் விழாவிற்கு பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைமைதாங்கவுள்ளதுடன் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வருகை தரவுள்ளார்.
வரவேற்புரையினை யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர் கழகத்தினைச் சேர்ந்த பி.ஜெனிட்டா அற்றுவார். தோடந்து தலைமையுரையினை பேராசிரியர் புஷ்பரட்ணமும் வாழ்த்துரைகளை துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் என்.ஞானகாந்தனும் ஆற்றுவர். ஹன்டி பேரின்பநாயகம் ஓர் அனுபவப் பகிர்வு என்ற தலையங்கத்தில் முன்னாள் கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபரும் ஹன்டி பேரின்பநாயகத்தின் மாணவனுமான அ.பஞ்சலிங்கம் வழங்குவார்.
நூல் அறிமுக உரையினை யாழ் பல்கலைக்கழக பட்டப் பின் படிப்புக்கள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.சத்தியசீலன் ஆற்றுவார். ஆய்வுரையினை முன்னாள் தினகரன் பத்திரினையின் பிரதம ஆசிரியர் சிவாசுப்பிரமணியம் மேற்கொள்ளவுள்ளதுடன் பதிலுரையினை நூல் ஆசரியர் சாந்தசீலன் கதிர்காமரும் நன்றியுரையினை வரலாற்று மாணவர் கழக பொருளாளர் எஸ்.அச்சுதனும் ஆற்றுவார்.
வரலாற்றினை ஆவணப்படுத்தியுள்ள இந் நூல்களின் அறிமுக விழாவிற்கு ஆர்வலர்கள் சகலரும் அழைக்கப்படுகின்றனர்.
It was great knowing Dr. Seelan Kadirgamar those days.His spouse was an English Instructor. Then urged us not to leave. Then if we do go abroad they wanted us to come back. My heartfelt best wishes. I will try to get a copy later.