கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் போராடி மரணித்த போராளிகளை நினைவு கூரும் நாள் மாவீரர் நாள் என்று அழைக்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் மக்கள் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதற்கான இந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் வர்த்தக நோக்கங்களுக்ககவும் பயன்படுத்தப்படுகிறது. இன்று மாவீரர் நாளன்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் புலனாய்வுப் படைகளதும் இராணுவத்தினதும் பிரசன்னம் அதிகமாகக் காணப்பட்டது. மரணித்தவர்களை நினைவுகூரும் இந்த நிகழ்விற்குக் கூட இலங்கை அரசு அனுமதி மறுத்து ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
இதன் மறுபக்கத்தில் இவ்வாறான சிறிய உணர்வு பூர்வமான நிகழ்வுகளைக் கூட புலிகளின் மீட்சியாகப் பிரச்சாரம் செய்து வாக்குப் பொறுக்கிக்கொள்கிறது ராஜபக்ச அரசு. இந்த நிலையில் தமது அடிப்படை உரிமையன இறந்தவர்களை நினைகூரும் நிகழ்வை யாழ்;பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சிலர் மொழுகுவர்த்தி ஏற்றி நடத்தினர். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட நிழல் படம் இணைக்கப்பட்டுள்ளது.