இன்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் அழைப்பின் பேரில் மாணவர் பிரதிநிதிகள் பல்கலைக்கழகத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தினர். பேச்சுக்களின் இறுதியில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரை தமது பகிஸ்கரிப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
அதே வேளை யாழ்ப்பாண இராணுவத் தளபதி மாணவர் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை அவர்கள் நிராகரித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழ்ப் பகுதியில் பேசப்பட்டும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் மாணவர்களின் உறுதிமிக்க நிலைப்பாடு தமிழ்ப் பேசும் மக்கள் மத்தில் நம்பிக்கை தருகிறது.