யாழ்.மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு அடி எட்டு அங்குல நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்.
அதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் முறை 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இதன்காரணமாகவே ஒரு அடி 8 அங்குலமான வாக்குச் சீட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை (திகாமதுள்ள) மாவட்டத்துக்குப் போய்ப் பாருங்கள்.
வடக்கு-கிழக்கில் இம்முறை வாக்குகள் சிதறும் சூழ்நிலை:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்கு கள் பல்வேறு கட்சிகள், அக் கட்சிகளில் பிளவுபட்டு நிற்கும் அணிகள் மற்றும் மக்கள் அபிமா னம் பெற்ற முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்றவாறு பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு கள் அதிகளவில் அமையும் பின் புலம் தொடர்பாக ஆராய்கிறது இக்கட்டுரை.
பிரியந்த ஹேவகே “லங்காதீப’ பத்திரிகையில் எழுதிய கட்டுரை யின் தமிழ் வடிவம் இது.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் கருமம் கடந்த 26 ஆம் திகதியுடன் முடிவுற்றது. அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு விகிதாசாரத்தின் அளவுப் பிரமாணத்தைப் போன்று அல்லாதுவிடினும் இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கின் வாக்காளர்கள் எவ்வித பிரதிபலிப்பை வழங்கக் கூடுமென்பதில் அதிகரித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வினா குறித்தே அதாவது வடக்கு , கிழக்கின் வாக்கு அடிதளம் எவ்விதம் அமையப்போகிறது என்பதே சர்வதேசத்தின் உன்னிப்பான அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது.
அதாவது 2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் இடம்பெற்ற வேளையில் வடக்கு, கிழக்குப் பகுதியின் பெருமளவு பிரதேசங்களின் நிர்வாகம் விடுதலைப் புலிகள் அமைப்பின் வசத்திலேயே இருந்தது. அன்றைய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக் கட்சியின்கீழ் பகிரங்கமாகவே விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதியாகவே களமிறங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பும் கூட, தமது குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்குமாறு தமிழ்மக்களுக்குப் பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்து நின்றது.
மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியாவுடன் வன்னி மாவட்டம் மற்றும் கிளிநொச்சியும் உள்ளடங்கும் விதத்தில் யாழ். மாவட்டமும் சேர்ந்தது என வட மாகாணம் அமைகிறது. கிழக்கு மாகாணமானது, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல (அம்பாறை) ஆகிய மாவட்டங்களுக்குரிய தேர்தல் தொகுதிகளைக் கொண்டதாகும். கடந்த 2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 09 ஆசனங்களுள் 8 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் என்றவாறு வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 20 ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைக்குக் கிட்டியது. அதற்கு மேலதிகமாக தேசியப் பட்டியலிலிருந்து இரண்டு ஆசனங்களையும் ஈட்டிக்கொள்வதற்கு அது திறன் பெற்றிருந்தது.
ஆனால், இன்றைய நிலைப்பாடு அன்றைய நிலைக்கு முற்றிலும் மாறானதாகும். தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப்பட்டு அதன் சுவடே அற்றுப் போயுள்ளது. ஆனாலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தயவால் நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் அரசியல் களத்தில் உள்ளது.
இன்றைய பொதுத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் அதாவுல்லா அணி, ஈ.பி.டீ.பி., ஈரோஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஆனந்தசங்கரியின் அனுசரணையுடன் களமிறங்கியுள்ள கூட்டணியானது 2004 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பலமானதொரு நிலையைக் காட்டி நிற்கிறது.
வன்னி மாவட்ட வேட்புமனுத் தாக்கலினுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் ரிஷாத் பதியுதீன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவநாதன் கிஷோர் மற்றும் கனகரத்தினமும் உள்ளடங்குகின்றனர். ரூபவாஹினி சேவையின் ஊடகவியலாளரொருவராகப் பணியாற்றிய உபுல் பாலசூரியவும் வன்னி மாவட்ட வேட்புமனுவில் உள்ளடங்குகிறார்.
யாழ். மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களுள் டக்ளஸ் தேவானந்தாவும் உள்ளடங்குகிறார். திருகோணமலையின் வேட்புமனுவில் சுசந்த புஞ்சி நிலமேயும் உள்ளடங்குகின்றார். வடக்குக் கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி எவ்வாறான போதிலும் கடந்த தடவையை விட நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.
ஐ.தே.கட்சியும்கூட வடக்குக் கிழக்கில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள முன்னணிக் கட்சியொன்றாகும். இங்கு, ஐ.தே.கட்சியின் முக்கிய பலமாக இருப்பது அவர்களது பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸேயாகும். விசேடமாக வடக்குக் கிழக்கில் வாழும் பெருமளவு முஸ்லிம் மக்களின் பலம் முஸ்லிம் காங்கிரஸூக்கு உள்ளது.
அதேவேளை, 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஆறு ஆகும். இத்தேர்தலில் ஐ. தே.கட்சியின் யாழ். மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவியான விஜயகலா மகேஸ்வரனும், வன்னி மாவட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னணிப் பாத்திரமொன்றான நூர்தீன் மசூரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும்: http://www.uthayan.com/Welcome/afull.php?id=334&L=T&1269005751
தமிழர் பிரதிநிதித்துவம் என்பது தமிழ்ப் பா.உ. ஒருவரைத் தெரிவு செய்வது மட்டும் அல்லவே!
அவர் உண்மையாகவே தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றுக்காகப் போராடா விட்டால் யாரை அனுப்பியும் என்ன பயன்?
இது தான் கடந்த அரை நூற்றாண்டின் கதை.
கிழக்கில் பொது அணியாக நிற்க விடுக்கப்பட்ட வேண்டுகோளைநிராகரித்தவர் த.தே.கூ. தலைவர்.
பா.உ. 22 பேரில் 11 பேரை ஓரங்கட்டியவரும் அவரே.
தமிழர் ஒற்றுமை பற்றி யார் உரக்கக் கூவுகிறாரோ அவரே தமிழர் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கிறார்.
களவெடுத்தவணெ “கள்ளன் கள்ளன்” என்று கூவுவது போல!
இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்தால் சில அரசியல்வாதிகளுக்கு சீலையாகக் கட்டக் கொடுத்திருக்கலாம்.