வடபகுதி மக்களினதும் தமதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கிலிருந்து சென்ற ஊடகவியலாளர் குழுவொன்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் கோனார் மயில்நாதன் தற்போதைய யாழ்ப்பாண நகரத்திற்குள் காணப்படுவது விசித்திரம் மாத்திரமே, கிராமப்புறங்களில் இவ்வாறான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கிறது என்ற முடிவுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறும் நடைமுறை தொடர்ந்தும் இருப்பதாகவும் இது யாழ்ப்பாண மக்களின் கருத்து கூறும் சுதந்திரத்தையும், தகவல் அறியும் உரிமைக்கும் பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கின் வசந்தத்தின் மூலம் வடபகுதிக்கு எவ்வித அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாண பத்திரிகை ஆசிரியர்கள் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட முடியாது சுய தணிக்கைக்குள் சிக்கியிருப்பதாகவும் மயில் நாதன் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடபகுதி மக்களுக்கும் அடிப்படையாகத் தேவைப்படுவது சுதந்திரமும், தமது கலாசாரத்தின்படி வாழ்வதற்கான உரிமைகளே அன்றி தேர்தலுக்குத் தேர்தல் அரசியல்வாதிகளைத் தெரிவுசெய்யும் உரிமையல்ல என வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜேசுந்தரம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
குடாநாட்டு நிலைமைகளில் ஒன்றும் வியப்பில்லை என்றாலும், பத்திரிகைச் சுதந்திரம் பற்றீப் பேசுகிற தமிழ் ஊடகங்களின்நடத்தையைப் பற்றியும்நாம் மவுனமாக இருக்க இயலாது.
குறிப்பாக “உதயன்” தமிழர் தேசியக் கூட்டணிச் செய்திகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் அற்பப் பங்கேனும் மாற்றுக் கட்சிகள் பற்றிய மக்கள் அறியப் பெறுவதற்குக் கொடுப்பதில்லை.
ஈ.பீ.டீ.பீ. செய்திகள் பயத்தாலெனினும் சிறிது வந்தாலும் பிற பெருமளவும் இருட்டடிப்புக்கு உள்ளாகின்றன.
சம்பந்தன் மாற்றுக் கட்சிகள் பற்றி நியாயமின்றித் தொடுக்கும் தாக்குதல்கட்கு பதில்கள் வழங்கக வாய்ப்பேதும் இல்லை.
இந்த மாதிரிப் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகத் தான் நாம் போராட வேண்டுமா?
அரசாங்கம் தனது ஆதிக்கத்தைப் பேணுவதை எதிர்ப்பது சில ஏடுகல் குறிப்பிட கட்சி ஒன்றன் நலனைப் பேனுவதற்குக் கை கொடுப்பதற்கக மட்டுமா?
பத்திரிகைச் சுதந்திரத்துக்காக நாம் குரல் கொடுக்கும் போது, பத்திரிகைகட்குள்ளும் கருத்துச் சுதந்திரம் பற்றி நாம் விரிவாக விமர்சிக்க வேண்டியுள்ளது.
சரியான கருத்துக்கள் மக்களை அடைவதை தடுப்பதில் முன்னின்று செயற்பட்ட யாழ் பத்திரிகைகள் பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசுவது விசித்திரம் தான். முன்னமே மக்களை குறைந்த பட்சம் சரியான தகவல்களுடன் வழிநடத்தியிருந்தால் தமிழ் இனத்திற்கு இந்த நிலை வந்திருக்காது. இப்ப என்ன வேண்டுமாம்?
இங்கிலாந்தில் ஈவினிங்ஸ்டாண்டட் கென் லிவிங்ஸ்டனை கவுழ்த்ததை அறீவீர்கள்.இன்னும் பல பத்திரிகைகளூக்கு அரசியல் முகங்கள் உண்டு.அப்படி இருக்கும் போது யாழ்ப்பாண பத்திரிகைகள் மீது பூதக்கண்ணாடி வைப்பது அழகல்ல சிவா.
இப்போது பொது மக்களின்நெருக்குதலால் புதிய-ஜனநாயகக் கட்சியின் அறிக்கை உதயனில் வெளிவந்தது. என்றாலும் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரம் பெறும் விளம்பரத்தில் சிறு பங்கேனும் பிற கட்சிகட்கு இல்லை.
மாவை சேனாதிராஜாவை ஒரு பொதுக் கூட்டத்தில் மக்கள் வாட்டி எடுத்த கதை எல்லாம் ஏடுகளில் வராது. போட்டி அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள் மட்டும் கொட்டை எழுத்தில் வரும்.
கென் லிவிங்ஸ்டனை கவ்ப்ழ்த்தது தனியே ஈவினிங் ஸ்டாண்டட் அல்ல. அவருடைய கட்சித் தலைவருக்கும் அதில் பங்குண்டு.
அங்கே ஒரு ஊடகநிறுவனம். யாழ்ப்பாணத்தில் எல்லா நிறுவனங்களும். இதை மூடிக்கட்டுவது தானா ஜனநாயகம்?
Secret list reveals government’s media hit list
Posted: 15 March 2010
Journalist included in leaked secret service memo
A leaked list – believed to be compiled by the Sri Lankan intelligence unit – has revealed the names of 35 leading journalists and NGO officers of interest to the country’s secret services.
The list then grades each of them according to their importance to the intelligence services.
Amnesty International fears that the leak was a deliberate move by the government to intimidate and harass journalists in the country.
Mike Blakemore, Media Director of Amnesty International UK, said:
“Such a blatant leak can have only one purpose and that is to intimidate those individuals on the list and deter anyone from speaking to them.
“Journalists are often at the forefront of protecting and defending individuals’ human rights. It is their bravery that can help expose abuses and bring them to an end.
“Sri Lanka needs to respect media freedom and allow human rights defenders to go about their work freely and without harassment.”
Amnesty International is calling on all its supporters to write to the Sri Lankan authorities expressing their concern for the safety and well-being of the 35 people on the list.
For more:
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18676
PLEASE WRITE IMMEDIATELY in English, Sinhalese, Tamil, or your own language:
•expressing concern for the safety and wellbeing of Dr. Saravanamuttu, J.C. Weliamuna and all those named on the list referred to in Lankanewsweb on 2 March;
•asking the Sri Lankan authorities to ensure that human rights defenders are able to continue their legitimate work without fear of harassment or intimidation.
PLEASE SEND APPEALS BEFORE 20 APRIL 2010 TO:
President
His Excellency the President
Mahinda Rajapaksa
Presidential Secretariat
Colombo 1, Sri Lanka
Fax: +94 11 2446657
Salutation: Your Excellency
Inspector General of Police (IGP)
Mahinda Balasuriya
New Secretariat
Colombo 1
Sri Lanka
Fax. +94 11 2 440440
Email: igp@police.lk
Salutation: Dear Inspector General
Also send copies to diplomatic representatives of Sri Lanka accredited to your country. Please check with your section office if sending appeals after the above date.
For more:
http://www.amnesty.org/en/library/asset/ASA37/005/2010/en/1c012c1a-bb4f-40c7-b293-2115e505a8b7/asa370052010en.html
சாவகச்சேரி,மடத்தடி என்னுமிடத்தில் நேற்று முன் தினம் வர்த்தகர் ஒருவரின் மகன் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்கு மூன்று கோடி ரூபா பணம் வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர் க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவராவார்.
வடபகுதியில் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின் இடம்பெற்றுள்ள முதலாவது கடத்தல் சம்பவம் இதுவென்றும் யாழ்ப்பாணத்தகவல்கள் கூறுகின்றன.
யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு உதவுவார்களேயானால் வரவேற்கக் கூடிய விடயமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
வீரகேசரி இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனைத் தெரிவித்தார்.
கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்கள் தவிர ஏனைய பகுதிகளில் இரவு பகல் பாராமல் எந்த வேளையிலும் எந்தப் பகுதிக்கும் சென்று இலங்கையர்கள் சென்றுவரலாம். யுத்தம் காரணமாக வெளிநாடு சென்றவர்கள் இனம்,மதம்,மொழி பிரிவினைகளைத் தவிர்த்து வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவார்களேயானால் வரவேற்கத் தக்கதாகும் என்றார்
முதலில் நம் ஊடகத் துறையினர் தமது உரிமைகதாகக் குரல் கொடுப்போரை மதித்து நடக்கட்டும்.
ஊடகங்கள் மீது வன்முறையும் மிரட்டலும் அரசாங்கம் மட்டுமே செய்ததல்ல.
போராளிக்க் குழுக்கள் எல்லாரும் செய்தது தான்.
தமிழரசுக்க் கட்சியும் ஊடக சுதந்திரத்தின் நண்பனல்ல.