இன்று இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம் சார்ந்த பிரதேசங்களில் சாதீ ஒடுக்குமுறை புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. போரின் பின்னர் ஆங்காங்கே வெளித்தெரியும் அதிகார அமைப்புக்களைக் கையகப்படுத்திக் கொள்வதில் சாதி ஒடுக்குமுறையின் கோரம் வெளிப்படுகிறது. யாழ்ப்பாண உயர் சாதி வேளாள பிரிவினர் சமூகத்தின் எல்லைகளை கலாச்சாரம் என்ற பெயரில் இறுக்கப்படுத்திக்கொண்டு தம்மை அதிகார மையத்தின் உச்சியில் அமர்ந்துகொள்ள அலை மோதுகின்றனர்.
இந்த ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் புலம்பெயர் நாட்டு ஆதிக்க சாதியினர் தமது உபரிப் பணபலத்தால் தமிழ் சமூக எல்லைகளை இறுக்கப்படுத்துகின்றனர். கேட்டால் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்க முயலும் கலாச்சாரம் என்பது ஒடுக்குமுறையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அதிகார அமைப்பாகும்.
பழமைவாத நிலப்பிரபுத்துவ அமைப்பினை தேசியத்தின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பாதுகாக்க முயலும் ஆதிக்க சாதியின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான குரல் இன்று முன்னெப்போதைக்கும் அதிகமாக அவசியமாகின்றது.
புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.
இதன் மறுபுறத்தில் சாதி ஒடுக்குமுறையைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று இலங்கை அரச பாசிசத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலித் வியாபாரிகளையும், சாதிக் சங்கங்களையும் இனம்கண்டுகொள்ள வேண்டும். இனப்படுகொலை அரசின் செல்லப் பிள்ளையாகிப் போன சாதிச் சங்கங்கள் சாதீய முரண்பாடுகளை ஆழப்படுத்தி தமது அரசியல் வியாபார நிகழ்ச்சி நிரலில் இணைத்துகொள்கின்றன.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தலித்தியம் போன்ற சாதிச் சங்க தத்துவங்களோடு உலகம் முழுவதும் உலாவரும் இன்னொரு மேட்டுகுடிக் கும்பலுக்கு சாதி ஒடுக்குமுறை என்பதே பொன்முட்டையிடும் வாத்து. சாதி ஒடுக்குமுறைசாகடிக்கப்படாமல் இருந்தாலே இவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.
இந்த நிலையில் வடமாகானத்தின் வடக்கு மூலையில் சாதி ஒடுக்குமுறைக்கு பெயர்பெற்ற அவமானகரமான பகுதிகளில் உடுப்பிட்டியும் ஒன்று. குட்டிமணி, தங்கத்துரை, பிரபாகரன் போன்றோரின் சொந்த இடமான வல்வெட்டித்துறையின் எல்லையில் ஆரம்பிக்கும் உடுப்பிட்டி கணசமான அளவு தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொண்டுள்ள பகுதியாகும்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பது உயர்சாதி வேளார்கள்களின் பெரும்பான்மையாக குழந்தைகள் கல்விக்கற்கும் பாடசாலை. அந்தப் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கு திருமதி நவமணி சந்திரசேகரம் என்ற ஆசிரியை அதிபாராக நியமிக்கப்பட்டார். அதிபராவத்ற்குரிய முழுமையான தகுதியையும் கொண்ட இவர் இதே கல்லூரியின் பழைய மாணவி என்பது மட்டுமல்ல நிர்வாகத் திறனுள்ளவர்.
திருமதி நவமணி அதிபர் தரத்திற்கு தகுதியான ஆசிரியை என்பது மட்டுமல்ல 1995 ஆம் ஆண்டிலிருந்து உடுப்பிட்டிப் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாமகக் கற்கும் இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் அதிபர் பதவிக்கு திருமதி.நவமணி சந்திரசேகரம் விண்ணப்பித்த போதும் வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அவரை நியமிக்க மறுத்துள்ளனர்.
இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது குறித்து அவர்களிடம் எந்தத் தெளிவான விளக்கமும் கிடையாது. ஒன்றை மட்டும் காதோடு காது வைத்தது போல சொல்லிவைக்கிறார்கள். நவமணி சந்திர சேகரம் உயர்சாதியைச் சார்ந்தவர் இல்லையாம்.
இவரது நியமனம் நிராகரிக்கப்பட்ட அதே வேளை அதிபர் பதவிக்கு தேவையான தகுதிகள் இல்லாத கௌரி சேதுராஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக்குரிய எந்த விளம்பரங்களும், நேர்முகப் பரீட்சைகளும் இன்றி கௌரி சேதுராசா குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டார்.
இவரது நியமனத்திற்கு எதிராகப் பெற்றோர் சிலர் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
பேரினவாத அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு? இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் புறக்காணித்து முன்னெடுக்கப்பட்ட முடியாது.
சாதி எல்லாம் ஒழிந்து விட்டது என்று சிலர் புழுகுகிரார்களே ?!!ஓ ..கோ .. தமிழ் ஈழம் கிடைத்தால் அது இல்லாமலா போய் விடும்.
குமார்
யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்.
காலத்திற்கு ஒவ்வாத பதிவு.
புலிக்காச்சல் எப்படிச் சிலரை விடாது வாட்டிவருகிறதோ அப்படியே சாதிக்காச்சலும் சிலரை விடாது வாட்டிவருகிறது. சாதிப்பாகுபாடுகள் இல்லாத நாடுகள் உலகத்தில் எங்குமே இல்லை இன்றைய அறிவியல் உலகத்தில் சாதியைத் சேர்ந்துள்ள அதன் திமிர், கொடுமை, வக்கிரம் போன்ற தன்மைகள் குறைந்து அழிந்து வருவதையே அனுபவத்தில் காணலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலமையையும் இன்றைய நிலையையும் ஒப்பீடு செய்துபார்க்கும் பொழுது சாதியின் வக்கிரத் தாக்கத்தின் தன்மை தணிந்தே வருகிறது. பதவிப் போட்டிகளுக்குள் சாதியை மட்டும் நுழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. திருமதி.நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கும் கௌரி சேதுராஜா என்பவருக்கும் இடையே தகுதிக்கப்பால் எந்த அரசியல்வாதியின் செல்வாக்கு உள்ளது என்பதுதான் நோக்கப்படவேண்டும். வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அத்தனைபேருமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களா?. அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும்.
திரு நிவேதா நேசன்,
சாதி வெறியை தூண்டி விட்டு குளிர்காய முனைபவா்களில் நீங்களும் ஒருவா் ஆனால் உங்களை குற்றம் கூறமுடியாது ஏனெனில் உங்களுக்கு அது புரியாது.
Kumar, he gave guns to all cast away castes and casted them into a credible infantry that held the ground for quarter of a century. A new East is emerging. The North should follow suit.
ஊர் மக்களா அல்லது அதிகாரிகளா இந்த ஆசிரியையின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் ?
உண்மையில் திரு நிவேதா நேசன்அவர்களே, யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது என்ற தலைப்பை நீங்கள் இடவேண்டுமானால் பின்வரும் சூழல் நிலவி இருக்க வேண்டும் . உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பெற்றோர், ஆசிரியர், மாணாக்கர் சாதிய ரீதியில் திருமதி.நவமணி சந்திரசேகரத்தின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் என்பது. அவ்வாறு நிகழ்கின்றது என்பது பற்றி தங்களிடம் உண்மையான தகவல் எதேனும் உண்டா? அல்லது பதவிப் போட்டிகளால் அதிகாரிகளின் தனிமனித உரிமை மறுப்பா இச்செயல் என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.
திரு நிவேதா நேசன் ஒருதடவை மகேந்திராவின் கேள்விகளுடன் கூடிய கருத்துக்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுகிறேன் அவர் சொல்வது போன்று “திருமதி.நவமணி சந்திரசேகரம் அவர்களுக்கும் கௌரி சேதுராஜா என்பவருக்கும் இடையே தகுதிக்கப்பால் எந்த அரசியல்வாதியின் செல்வாக்கு உள்ளது? என்பதுதான் நோக்கப்படவேண்டும்”.,வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அத்தனைபேருமே உயர் சாதியைச் சேர்ந்தவர்களா?. அது பொய்யெனில் தணிந்துபோகும் சாதித் திமிரை ஊதி எரியவிட்டு நொந்துபோயிருக்கும் தமிழ் மக்களை மேலும் குழப்பிப் பிரித்து குளிர்காய முயல்வதாகவே கொள்ளமுடியும். எனும் கருத்தும் நோக்கப் படவேண்டும்.
ஊர் மக்களா அல்லது அதிகாரிகளா இந்த ஆசிரியையின் நியமனத்தை எதிர்க்கிறார்கள் ? என்ற மனிதனின் கேள்வியோடு “பதவிப் போட்டிகளுக்குள் சாதியை மட்டும் நுழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்ற மகேந்திராவின் கருத்தில் உள்ள ஜதார்த்த நிலைமையையும் புரிதலுக்குரியது இத்தகைய புரிதலை திரு நிவேதா நேசன் ஏலவே புரிந்து இருப்பாரானால் யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது என்ற தலைப்பை இட்டு அவரால் இவ் இடுகை வந்திருக்காது என நினைக்கிறேன்.
இமையாணன், உடுப்பிட்டி இரண்டு பாடசாலைகளிலும் ஒரு குறிப்பிட்ட சாதிய மக்களுக்குரியது போன்று எழுதப் படும் அல்லது புனையப் படும் கட்டுரைகளை நான் பார்த்து இருக்கிறேன் அது தவறு. சுமார் 1950 களில் இமையாணன் பாடசாலை அவ்வாறு இருந்து இருக்க கூடும் என நினைக்கிறேன்.
1980 களின் முன்னர் உடுப்பிட்டி சாதிய மோதல்களில் உச்சம் பெற்ற ஊர்களில் ஓன்று என்பது உண்மை. டெலோ அமைப்பைச்சார்ந்த மறைந்த தளபதி தாஸ் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர் அவர் டெலோ அமைப்பில் இணைந்த கதை சற்று சுவாரசியமானது அவரின் உறவினர் இலங்கை போலீஸ் அமைப்பில் பணியாற்றி போராளிகளை வேட்டையாடியவர்களில் ஒருவர் அவரை குட்டிமணி சுட்டுக் கொன்றார் இதனால் ஆத்திரமடைந்த அவர், வல்வெட்டி துறையான் உடுபிட்டியானை (அவர்களின் சாதிக்காரனை) சுடவோ? எனக் கூறி , குட்டிமணியை கொல்ல அந்த அமைப்பில் சேர்ந்தார் என்பது . இதனை அவர்களின் உறவினர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். இருப்பினும் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் சாதீய வன்கொடுமைகளை அதன் முனைப்பினை முனை மழுங்கச் செய்தது.
யாழ்பாணத்து தமிழ் தலைமைகளால் நிரம்பி வழிந்த டெலோ அமைப்பு தற்ற்போது அம்பாறை, மட்டக்களப்பு , மன்னார் மாவட்ட தலைமையை கொண்டு இயங்குவது போல யதார்த்தத்தில் பிரதேசவாதமும் சாதீயமும் அழிந்து போதல் வேண்டும். எந்த உருவத்திலும் சாதீயம் தலை காட்டுவதை அனுமதிக்க முடியாது. ஏன் வால் நூல் எது இருப்பினும் அது அறுக்கப் படவேண்டும்.
திரு நிவேதா நேசன் குறிப்பிடும், மறுபுறத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று இலங்கை அரச பாசிசத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலித் வியாபாரிகளையும், சாதி சங்கங்களையும் இனம்கண்டுகொள்ள வேண்டும். இனப்படுகொலை அரசின் செல்லப் பிள்ளையாகிப் போன சாதிச் சங்கங்கள் சாதீய முரண்பாடுகளை ஆழப்படுத்தி தமது அரசியல் வியாபார நிகழ்ச்சி நிரலில் இணைத்துகொள்கின்றன. என்னும் கட்டுரையாளரின் கனமான பார்வை குறித்தும் கவனம் செலுத்தும் அதே வேளை;
யாழ்பாணத்தின் ஆதிக்கச் சமர் அல்லது அரச அதிகார நியமனங்களில் சாதிய திமிர் அல்லது செல்வாக்கு எட்டிப் பார்பதுவும் இன்றுவரை தொடரக்கூடும் என்பது மறுப்பதற்கு இல்லை என்பதாலும் எழுந்தமானதாக நாம் அதனை மறுக்கவும் முடியாது என்பதாலும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் நிகழும் இந்த இழுபறியில் யாருக்கேனும் அநியாயம் நிகழ்ந்திருப்பின் அது சீர் செய்யப் படவேண்டும். தொடர்பூடகச் செய்திகளின் படி திருமதி.நவமணி சந்திரசேகரம் தகுதி இருந்தும் தகுதியான பதவியை பெறமுடியாமல் உள்ளார் என்பது மனித உரிமை மீறலாகும் இது கண்டிக்கப் படவும் வேண்டும். கட்டாயம் அவரின் ஓய்வு பெறும் காலத்தின் முன் அவர் அப்பதவியில் அமர்த்தப் படவேண்டும் என்பதுவே தனிமனித விழுமியங்களுக்கும் பொது பண்புக்கும் நியதிகளுக்கும் மதிப்பு கொடுக்கும் ஒவ்வொருவரினதும் விருப்பமாகவும் இருக்க வேண்டும்.
இங்கே சில் நியாயவான்கள் ஓர் கருத்தை மறைக்க எத்தனை சுற்றி வளைப்பு செய்கிறார்கள்.குறிப்பிட்ட அந்த பதவிக்கு தேவை தகுதி.அதைவிடுத்து எந்த அதிகாரியை யார் பிடித்திருக்கிறார்கள் என்ற மயிர் பிளக்கும் வாதத்துக்குள்தள்ளி சாதியவாதிகளை நியப்படுத்துவதே இவற்றின் உள் நோக்கம்.
” இங்கே தமிழருக்கு எந்த பிரச்சையும் இல்லை , ஒரே நாடு ஒரே மக்கள் , இனவாதம் பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று சிங்கள அரசிய்ல்வாதிகள் சொன்னால் அது சிங்கள பேரினவாதம்.ஈழத்தில் சாதி துவேஷம் இன்னும் இருக்கிறது ,”தேசிய ” போராட்டம் எந்த வகையிலும் அதை குறைக்கவில்லை , சாதிபற்றி தமிழர் மனங்களில் அதிக மாற்றமில்லை என்பதே உண்மை.” என்று சொன்னால் அது தலித்திய வியாபாரம்.
என்னய்யா நியாயம்! சிங்கவர் செய்வதும் வெறி தான், தமிழன் செய்வதும் வெறிதான் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்வதே மனிதாபிமானம்.
சாதி வெறி என்பது ஒழிந்து போகவில்லை முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது என்பதை தமிழகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாஸ் போன்ற ரௌடிகள் தமிழ் இய்க்கங்களுக்கு தலைமை தாங்க வெளிகிட்டதாலே தான் இவ்வளவு கொடுமைகள் நடந்தது.
டெலோ இயக்ககாரர்கள் தான் வடமராச்சியில் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து ” இப்ப நாங்கள் துவக்கு எடுத்திட்டம் இனி என்ன செய்வீர்கள் ” என்று கேட்ட யோக்கியர்கள்.
மற்ற சாதியினருக்கு வெள்ளைக் காரன் கால் கழுவி விடுறானோ? எதுக்கப்பா
அருகி வரும் சாதி பாகு பாடுகளை காப்பாற்ற துடிக்கிறீர்கள்? வர வர ஜாதி துவேசத்தை எம்முள் விதைப்பதில் குறியா இருக்குறியல். உங்களைப் போல ஆக்கள் இருக்கு மட்டும் ஜாதி ஒழியாது. நாம் மாற நினைத்தாலும் நீங்க விட மாட்டீங்கள் வாழ்க உங்கள் ஜாதிய கொள்கை. தமிழ் நாட்டில் ஆதிக்க ஜாதியால் பிரச்சனை தமிழ் ஈழத்தில்?
அன்பு ,
தமிழ் நாட்டில் ஆதிக்க ஜாதியால் பிரச்சனை தமிழ் ஈழத்தில்?
நீங்கள் இதை தமிழ் ஈழம் கேட்பவர்களிடம் ஒரு முறை கேட்டு பாருங்கள்.அவர்கள் அப்படி ஒன்றுமில்லை என்றுதான் சொல்வார்கள்.
இதை தான் ராஜபக்சேயும் கூறி வருகிறான் ” தமிழ் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று “! எந்த ஒரு ஆதிக்க வெறியர்களும் இப்படியே தான் நடந்து கொள்வார்கள்.
I do not think that she will accept this position now , even if they are ready to give. This is not a good honour for the person who worked hard for the past twenty three years for the education and she does not need to go through all this problems. Simply,they should have given this job to her so she can continue the education service.Do you think she will be happy after all this ?.Answer is no.This is not a good respect you can give her.
I can not still understand why these people are still looking at cast.What is the point of asking Tamileelam?.There are lots of issues within our Tamil society .How many people died in the war?.We have not changed yet.The world should come to an end that is the only solution for all the problems which we have .
Thanks
A.M.C OLD STUDENT .
Hindu Vedantas were given on the banks of the river Ravi in Puniab, India. The four basic castes are actually four different levels of personality developments. Jaffna is going through post war development.
சாதிவெறி சமயவெறி கன்னல் தமிழுக்கு நோய்.என்றார் பாரதி தாசன்.இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல மன நோய் சிகிச்சை பெற இறைவனை வேண்டுவோம்.இறைவன் என்றால் ராஜபக்சே என்று எண்ணி விட வேண்டாம்.
அந்த பதவி கொடுக்கப்பட்டால் அவர் வாங்கிக் கொள்ள வேண்டும்.அதி தான் அவர்களுக்கு கொடுக்கும் முதல் அடி.
Bharathithasan is a Sengunthar. Rajapakse are Govigama. That is Vellalar in Tamil. They are from the South and so not Kandyan.
சிங்கள இனவெறியும் கொடிய இன அடக்குமுறையும் எவ்வாறு எதிர்க்கப் படவேண்டுமோ அதே போல் தமிழ் சமுகம் மத்தியில் விரவி இருக்கும் சமுக கொடுமைகள் குறிப்பக சாதீய கொடுமைகள் களையப் படவேண்டும். தமிழ் சமுகத்தில் இருக்கும் அக முரண் பாடுகள் பேசப் படக்கூடாது அல்லது சிங்களப் பேரினவாதம் நிலவி வரும் சூழலில் அவை பேசப் படக்கூடாது என்பது அபத்தமானது. தலித் அமைப்புகள் என சமகாலத்தில் அதாவது புலிகள் தோற்கடிக்கப் பட்ட பின்னர் இப்போது மகிந்த அரசின் அல்லது பேரினவாத நிகழ்ச்சி நிரலில் அல்லது அவைகளுடன் ஒத்திசைந்து செயல் படும் சக்திகள் குறித்த அவதானம் வேண்டும். தமிழ் தேசிய விடுதலை போராட்டம் துரதிஸ்டவசமாக தமிழ் சமுகத்தில் நிலவிய சமூக வன்கொடுமைகளை முறியடிக்க போராட்டகளத்தில் சமாந்திரமாக பெரியளவில் முயலவில்லை, அல்லது திட்டமிட்டும் செயல் படவில்லை எனவும் கூறமுடியும். இருப்பினும் ஆயுத விடுதலை போராட்டம் நிகழ்ந்த காலத்தின் முன் ஒப்பிடும் போது இப்பொழுது சாதீய வெறி இன்னும் கூடியிருப்பதாக கூறுவது அபத்தமானது ஆகும்.
Caste system brings us together. Single Sri Lankan Citizenship.