யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
இதே வேளை வன்முறைகள் எல்லை கடந்தால், தேர்தல் ஆணையாளர் சட்டப்படி தேர்த்லை ரத்துச் செய்யமுடியும். தேர்தலில் தோல்வியடைந்தால் அதனைச் செல்லுபடியாக்கவே ராஜபக்ச குழு தனது துணைக்குழுக்களின் அனுசரணையுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
மகிந்தாவை அகற்றூகிரற வரலாற்றூ கடமையை ஆற்றூங்கள் என் உயிரான தமிழ் உறவுக்ளே.
யாழ்க் குடா நாடு உட்பட பல பகுதிகளில் “உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” என்ற பெயரில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் கொலைசெய்தவரும் கொலை செய்யத் தூண்டியவரும் போட்டியிடுவதாகவும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு வழங்குமாறும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Two grenades exploded at two separate locations in Vavuniya a short while ago but did not cause any damage or casualties. The Vavuniya police said that men riding on motorbikes lobbed the grenades near a lake and bunker before fleeing the area.
The Vavuniya police is investigating the incident.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வீட்டுக்கு நேற்று இரவு இரண்டு வெள்ளை வேன்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆவரங்காலில் உள்ள அவரது சாரதியின் வீடும் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளது
இன்று காலை சில இடங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகள், தேர்தல் வன்முறைகளை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதட்டம் நிலுவதுடன், பொலிஸார் ஊரடங்கு உத்தரவினை இன்று மாலை 7:00 மணி முதல் பிறப்பித்துள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:
யாழ்ப்பாண குடாநாடு உட்பட பல பிரதேசங்களில் ‘உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு” என்ற பெயரில் இன்றையதினம் பல துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டுள்ளன.
“இந்தத் தேர்தல் போட்டியால் எங்களது விடுதலை என்றும் கிடைக்கப் போவதில்லை. இந்தத் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாங்கள் இன்னும் கைப்பொம்மைகளாகவே இருப்போம். தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட வேண்டிய சரியான நேரம் இதுவே. நீங்கள் வாக்களிப்பதைப் புறந்தள்ளிவிட்டு எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை மேற்படி துண்டுப் பிரசுரத்தை ஈபிடிபி அமைப்பே பிரசுரித்து விநியோகித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) இன் நாபா கொலை புகழ், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆட்செர்த்துக் கொடுத்த மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கவே ஈபிடிபியினரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து புலிகளின் பெயரிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெயரிலும் இதுபோன்ற துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் லண்டன் வாழ் மந்தியுரைஜர் ஊடுருவிய மாதிரி, முன்னால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) இராணுவ அமைப்பான மக்கள் விடுதப் படையின் (PLA)தலைவரும், இன்றைய ஈழ மக்கள் ஜனநாஜக கட்சியின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன், தீவக மக்கள் என்றும் நினைவில் வைத்திருக்கும் கவுரவ மாண்புமிகு வீணை அம்மைச்ச்சரின் கட்சியினுள்ளும் வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவலா?