யாழ்ப்பாணத்தில் மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் சாகித்ய கலாசார விழாவில் செய்தி சேகரிக்கச் செல்வதற்கு கொழும்பு பி.பி.சி செய்தியாளர் சாள்ஸ் ஹெவிலன்ட்டுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியளிக்க மறுத்துள்ளது.
எனினும், பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை செய்தியாளர் சாள்ஸ் ஹெவிலன்ட்டுக்கு தெரியப்படுத்தவில்லையென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
இந்த சாகித்ய கலாசார விழா நோர்வே தூதரக அலுவலகம், சேவா லங்கா நிதியம் ஆகியவற்றின்
அனுசரணையில் நடைபெறுகிறது. இந்த விழா இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இணங்களுக்கிடையில் ஏற்படக் கூடிய முறுகல் நிலையைத் தவிர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவது குறித்தும் இந்த விழாவில் ஆராயப்படவுள்ளது.
இதில் இந்தியா, நேபாளம், பலஸ்தீன், நோர்வே ஆகிய நாடுகளின் கலாசார குழுக்களும் கலந்துகொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதே வேளை யாழ்ப்பாணக் குடா நாட்டில் மாதாந்தம் சராசரி 35 கொலைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இவற்றில் அரைவாசிப் பகுதிக்கும் பெரும்பாலனவை அரசியல் காரணங்களுக்காக இலங்கை அரச தரப்பிலிருந்து நிகழ்த்தப்படுவதாகவும் மனித உரிமை அமைப்பொன்று தெரிவிக்கிறது.
விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் கீழே இணைக்கப்பட்டுள்ளது:








சேவா லங்கா பற்றி நான் ஏலவே குறிப்பிட்டு இருந்தேன். அது பொருண்மிய கொள்ளையில் ஈடுபடும் நிறுவனம். பகுப்பாய்வு சமூகச் சிந்தனை திறன் என்பவற்றை மழுங்கடிக்கும் அரச சார்பற்ற தன்னார்வ நிறுவனம் அத்துடன் இவைகள் அனைத்தையும் கலந்த பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையின் ஊற்றாக செயல்படும் நிறுவனம்.
பகுப்பாய்வின் மூலம் சமூகச் சிந்தனைகளை சிதறடிக்கும் என மாற்றி வாசிக்கவும்
servalanka is rajapaksa’s sellappillai. ithan nirvaaki hari is a Buddhist fundamentalist