யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வ மதக் குழுவினர் நல்லிணக்கப் பேரணி ஒன்றை யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஏற்பாடுசெய்திருந்தனர். அதற்கான அனுமதி பொலிசாரால் மறுக்கப்பட்டுள்ளது. இதே வெளை யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என சர்வமதக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு தமிழ் மக்களது மனதை வெற்றி கொள்ள தவறவிடும் ஒவ்வொரு கணமும் நாடு மீண்டும் வேறோர் பாதைக்கு பயணிக்க வழிகோலுகின்றது என்று தெற்கிலிருந்து வடபகுதிக்குச் சென்ற மதப்பிரமுகர் ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
போருக்குப் பின்னான மனிதாபிமான நடவடிக்கைகள் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை என சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ்ப் பேசும் மக்களின் அவல நிலைக்கு தன்னுரிமை மறுக்கப்பட்டமையே காரணம் என்பதை தன்னார்வ நிறுவனங்களும் மத அமைப்புக்களும் மறுக்கும் நிலை காணப்பட்டாலும் அவர்களிடம் சில தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.