மலேசியாவைத் தளமாகக் கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற பல்தேசிய வர்த்தக நிறுவனம் இலங்கையில் நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தின் 80 வீதமான பங்குகளை வாங்கிக்கொண்டது. நோர்தேர்ன் பவர் என்ற நிறுவனத்தை ஜெகான் பிரசன்ன அமரதுங்க என்ற தனி மனிதனே நடத்திவந்தார். நோர்தன் பவர் நிறுவனதினூடாக சுன்னாகம் மின்சார உற்பத்தி நிலையத்தை வாங்கிக்கொண்ட எம்.ரி.டி கப்பிடல் அங்கு மின்சார உற்பத்தியை 2008 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் ஆரம்பித்தது. அதுவரையில் டீசல் பாவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பேர்னாஸ் கழிவு எண்ணையைப் பயனபடுத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
கட்டுமானத்துறை, நிதி முதலீடு போன்ற துறைகளில் ஈடுபட்டிருந்த பன்னட்டு நிறுவனமான எம்.ரி.டி கப்பிடல் யாழ்ப்பாணத்திலேயே முதல் தடவையாக மின்சார உற்பத்தியைப் பரிசோதித்தது. போரால் விழுங்கப்பட்ட மக்களின் வாழ்கையின் மீது பரிசோதனை நடத்த ஆரம்பித்த எம்.ரி.டி கப்பிடல் தனது இலங்கைக் கிளையை எம்.ரி.டி வோக்கேர்ஸ் என அழைக்க ஆரம்பிதது.
ராஜபக்ச குடும்பத்தின் நண்பரான ஜெகான் அமரதுங்க எம்.ரி.டி இலங்கைக் கிளையின் துணைத் தலைவரானார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் சிறிய நிலப்பரப்பில் பேர்னாஸ் எண்ணையைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பதைக் கூற எவரும் முன்வரவில்லை.
இலாப வெறியை நோக்கமாகக் கொண்ட மலேசிய நிறுவனம் அதிக வெப்பத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் கழிவுகளை வெளியேற்றுவதற்கான விதி முறைகள் எதனையும் கடைப்பிடிக்கவில்லை.
கிழக்கிலும் வடக்கிலும் பயங்கரவாதம் தலையெடுக்கிறது என்று கூறி அனைத்து வளங்களையும் சூறையாடும் இலங்கை அரசு இவ்வாறான விதிமுறைகளைக் கையாளவில்லை தவிர, விதி முறைகளுக்குப் பதிலாக தங்களது லஞ்சத் தொகையை மட்டுமே எதிர்பார்க்கும் ராஜபக்ச பாசிஸ்டுக்கள் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணப் பகுதிகளைச் சுரண்டுவதற்கு எம்.ரி.டி இற்கு அனுமது வழங்கியது.
உற்பத்தியில் கசிவு ஏற்பட்டாலோ, எண்ணைக் கழிவுகள் முறையாக வெளியேற்ற்ப்படாவிட்டாலோ கதிரியயக்கம் போன்ற உச்ச பட்ச அபாயங்கள் ஏற்படும் என பல நாடுகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர, விவசாய உற்பத்தி நிலங்கள் வரண்ட நிலங்களாக மாறு அபாயம் ஏற்படலாம் என்று பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுன்னாகம் கோப்பாய் போன்ற பகுதிகள் வசிக்கும் மக்களின் நீரில் எண்ணைத் தன்மை கலந்திருப்பதை உணர ஆரம்பித்தனர்.
இதனால் வயிற்றுப்போக்கு, உடல் வீக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதை குடியேற்ற வாசிகள் உணர ஆரம்பித்தனர்.
அரச அலுவலகங்களில் மக்கள் முறையிட்டுப் பலன் கிடைக்கவில்லை. இறுதியாக எம்.ரி.டி இற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் மன்னாரில் எண்ணை வருகிறது என்றால் ஏன் யாழ்ப்பாணக் கிணறுகளில் எண்ணை வராது என்று கோமாளித்தனமாக கேள்விகளை எழுப்பினார்.
பல்தேசிய வர்த்தக நிறுவனத்தின் பண வெறிக்காக சொந்த நிலங்களிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ள மக்களை ராஜபக்ச பாசிஸ்டுக்கள் பயங்கரவாதிகள் என கூறினாலும் வியப்படைவதற்கில்லை.
யாழ்ப்பாணத்தில் உலகின் பல்தேசிய நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் போத்தல் நீரை யாரும் பயன்படுத்துவதில்லை. வீடுகளிலேயே அமைக்கப்பட்டிருக்கும் கிணறுகளிலிருந்து இயற்கையின் நீர்ச்சுவையோடு மக்கள் வாழப்பழகியுள்ளனர்.
எம்.ரி.டி இடம் லஞ்சம் வாங்கிய ராஜபக்ச கும்பல் இதுவரையில் போத்தல் நீர் வியபார நிறுவனங்களிடம் பேரம் பேச ஆரம்பித்திருப்பார்கள்.
ஐரோப்பாவிலுள்ள சுற்றுச் சூழல் சட்ட நிறுவனங்களிடம் இனியொரு பேசிய போது எம்.ரி.டி இற்கு எதிரான சர்வதேச வழக்குத் தொடர்வாதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் என்றார்கள்.
மலேசிய நிறூவனத்தின் ஸ்ரீ லங்காவில், அதுவும் போர் உக்கிரமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, உள்ளூர் செயற்திட்டங்களுக்கு பொறுப்பாக செயற்படுபவன் முன்னாள் விமானப் படையின் விமானக் கட்டுமானத்துறை பொறியியல் பீடத்தினூடாக வோக்கர்ஸ் நிறுவனத்தில் எம்.ரி.டீ கப்பிட்டல்-ஆல் வாங்கப் பட முன்னரே வேலை பார்த்த லால் பெரெர. இவன் தற்போது ஸ்ரீலங்கா விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதே பதவியில் உள்ள (எயார் வைஸ் மார்ஷல்) லால் பெரேரா -இலிருந்து வேறுபட்டவன் என்பதை கவனிக்கவும்.
https://archive.today/c5mU3
https://archive.today/ySxO5
எம்.ரி.டீ கப்பிடல் லேசியாவில் ஒரு தனியார் நிறுவனமாகி அதன் முதலீட்டளர்களையும் உரிமையாளர்களையும் நன்கே மறைக்கிறது.
எனினும் ஸ்ரீலன்காவின் காலனித்துவ கால எச்சமான் வோக்கர்ஸ் நிறுவனத்தை எம்.ரி.டீ வோக்கர்ஸ் நிறூவனமாக 2007 ஆம் ஆண்டு வாங்கியதும் மட்டுமல்லாமல் ஐரோப்பியாவுடனான வியாபார விஸ்தரிப்புக்களுக்கும் முலும் வேலைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. அதிலேயே முக்கியமான தடங்கள் பல கிடைக்கின்றன!
https://archive.today/sorZ9
எம்.ரி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தின் இயக்குனன்களில் இருவர் வெளிப்படையாக பிரித்தானியர். ஒருவன் பலகாலம் மலேசியாவில் இயங்கும் வெள்ளைக்காரன். மற்றவன் பிரித்தானிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினன் நிரஞ்சன் தேவா!!
நிராஜ் தேவா என தமிழர்களுக்கு எதிராக நேரடித் துவேசவாதியாக இயங்கும் இவன் ஐரோப்பிய ஒன்றீயத்ஹ்டின் புலிகள் மீதான தடையிலிருந்து ஜீ.எஸ்.பி மற்றும் ஜீ.எஸ்.பி+ சலுகைப் பிச்சையை ஸ்ரீலங்காவுக்காக வாங்குதல், தமிழர் இனப்படுகொலைபை மறுக்கும் பொய்களை உரைத்தல் என அடுக்கடுக்காக பல நாசகார வேலைகளில் ஈடுபடுபவன். இவனது ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினன் பதவி முடிவுக்கு வருந்தருவாயில் இவ்வளவு காலமாக இத்தொடர்பை கண்டு நடவடிக்கை எடுக்க முடியாத புலம் பெயர் தன்தோன்றித் தமிழ்த் தலைமைகளுடன் அவதானமாக இருப்பது இன்றைய முதற் தேவை. இனியொருவின் சட்டரீதியாக ஆராயும் முயற்சிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
https://archive.today/sorZ9
தாங்கள் கொண்டாடங்களை நடத்துவதற்காகவே வாழும் புலம்பெயர் பொறுக்கித் தலைமைகள் இந்த வழக்கை முன்னெடுக்க மாட்டார்கள்.
Niraj ME is undoubtedly work for Sri Lankan government. I would doubt if he wasn’t sponsored by Sri Lankan government.
I have stood for European Parliamentary Election during May 2014 through National Liberal Party, sadly none our Tamlaght organisations want to support it, even though my main reson to stood for the election to lobby European countries to bring sanction against Sri Lanka.
I have decided to stand in the British General Election under “National Liberal Party” to lobby the British government to support our course. After reading your article I have more determined to stand against these guys who try to distory our people and our land. I hope all the Taming in UK will support me to raise our profile in British Parliament.
Also I like to point out that there are 4 Sinhales standing in the general election under conservative – food for thought.
S.Yogalingam
General Election Candidate
National Liberal Party
http://www.nationalliberal.org
நிராஜ் தேவா பிரித்தானிய பாரளுமன்றில் ஸ்ரீ லங்கா சார்ந்த ஆதரவு அம்மைப்புகளின் தாபகன் என வெளிப்படையாக தெரிவிக்கிறான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கீழுள்ள இணைப்பில் சுன்னாகாம்/கோப்பாய் எண்ணெய்க் கசிவு சார்ந்த வியாபாரத் தொடர்பு விடயங்கள் காலத்தால் பிந்திய காரணத்தால் தான் அடக்கப்படவில்லை போலும். ஐரோப்பா-இந்தியா வர்த்தக சபை (Europe India Chamber of Commerce) இன் தலைவனாகவும் ஐரோப்பாவை மையப்படுத்திய நவ தாராளமய கொள்கை வர்த்தக ரீதியில் நடைமுறைப் படுத்துபவனாகவும் நிராஜ் தேவா சர்வதேச வியாபாரக் கொள்கை வகுப்பாளர்களுக்கு இன்றியமையாதவன்.
https://wikispooks.com/wiki/Nirj_Deva
காலனித்துவ காலத்து எச்சமும் ராஜபக்ச அரசின் வியாபாரதூண்கள் பலரும் இயக்குனன்களாக (ஹரி ஜயவர்தனா, மணிலால் பெர்னான்டோ போன்ற ஊரைத் தின்ற கள்ளன்கள்) செயற்படும் ‘எய்ட்கன் ஸ்பென்ஸ்’ நிறுவனத்தினூடு நிராஜ் தேவா பல்தேசிய வியாபாரியாகவும் ஒரு முக்கிய இயக்குனனாகவும் ஸ்ரீலனங்காவில் செயற்படுகிறான்.
அதே ‘எய்ட்கன் ஸ்பென்ஸ்’ நிறுவனத்தில் இன்னுமொரு இயக்குனனாக ஒளிந்திருக்கும் ராஜன் ஆசீர்வாதம் தம்மிக பெரேரா-இன் ‘வலிபல் வன்’ முதலீட்டு வாகனத்தினதும் இயக்குனன் என்பதுவும் (நீர் மாசுபடுத்தும் வியாபரிகள் என்னும் தொடர்பின் அடிப்படையிலாவது) கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது.
https://archive.today/pH0HV