யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(3): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா
கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.
இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.
வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வேறுபல பகுதிகளைப் போன்று யாழ்ப்பாணத்திலும் ஒவ்வொரு சாதிகளும் கொண்டுள்ள சனத்தொகை தொடர்பான மிகச் சரியான தகவல்கள் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருவேறு மானிடவியலாளர்களால் (கெனத் டேவிட் மற்றும் மைக்கல் பாங்ஸ்) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத்தொகையில் 50 வீதமானோர் ‘உயர் சாதி’ வெள்ளாளராய் இருந்தனர் எனக் கணிப்பிடப்பட்டது. அத்தோடு கரையார் 10% மாகவும், கோவியர் 7% மாகவும், பள்ளர் 9% மாகவும், நளவர் 9% மாகவும் கணிப்பிடப்பட்டனர். யாழ். குடாநாட்டின் சனத்தொகையில் ஏனைய பெயர்குறிப்பிடப்பட்ட பதின்மூன்று சாதிகளில் எதுவும் 3% துக்கும் மேலான இடத்தினைப் பெறவில்லை.
யாழ்ப்பாணச் சமூகத்தைப்பற்றி எழுதிய டேவிட் (1973அ, 1973ஆ, 1974அ, 1974ஆ), ஃபாபன்பேகர் (1982, 1990), பாங்ஸ் (1960), அருமை நாயகம் (1979, 2000) மற்றும் சிவத்தம்பி (2005) போன்ற புலமையாளர்கள் சாதிகளை வெவ்வேறு முறைகளில் பாகுபடுத்தினர். உதாரணமாக, டேவிட் (1973:36) யாழ்ப்பாணச் சாதிகளை ‘உயர் சாதி’, ‘நல்ல சாதி’, மற்றும் ‘கீழ்ச் சாதி’ எனப் பாகுபடுத்துகின்றார். சிவத்தம்பி (2000:10) ‘உயர் சாதியினர்’, ‘உயர் சாதி அல்லாதோர்’ மற்றும் ‘குடிமக்கள்’ என வேறுபடுத்துகின்றார். வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், கோவியர் மற்றும் சைவச் செட்டி ஆகிய சாதிக் குழுக்களை டேவிட் உயர் சாதியாகக் கருத, சிவத்தம்பி வெள்ளாளர் மற்றும் பிராமணர்களை உயர் சாதி எனக் கருதுகின்றார். யாழ்ப்பாணச் சாதி அடுக்கமைவிலிருந்த குடிமக்கள் மற்றும் அடிமைகள் என்ற பாகுபாடுகளும் முக்கிய விடயங்களாகும். வேறுபட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பல்வேறு புலமையாளர்களும் சில சாதிக் குழுக்களை அடிமைகள் என்ற வகைக்குள்ளும் உட்படுத்துகின்றனர். உதாரணமாக, ஒல்லாந்தரின் கணிப்பீட்டின்படி கோவியர், நளவர், பள்ளர், சாண்டார் மற்றும் சிவியார் ஆகியோர் ‘குடிமைகள்’ என்ற குழுவினுள் உள்ளடங்குவர் எனச் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். இன்னொரு பக்கத்தில், டேவிட் (1974) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோர் கோவியர், பள்ளர் மற்றும் நளவர் ஆகிய சாதிக் குழுக்களை ‘அடிமைகள்’ என்ற வகுப்பினுள்ளும் தட்டார், தச்சர், கொல்லர், குயவர், வண்ணார், அம்பட்டர் மற்றும் பறையர் ஆகிய சாதிக் குழுக்களை குடிமைகள் என்ற வகுப்பினுள்ளும் உள்ளடக்குகின்றனர். அதேபோன்று ‘தீண்டத்தக்கவர்’ (Touchables), தீண்டத்தகாதோர் (Untouchables) ஆகிய சாதிக்குழுக்களும் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் முக்கியமானதொன்றாக இருந்தன.
அட்டவணை-1 இன் அடிப்படையில், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ‘தீண்டத்தகாதவர்கள்’ எனக் கருதப்பட்டனர். வண்ணார் சாதியினைச் சேர்ந்தோர் மரபுரீதியாக கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டமையால் (வெள்ளை கட்டும் நோக்கத்திற்காக) அச்சாதியினைச் சேர்ந்தோர் ‘தீண்டத்தக்கவராகக்’ கருதப்பட்டனர். இவ்விடயத்தினை பாங்ஸ் (1960:65) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘வண்ணார் கோயில்களுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டமையால், அவர்கள் தீண்டத்தக்கவராயும் அம்பட்டருக்கு கோயில்களின் உட்புறம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனால், அவர்கள் தீண்டத்தகாதவராயும் கணிக்கப்பட்டனர்.
இவ்விடயம் தென்னிந்திய சாதி அமைப்புமுறையின் சில பண்புகள் யாழ்ப்பாணச் சாதியிலும் காணப்படுவதை தெளிவுபடுத்துகின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘தீண்டாமை’ என்ற விடயம் வழக்கத்திலில்லை என்பது பொதுவாக விவாதிக்கப்படும் விடயமாகும். தற்காலச் சமூகத்தில் வெளிப்படையானதாகவோ அல்லது வலிமை மிக்கதாகவோ ‘தீண்டாமை’ என்ற விடயம் இல்லை என்ற கருத்துடன் நாமும் உடன்படுகின்றோம். சாதி நடைமுறைகள், சாதி தொடர்பான திறந்த கலந்துரையாடல் என்பவற்றின் மீது LTTE யினால் ஏற்படுத்தப்பட்ட தடைகள், பாரியளவிலான சனத் தொகை இடப்பெயர்வு மற்றும் யுத்தம் போன்ற விடயங்களால் கடந்த பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் சாதி பல்வேறு மாற்றங்களுக்குள்ளாகி வருகின்ற அதேநேரம், மக்களின் சமூக, கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையின் சில விடயங்களில் சாதி தொடர்ச்சியான புழக்கத்திலிருந்து வருகின்றது.
முன்னையவை:
கோவியர் யார்? இவர்கள் தமிழர்களா?
http://yaalppaanam.wordpress.com/
வணக்கம் கைக்கோழர் என்னும் சாதியின் விளக்கம் தரமுடியுமா நன்றி
வெள்ளாளர் கலப்பு சாதிகள் என்பது உண்மையே.இலங்கைஇயாழ்பாண சரித்திர நூல்களில் வெவ்வேறுசாதிகள் வெள்ளாளர்இமுதலி பட்டங்களை பணம் கொடுத்து ஐரோப்பிய ஆட்சியாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.இப்பட்டங்களை பெற்றுக்கொள்வதில் அவர்களுக்குள் உருவான சர்ச்சைகளும் சண்டைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம்:
1.இலங்கை சரித்திரம்
2.யாழ்ப்பாண சரித்திரம்
3.கைலாயமாலை
1.யாழ்ப்பாண வைப்பாவாமாலை.
கல்வெட்டில் பறையர்கள் (இக்கல் வெட்டை படித்தவர்இஇதன் செய்திகளை பதிப்பித்தவர் தமிழ்நாடு முன்னாள் தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர்.நாகசாமி ஐய்யர் ஆவார்)
இடிகரையில் வீரபாண்டியன் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டில் (14ஆம் நுற்றாண்டில்) கோயிலில் விளக்கு எரிக்க பத்து வராஹன் பணம் கொடுத்தவன் பெயர் “கொற்றமங்கலத்திருக்கும் வெள்ளாளன் பைய்யரில் பறையன் பறையன்” என்று உள்ளது. வெள்ளாளரில் பைய்யரில் என்ற பிரிவில் பறையர் என்ற உட்பிரிவினர் இருந்துள்ளனர் என இதன் வாயிலாக அறிகிறோம். இதே ஊரில் உள்ள மற்றொரு கல்வெட்டில் “வெள்ளாளன் பைய்யரில் சடையன் நேரியான பறையன் என்பவன் கூறப்படுகிறான். இது போல் வெள்ளாளர் உட்பிரிவுகளில் புல்லி என்ற பிரிவிலும் பறையன் குறிக்கப்படுகிறான். விக்கிரம சோழன் காலத்தில் 1292ல் ஒருவன் தீபங்கொடுத்தான். “வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்” என்பவன் குறிக்கப்பெறுகிறான். இதிலிருந்த்து 13ஆம் நூற்றாண்டு- 14ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்களில் பறையன் என்ற ஒரு பிரிவு இருந்துள்ளமை சரித்திர ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
– இராஜசிங்கம் இளங்கோவன்-
http://yaalppaanam.wordpress.com
சாதி உண்டு வெள்ளாள சாதிதான் மேல் சாதி ///
தமிழர்களில் மேலானவர்களே தமிழரை கட்டுபடுத்தியவர்கள். தமிழரை
உலகமெங்கும் அகதியாவதற்கும், இலங்கையில் சிங்களவ்ர்களால்
அடக்கப்படுவதற்கும் பொறுப்பேற்பார்களா?
So, who controlled Late. Thiruvenkadam Velluppillai Pirabhaharan,
, Kuttimani & Anton Balasingham…?
What about Varuthalaivilan Uma maheswaran ????
How…?
What about Pillai, Muthaliyaar, Udaiyaar… etc…
So, when the Lanka Rani came to Jaffna all these Vellala people came in the upper deck…?
Who knows ? Maybe
எல்லா சாதி வெறியர்களும் பிராமணர்கழுக்கு கீழ்தான்
மள்ளர்களைப் பள்ளராக்கி அடிமைப்படுத்தியவர்கள்தான் சுமார் 800 ஆண்டுகளாக தமிழினத்தைக் கருவறுத்தவர்கள். இவர்களில் தெலுங்கு நாயக்கர்களுக்கு விசுவாசமான வெள்ளாளர் முதலிமார்களும், தெலுங்கரிடம் பாளையங்கள் பெற்று தெலுங்கருடன் கூடி சோழ பாண்டியர்களைக் கருவறுத்த கள்ளர் மறவர்களும பாளையக்காரர்களும் தான்காரண்ம்.இவர்களே தமிழின்ம் பூண்டற்றுப் போகச்செய்தவர்கள்
தெலுங்கு நாயக்கர்கள் இன் ஆட்சியின்போதுதான் வெள்ளாளர்களின் நிலங்கள் தெலுங்கு நாயக்கர் களால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று தெலுங்குநாயக்கர் வசம் இருக்கும் காணிகள் பல வெள்ளாளர் , முதலியார்களுக்கு சொந்தமானவையாகவே இருந்தன.
சாதி காமாலை கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு எல்லாம் தலை கீழாகவே தெரியும்