யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் அம்மன் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும், காண்டீபன் ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.
கற்கல் மற்றும் கழிவு எண்ணெய் போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகளுக்கு பகுதி அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே வலிகாமம் பகுதியில் நில அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய மக்கள் பயணித்த பேருந்து மீதும், இவ்வாறு கழிவு எண்ணெய் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரான நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இலங்கை இராணுவத்தினர் புலனாய்வுத் தரப்பினரால் அல்லது அவர்களின் ஆதரவினை பெற்றவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
This is a competitor group. Patience and prudence is very essential in the North and East. Elected members have certain powers and will get government protection too. We all must be thoughtful and concerned of the damage done to all the people in the country in the last thirty years or so.
கழிவெண்ணை வீசும் நவீன அடிமைகளுக்கு கல் எறியும் ஆதிகால புத்தி மாறாது.