வடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது.
இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசியப்பிரச்சினைக்கு தீர்வுக்கான அணுகு முறைகள் எனும் கருப்பொருளில் நாளை யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் ஜேவிபியினது பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னறிவிப்பு பற்றிய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகைய கருத்தினை முன்வைத்திருந்தார்.
எவர் ஆட்சிபீடமேறினாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தடுப்புக்களிலும் சிறைகளிலுமுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படப் போவதில்லை. காணாமல் போனோhர் திரும்பப்போவதில்லை. அன்றாட விலைவாசிகள் குறையப் போவதில்லை. இத்தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றினதும் விலைகள் கூட்டப்படப் போகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஏனைய மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதை தவிர வேறு வழிகளில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் பாடங்கள் கற்றுக்கொள்வோம்
(சாகரன்)
பொதுவாக தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் தமது புதிய காரியாலயங்களை ஒவ்வொரு பிரதேசத்திலும் திறந்து மக்களை சந்தித்து வருவர். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மட்டும் அல்ல மேற்கத்திய நாடுகளிலும் வழமை. இதற்கு சில நியாயமான? காரணங்கள் இருக்கவே செய்கின்றன.
இதில் முக்கிய நோக்கம் மக்களை சந்தித்து அவர்களிடம் தமக்கு வாக்கு அளிக்குமாறு கேட்பதே முதன்மை பெற்றிருக்கும். பின்பு தேர்தல் முடிந்தததும் வெற்றவர்கள், தோற்றவர்கள் உட்பட எல்லோரும் கொட்டில் கால்களைப் பிடிங்கிக் கொண்டு தலைமறைவாகிவிடுவர். வென்றவர்கள் மாத்திரம் எங்கேயோ ஒரு நகரத்தில் தமது வசதிக்கு ஏற்ப ஒரு அலுவலகத்தை அமைத்து தமது செயற்பாட்டை தொடருவர். கவனிக்க தமது செயற்பாட்டை, மக்களைச் சந்திப்பது என்பது அல்ல.
இதற்கு விதிவிலக்காக சில அமைப்புக்கள், தலைவர்கள் இருப்பதுவும் உண்டு.
நான் வாழும் கனடாவில் எனது பகுதி உள்ளுராட்சி பிரதேச உறுப்பினர் ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிழமைக்கு கிழமை மக்களை அவர்களின் சின்ன சின்ன விடயங்களுக்காக சந்தித்து வருவார். அவர் தொடர்ந்தும் தனது பதவியில் மேலோங்கி பாராளுமன்றம் செல்லாமல் உள்ளுராட்சி சபையிலேயே மட்டும் வேலை செய்து வருகின்றார். இதே பொறுப்பில் இருக்கும் தமிழர் ஒருவர் தனது சொத்து, சுகம், பேர், புகழ் என்று எங்கேயோ? போய்விட்டார் அவரின் கனவு கூட ஒரு எம்பி ஆக வரவேண்டும் என்பதே.
சரி இலங்கை விடயத்திறகு வருவோம். தேர்தலின் போது கிராமம் கிராமமாக சென்று வாக்கு கேட்பதும் பின்பு வென்றால் என்ன வெல்லாவிட்டால் என்ன காணாமல் போவதையும் அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். தொடர்சியாக பிரதேசங்கள் தோறும் கட்சிக் கிளைகளை அமைத்து மக்களை முடிந்தவரை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்க்க முற்படுவதே ஒரு கட்சியை வளர்த்தெடுக்க உதவும். இலகுவான முறையுமாகும். பதவியில் இல்லாவிட்டாலும் பதவியில் உள்ளவர்களிடம் உரிய முறையில் கதைத்து மக்களின் குறைகளை, தேவைகளை பூர்த்தி செய்ய முயலலாம்.
இதன் மூலம் தொடர்ந்தும் மக்கள் மனங்களில் இடம் பிடிக்க முடியும். இதில் இன்னொரு விடயமும் உண்டு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போல் தேர்தல் பிரசாரத்துடன் நிற்காமல் கட்சிகளை, அமைப்புக்களை கட்டியெழுப்புதல் என்ற மிகப்பெரிய ஒரு வேலைத் திட்டத்தையும் முடித்து விடலாம். இதில் தமிழ் நாட்டின் திராவிடக் கட்சிகள் எவ்வளவுதான் பிற்போக்கானவையாக இருந்தாலும் தொண்டர்களை(குண்டர்களையும்தான்), கட்சிகிளைகளை உருவாக்குவதில் வென்றால் என்ன தோற்றால் என்ன விண்ணர்கள் தான்.
நாமும் தொடர்ந்தும் மக்களை சந்திக்கும் பொறிமுறைக்கான ஸ்தாபனத்தைக் கட்டி அமைக்கும் வேலைகளையும் தேர்தல் பிரச்சாரத்துடன் சமாந்தரமாக செய்வோம். மக்கள் தீர்மானிக்கட்டும் யாரை நாம் தேர்வு செய்து எமக்கு சேவை செய்ய அனுப்புவது என்பதை. கடமைகளை செய்வோம் பலனை எதிர்பாராமல். இதனைத் தவறவிடுவோம் ஆகின் மீண்டும் ஒரு தேர்தலில் வெற்றிக்காக யார் பின்னாவது ஓடவேண்டியதுதான். புரியவேண்டிய புரடசியாளர்கள், முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் புரிந்தால் சரி. உலக சரித்திரத்தில் மக்கள் அணிகளை மாபெரும் அணியாக்கியவர்கள் இதனைத்தான் செய்தார்கள். நாமும் அப்பாடங்களை கற்றுக் கொள்வோம்.
மாகாணசபைத் தேர்தல்: கொழும்பு வாழ் யாழ் மாவட்ட மக்களுடன் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துரையாடல்….
கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார். கொழும்பு வாழ்
தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.
தி. பரந்தாமன் (வழுதி) தலைமையில் 3 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் – பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டு வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான தமது கருத்துக்களை வழங்கினர்.
இங்கு தனது கருத்துக்களைத் தெரிவித்த தர்மலிங்கம் சித்தார்த்தன் –
“எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தல் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலாக கருதப்படுகின்றது. நீண்ட கால இழுத்தடிப்புக்குப் பின்பு, சர்வதேச அழுத்தங்களினால் நடத்தப்படவுள்ள இந்தத் தேர்தலின் முடிவை பல நாடுகள் உன்னிப்பாக அவதானித்தபடி உள்ளன. எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பாரிய வெற்றி ஒன்றைப் பெறுவதை தமிழ் பேசும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதன் மூலமாகவே, தாம் ஒரு தோற்றுப்போன இனமல்ல என்பதையும், தங்களுடைய தன்னாட்சி உரிமையைத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உறுதியாக வலியுறுத்துகிறார்கள் என்பதையும், இலங்கை அரசுக்கும், எம் மீது அக்கறை காட்டுகின்ற நாடுகளுக்கும் நாம் தெளிவுபடுத்த முடியும். எனவே, வாக்குரிமையுள்ள ஒவ்வொரு வட மாகாணத் தமிழனும் செப்ரெம்பர் 21ஆம் திகதி அந்த உரிமையைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அது அவர்களுடைய வரலாற்றுக் கடமை.
1987ஆம் ஆண்டு, இந்திய – இலங்கை உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதற்கு முன்பதாக தமிழ் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய எங்களை அழைத்து அந்த ஒப்பந்தத்தின் நகலை திரு ராஜீவ் காந்தி அவர்கள் வழங்கினார். அதனைப் படித்துப் பார்த்ததன் பிரகாரம் அந்த உடன்படிக்கையின் வாயிலாக உருவாக்கப்படவிருந்த மாகாணசபை முறை தமிழ் மக்களின் அபிலாசைகளை எந்த வகையிலும் பூர்த்தி செய்யாது என்பதை நாம் கண்டறிந்தோம். அந்த விடயத்தை திரு. ராஜீவ் காந்தி அவர்களிடம் அப்போதே நாங்கள் மிகத் தெளிவாக தெரிவித்துமிருந்தோம்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ராஜீவ் காந்தி அவர்கள், 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு ஆரம்பப் புள்ளியாக எடுத்துக் கொள்ளும்படியும், படிப்படியாக அதனைப் பலப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். ஆனாலும், மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்ந்தும் படிப்படியாகப் பறிக்கப்பட்டன என்பது யாவரும் அறிந்ததே.
இப்போது கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு – அப்போது அரைகுறையாக இருந்த அதிகாரங்கள் கூட பறிக்கப்பட்டு, வடக்கும் கிழக்கும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.
நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாவிட்டால் நிச்சயமாக இந்த மாகாணசபை அதிகாரம் அரச கட்சிக்குச் செல்லும். மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சியே மாகாண சபையையும் ஆளுமானால், மாகாண சபை முறைமையில் இருக்கின்ற குறைபாடுகளும், அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை என்ற விடயமும் நிரூபிக்கப்பட முடியாமல் போய்விடும். எனவே இந்த நிரூபனத்தை நடைமுறையில் காட்டுவதற்காக இந்த மாகாணசபைத் தேர்தலில் நாம் போட்டியிட்டே ஆக வேண்டும். போட்டியிடுவது மட்டுமல்ல, அதில் நாம் மகத்தான வெற்றியையும் பெற வேண்டியது கட்டாயமாகும்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மிகவும் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடைந்தால் தான் தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாம் நியாயப்படுத்த முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை தம்மால் தடுத்துவிட முடியாதென்பதை பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களே தெரிவித்திருக்கின்றார். இருந்தாலும், அரசாங்கம் இப்போது எடுக்கும் கடும் முயற்சிகள் எல்லாமே கூட்டமைப்பு பெறக்கூடிய மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மையைத் தடுப்பதற்கான முயற்சிகளே. அந்த முயற்சிகளின் அங்கமாகத்தான் பல கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் அரசாங்கம் களமிறக்கியுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை வெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதை தடுப்பதற்கான கடும் பிரயத்தனங்களை அரசாங்கம் செய்து வருகின்றது.
அதனால், வாக்குரிமை உள்ள ஒவ்வொரு வட மாகாணத் தமிழரும் – குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத் தமிழர்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாது தங்களது வாக்குகளை கட்டாயமாகச் செலுத்த வேண்டும்.
வட மாகாணத்தில் இருக்கின்ற இராணுவ ஆதிக்கம், நிலப்பறிப்பு, பௌத்த மயமாக்கல், காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள் என்றவாறாக – தமிழ் மக்களின் சார்பில், அவர்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லுகின்றது. வட மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறாதவிடத்து தமிழ் மக்களின் சார்பில் கூட்டமைப்பு முன்வைக்கும் நிலைப்பாடுகள் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவை எவையுமே தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாதவை என்றும் மகிந்த அரசு சர்வதேசத்திற்கு கூறிவருவது சரியானதே நிரூபிக்கப்பட்டுவிடும். அதனால், வட மாகாணத் தமிழர்கள் யாவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் “வீடு” சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டியது கட்டாயமாகும்.
பொருளியல் விரிவுரையாளர் வரதராஜன் அவர்கள் உரையாற்றும்போது, “தனிப்பட்ட முறையில், இந்த மாகாண சபை முறைமையை நான் நிராகரிக்கின்றேன். இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எவ்வகையிலும் பூர்த்தி செய்யவில்லை என்ற எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகவே பதிவு செய்து வந்திருக்கின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் – அழகாகச் சொல்லப்பட்டுவருகின்ற வரலாற்றில் – தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையை மக்கள் வழங்கிய 1977ஆம் ஆண்டுத் தேர்தலும், அதன் பின்னான 30 வருட கால தமிழர் அரசியலும், ‘ஏதோ சரித்திரத்தின் இருண்ட பக்கங்கள் போல,’ நுட்பமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்த போதும் – இந்த மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்ட கடந்த 26 வருடங்களில் முதற்தடவையாக, மத்திய அரசாங்கத்தை ஆளுகின்ற கட்சி அல்லாத வேறு ஒரு கட்சி ஒரு மாகாண சபையைக் கைப்பற்றப் போகின்றது. அந்த சரித்திர நிகழ்வு இந்த வட மாகாணசபைத் தேர்தலோடு அரங்கேறப் போகின்றது. அதன் பின்பு, மத்திய அரசாங்கத்தைக் கேள்விகளுக்கு உட்படுத்தக்கூடியதும், கூடுதல் அதிகாரங்களைக் கோரக் கூடியதுமான வல்லமையுடன் ஒரு மாகாணசபை உருவாகும். அந்த ஒரு காரணத்திற்காகவேனும் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பக்கு வாக்களித்து வடக்கு மாகாண சபையைக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மையுடன் கைப்பற்றுகிற ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “தமிழ் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்ற அதே நேரத்தில் அந்த கட்சி நிறுத்தியிருக்கின்ற வேட்பாளர்களைப் பற்றிய சரியான ஆய்வுகளைச் செய்து திறமையும் அனுபவமும் இருக்கின்ற வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை மக்கள் வழங்க வேண்டும். அத்தகைய தகுதிப் பண்புகள் நிறைந்த ஒருவராகவே திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களை நான் கருதுகின்றேன்.” என்று கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பரந்தாமன் (வழுதி) அவர்கள், “யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறி வெளியில் வாழ்கின்றவர்களாக நீங்கள் இருக்கின்ற போதும், வட மாகாணத்திற்காக நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் ஒட்டுமொத்தமான தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை அடைவதில் அதி முக்கிய பாத்திரத்தை ஏதோ ஒரு வகையில் வகிக்கப் போகின்றது என்பதனைத் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம், வரலாற்றை உருவாக்குவதில் ஒரு பங்கை நீங்கள் வகிக்க உள்ளீர்கள் என்பதனையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். அதனால், யாழ்ப்பாணத்தில் வாக்குரிமை உள்ளவர்கள் சிரமம் பாராது அங்கு சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். அங்கு வாக்குரிமையைப் பேணாதவர்கள், அங்கு வாழுகின்ற உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் ஊக்கப்படுத்தி – உற்சாகப்படுத்தி – அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறிச் சென்று மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு கூடுதல் வாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பாராளுமன்றமோ அல்லது மாகாண சபையோ, எந்த ஒரு மக்கள் மன்றத்திலும், எம்மைப் பிரதிநிதித்துவம் செய்வதற்குத் தகுதியானவர்களையும், அந்தப் பணிக்குப் பொருத்தமானவர்களையும் நாம் தெளிவாக இனம் கண்டு வாக்களிக்க வேண்டும். அத்தகையவர் – மக்களில் ஒருவாராக மக்களோடு வாழ்கின்ற எளிமையானவராகவும் இருக்கின்ற அதே வேளையில் – தாம் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் தொடர்பாகத் தமது கட்சியின் தலைமை வகுக்கின்ற கொள்ளைகளில் ஓரளவுக்கேனும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆற்றலும் அனுபவமும் அதிகாரமும் உடையவராகவும் இருக்க வேண்டும். யாழ் மாவட்ட வேட்பாளர்களுள் மிகச் சிலரே அத்தகைய வல்லமை உடையவர்களாக இருக்கின்றனர் அந்த வகையில், அப்படியானவர்களுள் ஒருவாராக – தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பு வகிக்கின்ற ஐந்து கட்சிகளுள் ஒன்றின் தலைவரான சித்தார்த்தன் அவர்களை நான் கருதுகின்றேன்” என்றும் பரந்தாமன் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் – அழகாகச் சொல்லப்பட்டுவருகின்ற வரலாற்றில் – தமிழீழக் கோரிக்கைக்கான ஆணையை மக்கள் வழங்கிய 1977ஆம் ஆண்டுத் தேர்தலும், அதன் பின்னான 30 வருட கால தமிழர் அரசியலும், ‘ஏதோ சரித்திரத்தின் இருண்ட பக்கங்கள் போல,’ நுட்பமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது……..
நேர்காணல் ஒன்றில் ‘நான் கடவுள்’ விக்கினேஸ்வரன்…
கேள்வி – தமிழர்கள் தங்களை சுயமாக ஆள வேண்டும்’ என்று பிரசாரம் செய்கிறீர்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுதந்திரத் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டதே?
பதில் – பிரிந்து போகும் சுயநிர்ணயம் கோருவதையே நாம் கைவிட்டுள்ளோம். அதாவது தனி நாடு கோருவதை. உள்ளார்ந்த சுயநிர்ணயத்தை கோரி நிற்கிறோம். இந்தியாவில் இருப்பதைப் போல ஒரு மாநில அமைப்பையே கோருகிறோம்.
கேள்வி – இந்தியாதான் உங்களை முதல்வர் வேட்பாளராக களமிறக்கியது என்றும் இந்தியாவைச் சார்ந்துதான் உங்களால் அரசியல் செய்ய முடியும் என்றும் சொல்கிறார்களே?
பதில் – இந்தியாதான் என்னை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது என்று யார் சொன்னார்கள்? இதுவரை நான் இந்தியாவுடனோ அல்லது இந்தியாவின் உயர் மட்டத்துடனோ அரசியல் தொடர்பாகப் பேசியதில்லை. இந்தியா எமது நேச நாடு அவ்வளவுதான்! அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை.
கேள்வி – லட்சம் பேர் கொல்லப்பட்டு, பல்லாயிரம் பேர் காணாமல்போய் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் உலகம் இலங்கையிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்கிறதே?
பதில் – அதில் என்ன தவறு இருக்கிறது? கொலை செய்தவர்களை யார் என்று கண்டுபிடித்து தண்டிக்க வேண்டாமா? அமைதியாக சிந்தித்து உறுதியாக நடவடிக்கை எடுக்க மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.
Spring in the North amputtuttan…
Martial subtitles TNA what are they going to do…???
வீர வசன TNA என்ன செய்யப்போகிறார்கள்…???
News…
Economic Development Minister Basil Rajapaksa says he will step down from a key development project in the north and hand it over to the new provincial council administration which will be elected at the September 21 elections.
Speaking in Vaddukkoddai today the Minister said that he will stop handling the Uthuru Wasanthaya (Northern Spring) project following the elections.
The development program currently operates under his Ministry but the Minister said that soon after the declaration of the first ever northern Provincial Council he will hand it over to the new council.
“I will stop handling Uthuru Wasanthaya Program from September 22nd and pass the onus of continuing this program for the benefit of entire northerners on the shoulder of the new provincial council which will be elected by the people of the province” the minister said.
The minister said that the people of the north have got an opportunity for the first time to elect a group of their own people to govern them according to the whish and will of the people.
“So there is a choice for the people on September 21st. They should decide whether they want the freedom, happiness and development with the self rule of the province by their own representatives or on the other hand they want a group that will lead them back to the dark era with rhetoric of self rule without any means or resource to develop the province,” the government information department quoted the Minister as saying today.
The minister also drew the attention of the people to the previous local government elections and reminded them that the TNA asked for power promising development of Northern Province by channeling finances through the Diaspora, UN and the international community. But they now claim they have no money to do anything.
The minister said that the TNA wants the power not to work for the people but to tell the world that the Government machineries set up at Local government and Provincial level have not provided any solution to Tamil problems.
“If this aspirations of TNA become a reality the people of the North will be deprived of the their economic freedom which is also a right of human being,” the Minister warned.