லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதியாக யமுனா ராஜேந்திரன், நாவலன், சஷீவன் ஆகியோரின் உரைகளை இங்கு தருகிறோம்.
தகவல் சட்டத்தின் பின்னதாக அமரிக்காவின் பல ஆவணங்களைப் பெறக்கூடியதாக உள்ளது, புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது: யமுனா ராஜேந்திரன்
எமக்கு வெளியே தெரிகின்ற தகவல்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது மிகவும் பிரதானமான விடையம் : நாவலன்
முதலாளித்துவத்தின் அதிகாரப் பல்லடுக்குகள், ஒன்றுக்கு ஒன்றான முதலாளித்துவம் போன்ற விடயங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் : சஷீவன்
தொடர்புடைய பதிவுகள்:
உலகத்தின் தலைசிறந்த இலட்சியத்திற்காக, மனித குலத்தின் விடுதலைப்போராட்டம் என்ற பொன்னான மார்க்கத்திற்காக,தன் வாழ்வு முழுவதையும் சக்தியனைத்தையும் அர்ப்பணித்தேன் என்று இறக்கும் பொழுது கூறும் வகையில் வாழ்பவனே மனிதன் என்கிறது வீரம் விளைந்தது நாவல். அவ்வாறான ஒரு பெருமகனாரைப் பற்றிப் பேசுகிற தங்கள் எல்லோர்க்கும் என் வாழ்த்து.காலம் கடந்த ஞானம் எனினும் தமிழ் மக்கள் மத்தியில் பொதுவுடமைச் சிந்தனையை ஊன்றியவர்களை அதற்கான வழிகளிலே பயணித்தவ்ர்களை இனம் காண்கின்ற தங்கள் முயற்சி வாழ்க. நான் அறிந்தவரையில் சாதியக் கட்டுமானத்திற்கெதிராக முதன்முதலில் குரல் கொடுத்து அதில் சாதித்தும் காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள்.நல்லூர் தொண்டமானாறு, மாவிட்டபுரம் என ஆலய வழிபாடு அனைவர்க்கும் பொதுவென ஆக்கியவர்கள் அவர்கள். குருசேவின் நவீன திரிபுவாதத்திற்கெதிராக மிகச் சிரத்தையுடன் வாதடியவர் சண்முகதாசன். தொழிலாளார்கள் நலன் பேணியவர். 22 வருடங்களுக்கு முன்னதாக பேசப்பட்டிருப்பது கொஞ்சமாக இருக்கிறது என்கிறார் யமுனா .இன்று தகவல் புரட்சியின் யுகம். சுண்டு விரலில் இருக்கிறது உலகத்தின் வரலாறு. அன்றைக்கு அப்படியா மொழிபெயர்ப்புப் புத்தகங்களே கிடைப்பது அரிது. அப்படியிருந்தும் பேசியிருக்கிறார்களே என்று சந்தோசப்படலாம். காலம் ஆவணங்களை கொண்டுவரும் ஆனால் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை எத்தனை சதவிகிதம் ஜேசுபிரானிற்கே புதிய மனைவி உருவாக்கும் நவீன தொழில்னுட்பம் எல்லாவித வாதங்களையும் சரியென்றாக்கும். இன்றைக்கு சர்வதேசியம் என்பது உண்டா என்கின்ற கேள்வி காலம் கடந்தது.இந்து சமுத்திரப் பிராந்தியத்தினுள் இலங்கைப் பிரிவினைஎன்பது சாத்தியமா மானிட அவலத்திற்காக நாடுகளைத் துண்டு துண்டாக்கினால் சர்வதேசியம் எத்தனை துண்டாகும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
பௌத்த சிங்கள பேரினவாதத்தை கட்டியெழுப்ப கற்தூண்களாக இருந்த,
இலங்கை “இடதுசாரிகள்” சேவை அளப்பரியது.
துட்டகைமுனுவை தோண்டி எடுத்து மகுடம் சூடியவனைப் பார்த்து,
இவர்களும் யாரையாவது நோண்டி எடுத்து தங்களுக்கு மகுடம் சூடிக் கொள்ள முனைகிறார்கள்.
North and East are both 4,000 square miles. We will have enough room to show our talents and develop our people and our lands. Dutugemunu is from Ruhunu.