இலங்கையின் ரக்பி ஆட்டக்கரரும் அகில இலங்கை ரக்பி விளையட்டுக்குழுவின் உப தலைவருமன மொகமட் வசீம் தாஜூதீன் என்பவரை ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச படுகொலை செய்ததாக யசாரா அபேசேகர என்ற பெண் கொழும்பு போலிசில் முறைப்பாடு செய்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட வசீம் இன் பெண் தோழியான யசரா அபேசேகரவிற்கு யோஷித ராஜபக்சவிற்கும் இடையே முன்னதாக உறவு இருந்ததாகவும் வசீம் உடனான பின்னைய உறவை சகித்துக்கொள்ள முடியாத யோஷித இக் கொலையத் திட்டமிட்டு நடத்தினார் என்று யசாரா கூறியுள்ளார். கடற்படை அதிகாரிகளை அனுப்பியே இக்கொலைகள் நடத்தப்பட்டதாக யசாரா தெரிவித்துள்ளார்.
இதனிடையே இன்று மகிந்த மற்றும் மைத்திரி இடையிலான சந்திப்பில் தனது மூன்று புதல்வர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் இதன் அடிப்படையிலேயே கட்சியின் தலைமைப் பதவியை மைத்திரிக்கு விட்டுக்கொடுத்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வசீமைப் போன்று ஆயிரக்கணக்கில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்பார்கும் நீதி மைத்திரியின் அதிகார வெறிக்குள் புதைக்கப்படும் ஆபத்துக் காணப்படுகின்றது.