இலங்கையின் வடக்கே மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.முதல்ர் கருணாநிதியை சந்திப்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்ன்று பிற்பகல் சென்னை வந்தார்.
தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் துறைமுக ஹெலிபேடுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ் கன்னிமாரா ஹோட்டலுக்கு புறப்பட்டார்.பலத்த பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு வந்த அவர் அங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது பிரதமர் கூறுகையில்,
இலங்கையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்தது. அதன்படி அங்கு கனரக ஆயுதங்களை தற்போது பயன்படுத்தவில்லை.
இலங்கைப் பிரச்சினைக்கு, ஒருங்கிணைந்த இலங்கை என்ற அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க காங்கிரஸ் கட்சி தன்னால் முடிந்ததை செய்யும்.
பிரதமர் வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கிட்டத்தட்ட 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விமான நிலையம் , ஹெலிகாப்டரில் அவர் வந்து இறங்கும் துறைமுகத்தில் உள்ள கப்பல் படை தளம், கன்னிமாரா ஹோட்டல், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டன.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பிரதமர் கடற்படை தளத்தில் இருந்து கன்னிமாரா ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுகிலும், கன்னிமாராவிலிருந்து அப்பல்லோ மருத்துவமனை செல்லும் வழியிலும் போலீசார் அரண்போல பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
பிரதமர் செல்லும் போது வழியில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது. வழியில் இருக்கும் ரோடுகளில் குப்பைத் தொட்டிகள்கூட அகற்றப்பட்டன.
முதல்வர் தவிர அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் ஆளுநர் பர்னாலா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்.
தமிழகம் வரும்போதில்> கேள்வி ஞானத்தில் ஏதாவது சொல்லிச் செல்லவேண்டியதுதான்!
கனகரக ஆயதங்கள் பாவிக்காமல்>உங்களின் “மக்களைக் கொல்லாத” ஆயதங்களைப் பாவித்தன் மூலம்>2000 மக்கள் மாண்டுள்ளனர்!