கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி அங்கு ஆட்சியைக் கவிழ்த்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் ஆட்சி பாஜக ஆட்சியாக மாறியதால் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவுக்கும் எடியூரப்பாவுக்கும் இடையில் எழுந்த மோதலால் எடியூரப்பாவை ராஜிநாமா செய்ய வைத்து பசராஜ் பொம்மையை முதல்வராக்கியது பாஜக.
சில மாதங்கள் அமைதியாக இருந்து எடியூரப்பா இப்போது மோடிக்கு எதிராகக் கருத்து கூறியுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் தாலுக்கா தேர்தல், மேலவை உறுப்பினர்கள் தேர்தல் , இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. மேலும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க முனைப்புக் காட்டி வருகிறது.
இந்நிலையில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று தேவனாகிரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “கர்நாடக சட்டப்பேரவைக்கான கடந்த தேர்தலிலும் கூட நாம் நமது சேவைகளைச் சொல்லி வெற்றி பெற்றோம்.
மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை என்பதை ஒவ்வொரு தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார். எடியூரப்பாவின் இந்த பேச்சால் பா.ஜ.க டெல்லி தலைமையிடம் அதிருப்தியடைந்துள்ளது.