பிரதமர் மன்மோகன்சிங் சிங்கம் போன்றவர். அவருக்கு மரத்தின் உச்சியில் உள்ள ஒரு குரங்கு சவால் விட முயற்சி செய்கிறது. சிங்கம் ஒரு நாளும் மரத்தில் ஏறாது. ஆனால் மரத்தின் உச்சியில் உள்ள குரங்கு என்றாவது ஒருநாள் தரைக்கு வந்தே தீர வேண்டும் என பேசியுள்ள, அர்ஜுன் மொத்வாடியா மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர், பிரகாஷ் ஜாவேத்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை குரங்குடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே செய்தியாளர்களிடம் பிரகாஷ் ஜாவேத்கர் கருத்துத் தெரிவித்தார். குஜாரத் முஸ்லீம்கள் மீது இனப்படுகொலையக் கட்டவிழ்த்துவிட்டு 2000 மேற்பட்ட முஸ்லீம்களைப் படுகொலை செய்த இனக்கொலையாளி மோடியை குரங்கிற்கு ஒப்பிடுவதா?