மோடி அரசை விமர்சிக்க வேண்டாம் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என, அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கருத்துக்களைக் கண்டு அஞ்சும் பாசிஸ்டுக்கள் உலகம் முழுவதிலும் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். தமிழ் நாடு காவிகளின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கமலிருக்க ஆறு மாதங்கள் காலக்கெடு விதித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐரோப்பியப் பாரளுமன்றத் தேர்தலில் பிரித்தானியாவில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சி என்ற பாசிசக் கட்சி அதிகப்படியான வாக்குக்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது. இந்திய பாசிஸ்ட் மோடி மட்டுமல்ல உலகின் அனைத்து பாசிஸ்டுக்களும் விமர்சனம் தொடர்பாக ஒரே வகையான அச்சத்தையே கொண்டுள்ளனர்.
மேலும் கூறிய ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் முக்கிய கோரிக்கைள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான், எதிர்பார்ப்பு; அமைச்சர் பதவியல்ல. காங்., அரசு இருந்த போது, எப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகத்துக்கு அமைச்சர் பதவிகள் அளிக்கப்பட்டன. அதனால், எந்த நன்மையும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. எனவே, தமிழகத்துக்கு அமைச்சர்கள் முக்கியமல்ல, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் முக்கியம். என்னைப் பொறுத்தவரை, தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடித்துவிட்டு, வீடு திரும்ப வேண்டும். இதற்கு, உரிய பாதுகாப்பை, மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பது தான், முதல் கோரிக்கையாக உள்ளது.
ஆக, தமிழகத்திலுள்ள காவிப்படைகளின் துணைப்படைகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், ராஜபக்சவோடு தேனிலவும் சென்றாலும் விமர்சிக்க வேண்டம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் ராதாகிருஷ்ணன்.
யார் நீங்கள்…,எங்கள் தேசம் பற்றிய பிரச்சினையில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை…????? உள்ளது. ராஜ பக்ஷேயைவிட இனப்படுகொலையாளிகள் நீங்கள்தான் ,-சொந்த இனத்தையே அழித்த நீங்கள்தான் இனப்படுகொலையாளிகள்