பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போய்விட வேண்டியதுதான் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிராஜ்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குஜராத்தில் மனிதப்படுகொலையை முன்னின்று நடத்திய நடத்திய மோடி என்ற இனக்கொலையாளியின் பாசிசக் கருத்துக்க்கள் பதவிக்கு முன்பாகவே சமூகத்தில் விதைக்கப்படுகின்றது. மோடி என்ற மனித குலத்தின் அவமானச்சின்னம் விதைக்கும் இந்துத்துவ வன்முறைகளுக்கு இது வெளிப்படையான உதாரணம். ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்ட இந்திய ஒட்டு முதலாளித்துவமும் ஒட்டு ஜனநாயகமும் காங்கிரசையும், அது தொய்ந்து விழும்போது அதன் அடுத்த கட்டப் பாசிசமான மோடியையும் அழைத்துவருகிறது. ஜார்கண்டில் உழைக்கும் மக்கள் இவர்களைத் தெரிந்துவைத்துள்ளார்கள்.
கிரிராஜ் சிங் கூறியதாவது: “நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுக்க யாரெல்லாம் நினைக்கிறார்களோ அவர்கள் பாகிஸ்தானை நோக்கி சென்றுவிட வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் கிடையாது. அவர்களுக்கு பாகிஸ்தானில் மட்டுமே இடம் உண்டு” என்று தெரிவித்தார். பசு வளர்ப்புக்கு சலுகைகளை வழங்காத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கி வருகிறது’ என்று தெரிவித்தார்.
கிரிராஜின் இக்கருத்து நாடெங்கும் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு கட்சிகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இப்பிரச்சாரத்தின் போது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நிதின் கட்காரி உடனிருந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.