24.09.2008.
உலகில் ஊழல் மோசடி இடம்பெறும் 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை 92ம் இடத்தை வகிப்பதாக சர்வதேச ட்ரான்பெரன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. |
ஊழல் மோசடிகளை மேற்கொள்ளும் நாடுகள் வரிசையில் சோமாலியா, பர்மா மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் முன்னணி வகின்றன.
இதேவேளை, ஊழல் மோசடிகள் நடைபெறாத நாடுகளில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தை வகிக்கின்றன. சிங்கப்பூர், பின்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முறையே மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன |