ஊழலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமை குறித்து தனக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாணைசெய்ய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்போவதாகவும் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியல் களத்தினுள் நுளைய ஆரம்பித்துள்ளது. இவை அனைத்தும் மைத்திரி-ரனில் கூட்டமைப்பை நம்பி வாக்களித்த அப்பாவிகள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளை ரனில் விக்ரமசிங்க மகிந்தவிற்கு எதிராக நடவடிக்கைகளுக்குத் தடையாகவிருப்பதாக மைத்திரி அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
மைத்திரி – ரனில் முரண்பாடுகளின் மத்தியில் மகிந்த மீண்டும் அரசியலுக்குள் நுளைய முற்படுவதாக பொதுவான கருத்து நிலவுகின்றது.
தான் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதியகட்சியை ஆரம்பிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டாவது பாராளுமன்றத்திற்கு மீண்டும் செல்வேன் என அவர் கூறியுள்ளார். இறுதியில் தேர்தல் என்பது ராஜபக்ச குடும்பத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகளைக் கிடப்பில் போடுவதற்கு மட்டுமே உதவியுள்ளது.
தவிர, அமரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியங்களுக்கான துணை அரச துறைச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கைப் பயணத்தின் பின்னர் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தணிந்துள்ளன. அமெரிக்காவின் நேரடி அடியாளாகச் செயற்படும் ரனில், மகிந்தவிற்கு எதிரான நடவடிக்கைகளைப் பின்போடுவடுவதற்கு அமெரிக்க அரசு பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், சிங்கள ஒடுக்கப்படும் மக்களும் தேர்தல் அரசிலுக்கு அப்பால் அணிதிரள்வது இன்று அவசியமானது.
// அமெரிக்க அரசு பின்னணியில் உள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன
விடிய விடிய ராமாயணம்!
மூக்கைப் பொத்தினால் வாயை ஆ என்று சொல்லத் தெரியாதது புலம் பெயர் தமிழ் அமைப்புகளை ஓட்டும் ஒட்டுண்ணிகளுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. நாசமாகப் போன ஈழத்தீவில் இயங்கும் அத்தனை அரசியல் வாதிகளும் இதே கதியில் தான்.
ஐக்கிய அமெரிக்கா தான் சந்திரிகா, ரணில் கூட்டத்தை ஓட்டுவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழ் அரசியல் எனும் ஏதேனும் அறிகுறி இருந்திருப்பின், அந்த தமிழ் தேசியத்துக்கே அவதூறான மொக்குகளைகயும் ஒரு தசாப்தற்கும் மேலாக ஐக்கிய அமெரிக்காவே ஓட்டுகிறது.
மகிந்த ராஜபக்ச சிறிது துள்ளித் திரிவதும் ஐக்கிய அமெரிக்காவின் அருளாலேயே.
வரும் ஏப்ரல் பொதுத் தேர்தலில் இந்திய உபகண்டத்தை கட்டுப்படுத்துமளவுக்கு ஸ்ரீலங்கா ஒரு புதிய வகை பொருளாதார மையமாக உருவாவதற்கு அடித்தளம் அமைக்கப் படுகிறது.
ஈழத்தில் தமிழர் இனவழிப்பின் தொடர்ச்சியானது, எவ்வளவு மந்த கதியில் தற்போது பயணித்தாலும், இன்று ஐக்கிய அமெரிக்காவை மையப்படுத்திய பொருளாதார மையத்துக்கும் இன்றியமையாததாக ஆகி விட்டது. எவரும் மறந்து கிறந்து போயிராமலிருப்பின் – ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் ஐக்கிய அமெரிக்கா அடி எடுத்துக் கொடுக்க நிகழ்ந்த பாரிய தமிழர் படுகொலைகள் முழுக்கவும் தன்னகப்படுத்தப்பட்டு இன்னமும் மறைக்கப்படவில்லை.
நேற்று ‘மனித உரிமை கண்காணிப்பகம்’ எனும் ஐக்கிய அமெரிக்காவின் அடியாள் என்.ஜி.ஓ ஸ்ரீலங்கா, போர்க்குற்ற விசாரணை, நம்பகத்தன்மை என உளறி வரும் அதே வேளையில் வெளிவிவகார அமைச்சன் நியூயோர்க்-இல் அவ்வமைப்பின் காலிலும் விழுவான் என முன்கூட்டிய செய்தியாகவே வெளியிடப்பட்டது கவனிக்கப்படவேண்டியது.
http://www.ipsnews.net/2015/02/sri-lanka-seeks-u-s-u-n-backing-for-domestic-probe-of-war-crimes-charges/
மகிந்த ராஜபக்ச இன்னொருமுறை ஆட்சியை தப்பித் தவறி கைப்பற்றுவது ஒடுக்கப்பட்ட சிங்கள மக்கள் எழுவதை விட பல மடங்கு சாத்தியமானது. இவை இரண்டையும் ஐக்கிய அமெரிக்காவோ, அதன் அடியாளாக மாறியுள்ள இந்திய வர்த்தகத்தை மையப்படுத்திய அரசியலோ … விடவே விடாது.
மைத்திரி என்று ஒருவன் எங்கோ இருக்கிறான் என்பதை காட்டவே மைத்திரி- ரணில் முரண்பாடு என்ற கதை. மைத்திரி-உக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைப்பாடு கிராமப்புற சிங்களவரை ஏமாற்றி வாக்குப்பெறுவது – அந்த வேலைத்திட்டத்திற்கு உந்து சக்தி அவன் மேலும் இருக்கும் போர்க்குற்றச்சாட்டு. உலகையே சூறையாடும் மகா-ஊழல்களுக்கு வழிவகை செய்ய ஐக்கிய அமெரிக்காவால் நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க-ஐ தட்டிக் கேட்க மைத்திரிபால சிரிசேன யார்?
நான் முன்பு சந்தேகப்பட்டதுபோல் யாவரும் அமொிக்காவுடன் இணைந்து ஆடிய நாடகமாக இது முடிவுறும். அதாவது ராஜபக்ச சா்வதேச விசாரணை என்ற ஒன்றிலிருந்து விடுபட்டபின்பு சா்வ சாதாரணமாக தோ்தலில் வென்று அமொிக்காவின் நண்பராக வலம் வருவாா்.
ரனில் செய்த கொலைகள் சில மகிந்தவுக்குத் தெரியும். அந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு மகிந்த ரனிலை பிளக் மெயில் பண்ணுவதாகவே அரச வட்டாரங்கள் தகவல் நிலவுகிறது. மகிந்தவுக்கு எதிராக 30 கொலைக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.. அவை அனைத்தையும் தனிப்பட்ட பழிவாங்கலுக்காக சரத் பொன்சேகா வெளியே கொண்டுவர முற்பட்ட போதும் ரனிலே தடுத்துவருவதாக சரத் பொன்சேகா தனக்கு நெருங்கிய ஒருவருக்குத் தெரிவித்துள்ளார். செய்தியில் சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தால் மகிந்தவையும் பாதுகாக்க ரனிலை பிரதமாராக்கியிருப்பது அமெரிக்காவாகவும் இருக்கலாம்.