இலங்கையில் நிலைகொண்டுள்ள மாடிசன் (madison worldwide ) என்ற நிறுவனம் இலங்கையில் மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகிப்பதாகத் உறுதிப்படுத்தப்டாத உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமடும் குஜராத் இனக்கொலையாளியுமான நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை நிர்வகித்து ஆலோசனை வழங்கிய நிறுவனங்களில் ஆப்கோ மற்றும் மாடிசன் ஆகிய நிறுவனங்கள் பிரதானமானவை.
தேர்தலில் வாக்குக் கேட்கும் கிரிமினல்களின் மக்கள் மத்தியிலான புதிய விம்பம் ஒன்றை உருவாக்குவதற்கும் அவற்றை பரவலாக்குவதற்கும் இவ்வாறான நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வேட்பாளர்களின் நடை, உடை, பாவனை போன்ற அனைத்தையும் சொல்லித்தரும் இந்த நிறுவனங்கள் பல பில்லியன் டொலர்களைக் கட்டணமான அறவிடுகின்றன.
மாடிசன் நிறுவனத்தின் கிளைகள் இந்தியா இலங்கை தாய்வான் ஆகிய நாடுகளில் செயற்படுகின்றன.
வன்னிப் படுகொலைகளின் பின்னர் மகிந்த ராஜபக்ச தொடர்பான பொது அபிப்பிராயத்தை உயர்த்துவதற்காக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பெல் பொட்டிங்டர் என்ற நிறுவனம் பயன்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தைக் கையாண்டவர் ராஜித சேனரத்ன என்ற அரசாங்க அமைச்சர். இப்போது மகிந்தவின் எதிரணியில் அங்கம் வகிக்கும் ராஜித பொது உறவுகளைப் பேணும் நிறுவனம் ஒன்றைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்தை முகாமைத்துவம் செய்த நிறுவனம் ஒன்றையே தாம் அமர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
இந்தியாவைத் தலைமையகமாக் கொண்ட மாடிசனுக்குரிய பணத்தை இந்தியப் பல்தேசிய நிறுவனங்களும், இந்திய அரசும் வழங்குகிறதா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.