இலங்கைச் சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிடும் மைத்திரிபால சிரிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமைய போன்ற அடிப்படைவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. இதற்குப் பதிலளித்த ஜே.வி.பி இன் மாகாணசபை உறுப்பினர் லால் காந்த் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உண்தங்களுக்கு விருப்பமான எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஆதரவளிக்கவும் உரிமையுண்டு. அதற்கு எதிர்ப்பை வெளியிட எவருக்கும் அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு உள்ளிருந்தோ அல்லது வெளியில் இருந்தோ ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பூரண சுதந்திரமும் உரிமையும் உண்டு என மேல் மாகாணசபை உறுப்பினர் கே.டி.லால்காந் தெரிவித்தார்.
ஆதரவளிப்பதற்கே அச்சப்படும் அவலத்தினுள் சிறுபன்மைத் தேசிய இனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அன்னிய நாடுகளை மட்டுமே நம்பி, ஏகபோக அரசிசுகளின் எழுதப்பட்ட அடிமைகள் போன்று செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இரண்டு பேரினவாதக் கூட்டமைப்பில் ஒன்றைத் தெரிவு செய்து வாக்குப் பொறுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்துவதன் ஊடாகவே ஆட்சியைக் கையகப்படுத்தும் அழிவு அரசியலையே மகிந்தவும் மைத்திரியும் முன்வைக்கின்றனர்.
மைத்திரி ஆட்சியில் அமர்த்தப்பட்டாலும் இனவழிப்புத் தொடரும் என்பதை அவரின் வாக்குமூலங்கள் தெரியப்படுத்துகின்றன. இலங்கையில் தலைவிரித்தாடும் வறுமை, வேலையின்மை போன்ற பல்வேறு அரசியல் சமூகச் சீரழிவுகள் மகிந்தவும் மைத்திரியும் முன்வைக்கும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலேயே தோன்றுகின்றன. தேர்தலுக்குப் பின்னர் மைத்திரி வெற்றிபெற்றாலும் இனச்சுத்திகரிப்பை தொடர்வதன் ஊடாகவே இப்பிரச்சனைகளை கையாளலாம்.
ஆக, ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களும், ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் தம்மை அணிதிரட்ட ஆரம்பிப்பதும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான சுய நிர்ணைய உரிமைக்கான போரட்டத்தை முன்னெடுப்பதும் அமைதிக்கான முன்நிபந்தனையாகிவிடது..
இவர்கள் ஒன்றும் கதைக்காமல் இருப்பதே நல்லது.
What’s going on here…?
Why should they stand in their own…?
As a 3rd candidate they can contest…
Then for the first 2 candidates, it’s difficult to get above 50% votes
That time TNA can demand with their proposals &!could show their power…
Then who ever alliance with them, it must be good & healthy alliance…
And good for the country…
The voted Tamil. speaking will then trust them…
For all this if the Tamil speaking Muslims & Tamils unite it’s better for all…
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தமிழ் பயங்கர்வவாதிகளின்
கைகளில் சிக்கி தத்தளித்தது போல் , இப்போ இலங்கையின் அரசியல்
பிரச்சினையும் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்கியுள்ளது. தமிழரையும்
தமிழ் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்து எவரும் பயங்கரவாதிகள்தான்.