மே 18 இன அழிப்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தினர்.
சென்னை
சென்னையில் சைதை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும், கூடவே சிறுவர்களும், பெண்களும் ஏராளமாகப் பங்குபற்றினர்.
திருச்சி
திருச்சியில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம் புத்தூர் நாலு ரோடு பகுதியில் நடைபெற்றது.
கோவை
கோவையில் புஜதொமு தோழர் விளவை ராமசாமி தலைமையில் ம.க.இ.க தோழர் மணிவண்ணன் உரையாற்ற மே 18 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும், உள்நாட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் விளக்கி தோழர்கள் உரையாற்றினர்.
போர்க்குற்றவாளியான ராஜபக்ஷே மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைத் தண்டிக்கக் கோரும் ஆர்ப்பாட்டம் மே 18 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலின் முன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாமாண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ம.க.இ.க வைச் சார்ந்த தோழர் மயில்வாகனன் உரையாற்றினார். புஜதொமு தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி
தருமபுரியில் விவிமு தோழர்கள் காலை 11 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ம.க.இ.க என்ற அமைப்பு ஈழ விடுதலைக்கு எதிரானவர்கள். .சிங்கள பாட்டாளி வர்க்கம், சிங்கள பெளத்த இனவெறி பாசிசத்துக்கு பலியாகி முழ்கிகிடக்கும் நிலையில் இலங்கையில் ஒன்றுப்பட்ட புரட்சிதான் என தனது அணிகளை ஏய்த்து வருகிறது. எனெனில் ஒட்டுமொத்த இந்தியப் புரட்சி சொல்லும் இவர்களுக்கு எவ்விடத்திலும் தேசிய விடுதலை கூடாது என்பதுதான் நிலை. எனினும் தமிழகத்தில் ஈழப்போராட்டம் பற்றி பேசாமல் இருக்க முடியாது.உலகத்தமிழர்களையும்,தமிழகதமிழர்களையும் ஏய்க்கவே இவார்ப்பாட்டம்.இந்திய அரசு எப்படி தேசிய இனங்கள் பிரிந்து செல்லக்கூடாது என கருதுகிறதோ, அதே நிலைதான் ம.க.இ.க வின் நிலையும்.
மே 2011 பு.ஜ வில் எழுதிய கருத்து: இந்திய அரசு இலங்கையில் மட்டுமா ? இனப்படுகொலை நடத்தியது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இனப்படுகொலை செயயவில்லையா ? என எழுதி இந்தியாவை பாதுகாக்கும் சேவையை செய்தது. அக்கட்டுரையில் இந்திய அரசை இனப்படுகொலை அரசு என்றோ ? போர்க்குற்றவாளி என்றோ சொல்லவில்லை. ஐ.நா எப்படி இந்தியாவை காப்பாற்றுகிறதோ அதே வேலை தான் ம.க.இ.க வும் செய்கிறது.மே 18 இயக்கத்தில் இந்திய அரசை இணைத்து கொள்கிறது. என்ன அதன் ஏமாற்று வேலை. திட்டத்தில் ஒன்றும் நடைமுறை வேறொன்று என தமிழக மக்களை எய்த்து வருகிறது.இந்த போலியான போராட்டங்களை கண்டு யாரும் எமாற வேண்டாம் .
சுய நிர்ணய உரிமை என்பதே பிரிந்து போகும் உரிமை என்று கூறும் ஒரே இடது சாரி அமைப்பு ம.க.இ.க மட்டும்தான். அவர்கள் உங்களைப் போல இனவாதிகளை மட்டும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை,
ஈழவிடுதலைப்போர் என்றும், சுய நிர்ணய உரிமை என்றும் மாறி மாறி ஏழுதி ஏன் மக்களை ஏய்றிர்கள். அதன் தந்திரம் தான் என்ன?
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பார்த்து தமிழகத்தில் பல அமைபபுகள் போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அவற்றில் முதன்மையான அமைபபு ம.க.இ.க. அதே நேரத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சில செயல்களை அவர் விமர்சித்திருக்கிறார்கள்.எவ்வளவுதான் இன உணர்வு இருந்தாலும் ஒரு இனத் தலைவனை அவனின் தவறான செயலபாடுகளை விமர்சிக்காமல் அப்படியே ஏற்று வழிபடுவது என்பது ஒரு வகை முட்டாள்தனமே அன்றி வேறில்லை..