வரலாறு தான் அதன் அதன்மீது ஆளுமை செய்யும் மனிதனின் பாத்திரத்தையும் உருவாக்குகிறது என்பார்கள். ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம் உருவாக்கிய சமூகச் சூழல் பல சிந்தனையாளர்களை உருவக்கியது. புதிய தத்துவார்த்த விவாதங்கள் தேடல்களை உருவாக்கியது. இறுதியில் கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் போன்ற உலகத்தின் தத்துவார்த்த அடிப்படையையே மாற்றியமைத்த மேதைகளையும் உருவாக்கித் தந்தது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் வளர்ச்சி நிலையில் இருந்த காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான சஞ்சிகைகளும், வெளியீடுகளும் தத்துவார்த்த விசாரணையை நோக்கமாகக் கொண்டு வெளிவந்திருந்தன. உலகமயமாதல் ஐரோப்பாவில் ஏற்படுத்திய அமைப்பியல் நெருக்கடி ஐரோப்பாவில் தத்துவார்த்த சிந்தனை மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளியல் வல்லுனர்கள், சமூக விஞ்ஞானிகள், தத்துவவியலாளர்கள், அரசியல்வாதிகள் எல்லாம் கார்ல் மார்க்ஸ் சொன்னது உண்மையானது என்று வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டனர். கார்ல் மார்க்சைக் மனித விரோதி என்று வர்ணித்தவர்கள் எல்லாம் இன்று மாமேதை என்கின்றனர்.
மனிதகுலத்தின் கண்முன்னே வன்னி மண்ணில் இலங்கையில் பெருகிய இரத்த ஆறு உலகத்தைத் திகைத்துப் போக வைத்திருக்கிறது. முப்பது வருடங்களாகப் புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்த மாயை தகர்ந்து போனது. அமரிக்காவின் மீதும்,ஐக்கிய நாடுகள் சபை மீதும், ஐரோப்பாவிலும்,இந்தியாவிலும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போனது. மக்கள் அனாதரவாகக் கொலைகாரர்களின் மத்தியில் துரத்திவிடப்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும் நிலை உருவானது. அதிகார வர்க்கத்தின் மீதான வெறுப்பும், அருவருப்பும் அதிகரிக்க மக்கள் புதியவற்றைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதிலும் புலம்பெயர் சூழலில் இந்தத் தேடல் பல புதிய சக்திகளைச் சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. பேரழிவின் விழிம்பில் நிற்கும் இலங்கை மக்களும் இதே தேடலையும் அதற்கான ஒழுங்குபடுத்தலையும் ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இத்தேடல் உருவாகும் போதே மக்களின் மத்தியிலிருந்து முன்னணிச் சக்திகளும் உருவாகின்றார்கள். அவர்கள் தங்களது கடமையையும் சுமையையும் உணர்ந்து கொள்கிறார்கள். முதலாளித்துவக் காலகட்டத்தின் சூழல் மார்க்சியத்தை மனிதகுலத்தின் முன்னணித் தத்துவமாக மாற்றியதும் இவ்வாறுதான்.
எண்பதுகளில் நாம் எல்லோரும் இழைத்த தவறுகள் புலிகளை வளர்த்தெடுத்தது. ஹிட்லரின் ஜேர்மனிய மக்கள் போலவே, 90 களின் பின்னர் புலிகளின் பாசிசத்துள் மக்கள் கட்டுண்டு அனைத்து மாற்று வழிகளையும் நிராகரித்தார்கள். தொடர்ந்த நமது தவறுகளெல்லாம் மேலும் மேலும் அரச பாசிசத்தையும் அதன் ஆதரவுத் தளங்களையும் வளர்த்தது. இதுவே புலிகளின் தவறுகளையும் பாசிசத்தையும் மக்கள் வெற்றிகொள்வதற்கு மாறாக அரச பாசிசத்தின் அழிவிற்கு உட்படும் நிலை உருவானது.
இவ்வாறு மக்கள் தம்மை ஒழுங்கு படுத்தலுக்கான தேடலின் விளைவாக புதிய சமூகத்தின் முன்னோடிகள் உருவாகிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவையும், அழிவிற்குப் பின்னான ஜேர்மனியையும், படுகொலைகளுக்குப் பின்னான ருவாண்டாவையும், ஆக்கிரமிப்பிற்குப் பின்னான ஈராக்கையும் நினைவுபடுத்தும் இவையெல்லாம் செயற்கையான மாற்றங்களல்ல.
ஒவ்வொரு போராட்டமும், அதற்கான வெற்றிடமும் உருவாகும் போதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது நிலையை அங்கு உறுதிசெய்துகொள்ளத் தலைப்படுதலே இதற்கான பின்புலம் எனக்கருதலாம். ஆனால் வரலாறு தெரிவிப்பதைப் போலவே இவையெல்லாம் செயற்கையானவையல்ல.
இந்த மாற்றங்களின் திசை வழி என்ன, உலகத்தை அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள், முரண்பாடுகள் குறித்து அவர்களின் நோக்கு என்ன என்பவற்றின் அடிப்படையிலிருந்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
இந்த ஆரோக்கியமான சூழலில், சிரிப்புமூட்டும் அரசியற் கோமாளிகள் ஒரு புறம் யாராவது ஏதாவது சொன்னால் தங்களைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் என்கிறார்கள்.
வரலாற்றின் இன்றைய காலப்பகுதி உருவக்கும் பல முன்னணிச் சக்திகளுகு மத்தியில், மே 18 இயக்கமும் ஒன்றாகும். இது இன்னொரு வரவு. விவாதங்கள் வேண்டும் என்கிறது. இவர்களது உலகப் பார்வை குறித்தும், அதை முன்கொண்டு செல்ல எத்தனிக்கும் முறைமைகள் குறித்தும் நிறைய முரண்கள் இருந்தாலும், இவையெல்லம் செயற்கையான எழுச்சிகள் அல்ல.
இரண்டு உலகப்பார்வைகள் தான் உள்ளன. ஒன்று கற்பனையானது,மற்றது சமூகம் சார்ந்தது. சமூகம் சார்ந்த பார்வை சமூக உறவுகளின் வளர்ச்சி சார்ந்தது அதனை அணுகுவது. சமூக உறவுகள், அதிலும் சமூகத்தில் உற்பத்தி சக்திகளிடையேயன உறவு அதாவது வர்க்கங்களிடையேயான உறவுகளை அடிப்படையாக(பொருளாக) முன்வைத்து சமூகத்தை உணர்ந்து கொள்வதென்பது பொருள்முதல்வாதப் பார்வை எனப்படுகிறது.
இந்தப் பொருளின் (அதாவது சமூக வர்க்க உறவுகளின்) வளர்ச்சியும் இயகமும் இயங்கியல் எனப்படுகிறது. இதனை அடிப்படையாகக முன்வைத்து சமூகத்தை ஆராய்தல் என்பதும் அதிலிருந்து எவ்வாறு முடிபுகளை அடைதல் என்பதும், இலங்கை இனப்பிரச்சனையில் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது.
உலகின் பல பிரச்சனைகளிலும் இந்த விஞ்ஞான பூர்வமான உலகப் பார்வையின் புறக்கணிப்பைக் கண்டுகொள்ளலாம். பொருள் முதல் வாதம் என்பதைப் பொருளாதார வாதம் எனத் தவறாகக் கருதுபவர்கள் கூட உண்டு.
மே 18 இன் கோட்பாட்டு இதழான வியூகம், பொருள்முதல் வாத இயங்கியலை தனது உலகப் பார்வையாகவோ, ஆராய்வதற்கான முறமையாகவோ முன்வைக்கவில்லை.. ஆக, மார்க்சிய வழிமுறை இருப்பதகத் தெரியவில்லை. மார்க்சியத்தில் பற்றுக்கொண்டவர்களாகக் கூறும் மே 18 இன் எதிர்வரும் இதழ்கள் பொருள் முதல்வாத இயங்கியலின் அடிப்படையில் வியூகம் அமைத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்போம்.
நட்புடன் நண்பர்களுக்கு….
எனக்கு இவ்வாறு அடிக்கடி பின்னுட்டம் இடுவதில் உடன்பாடு இல்லை. நமது எழுத்துக்கள் ஆக்கபூர்வமான ஒழுங்கமைக்கப்பட்ட (வீயூகம் ஆய்வு இதழ்(?)போல) ஒரு செயற்பாடாக இருக்கவேண்டும். அந்தடிப்படையில் அவர்களது செயற்பாட்டிற்கு நாம் தலைவணங்கவேண்டும். ஆனால் அதன் கருத்துக்களுக்கள்ள…
“நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார்.” எனக் கூறுகிறார் ரகுமான் ஜான்.
இங்கு ஒரு முக்கியமான பிரச்சனையை இவர் தவறவிடுகின்றார் என்றே நான் கருதுகின்றேன்….
நான் மேலோட்டமாக மாக்சியத்தை அறிந்தளவில் அது இந்த சமூகங்கள் எவ்வாறு ஜான் கூறுவது போல் சமூக உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதற்கு வசதியாக கட்டமைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்வாறான ஒரு சமூகப் பார்வையை தந்நதமைக்க்கா நாம் என்றும் கார்ல் மார்க்ஸிற்கு மதிப்பளிக்கவேண்டியவா;களாக உள்ளோம். ஆனால் அதற்காக அவர் கூறியதனைத்தையும் வேதவாக்காக காண்பதற்கு முற்படுவோமாயின் மீண்டும் தவறு விடுவோம்….
அவரது தீர்கதரிசனத்தின்படி சோஸலிச புரட்சி எதிர்பார்த்த நாடுகளில் நடைபெறவில்லை…
இரண்டாவது இவரது கோட்பாட்டினடிப்படையிலும் மற்றும் லெனினால் மேலும் மெருகுட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மார்க்ஸிய கோட்பாட்டின் அடிப்படையில்
முன்னெடுக்கப்பட்ட ரஸ்சிய புரட்சி ஒரு ஸ்டாலினைத்தந்தது…
ஐனநாயம் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்பியது….
மார்க்ஸியம் லெனினிஸம் சோவியத் யூனியனின் வேதமானது…
இவ்வாறு வளர்ந்த இந்தக் கோட்பாடு…
ஒரு பொல்பொட்டையும் தந்நது….இப்படி பல உதராணங்களை தனிநபர் பங்களிப்புக்கு காண்பிக்கலாம்…
மேலும் ஹிட்லர் போன்ற தனி நபர்கள் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை மறுதலிக்க முடியாது….
இதுபோன்று தமிழ் பேசும் மனிதர்களின் சமூகங்களின் (சசிவன்) தலைவராக உருவான பிரபாகரன் என்ற தனிநபரால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளையும் புறக்கணிக்கமுடியாது…
(இங்கு புறக் காரணிகளின் பங்களிப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கும் அப்பால் தனிநபர் பாத்திரமும் முக்கியத்துவமானது என்பதே எனது கருத்து.)
ஏன் தீப்பொறியாக இருக்கட்டம் உயிர்ப்பு சஞ்சிகையாக இருக்கட்டும் அல்லது தமிழீழ மக்கள் கட்சியாக இருக்கட்டும் இவற்றுக்குள் உருவான முரண்பாடுகளில் தனிநபரின் பங்களிப்புகள் எந்தளவு முக்கியத்துவமானது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கியமான விடயம்…
இது மே 18 இயக்கத்திலோ அல்லது வீயூகம் குழுவிற்குள்ளோ ஏற்படாது என்பதற்காக எந்த உத்திரவாதமும் இல்லை…
முன்னேறிய பிரிவினர் என்பது கேள்விக்குரியது…
மேற்குறிப்பிட்டவாறு மார்க்ஸியத்தை தமது கோட்பாடாக கொண்டு செயற்பட்ட பல முன்னேறிய பிரிவனர் தான் பல மனித சமூகங்களை அடக்கவும் அழிக்கவும் வழிகாட்டியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை….
ஆகவே “முன்னேறிய பிரிவினர்” என்று கூறுவது மட்டும் அந்த முன்னேறிய பிரிவினர்கள் செய்வதை நியாயப்படுத்திவிடாது…
முன்னேறிய கோட்பாடு ஒன்றை (விளக்கமில்லாது) நம்புதால் மட்டும் அல்லது அல்லது ஏற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் முன்னிறேய பிரிவினர் ஆகிவிடமுடியாது….
இனிவரும் காலங்களில் முன்னேறிய பிரிவினர் என்பது கோட்பாடுகளை விளக்கிக் கொள்வது மட்டுமல்ல அதற்கும் மேலாக தன்னளவில் (ஊளவியல் அடிப்படையிலும் ) முன்னேறியவராக இருக்கவேண்டும்….மேலும் ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டும்…அதுவே நம்பிக்கையை வளர்க்கும்…
அல்லது “நிலவிலே பேசுவோம்”
(இது குறிப்பிட்ட ஒரு நபரை தாக்குவதற்காக எழுதப்பட்டதாக கூறியபொழுதும்…இவ்வாறான ஒரு போக்கு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது)
என்ற நடைமுறைவாழ்வுதான் முன்னேறிய பிரிவினர் மத்தியில் இருக்கும்.
இது இன்னுமொரு முள்ளிவாய்காலை நோக்கி செல்லவே வழிவகுக்கும்…
நண்பர்களே! எனது விமர்சனம் யாரையும் இழுத்துவிழுத்துவதற்கல்ல….மாறாக ஒரு ஆரோக்கியமான செயற்பாட்டை நோக்கிச் செல்வதற்கான விருப்பத்தின் அடிப்படையிலையே எழுகின்றது… முதலில் குழு மனப்பான்மையில் இருந்து வெளிவரவேண்டும்….
இரண்டாவது பலர் இங்கு சிறு சிறு துண்டுகளாக பல்வேறு கடந்தகால வரலாறுகளையும் அதற்கான விமர்சனங்களையும் பின்னுட்டங்களாக இங்கு விட்டுச் செல்கின்றனர்….இதைவிடுத்து வீயூகம் ஆய்வு நுhல் போல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விரிவாக எழுதி வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும்….
சுயவிமர்சனம் என்பது மிகமுக்கியமானது…இது மற்றவருக்கு நல்லவரா இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு முதல் ஒரு தனிநபரளவில் அவருக்கு ஒரு நிழல் கண்ணாடியாக இருந்து தனிநபரில் மாற்றத்தை உருவாக்கும்….இந்த மாற்றமே நம்பிக்கையை வளர்க்கும்…ஆகவே புதிதாக இயக்கங்களையோ கட்சிகளையோ கட்ட முனையும் ஒவ்வொருவரும் தமது கடந்தகால செயற்பாடுகள் சிந்தனைகள் தொடர்பான பக்கச் சார்பற்ற சுயவிமர்சனத்தை முன்வைக்கவேண்டும்….இதற்கு யாராவது தயங்குவார்களாயின் அவர்களது செயற்பாடு சந்தேகத்திற்கிடமானது மட்டுமல்ல கேள்விக்குட்படத்தப்படவேண்டியதுமாகும்….
நண்பர்களே நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்ல…
இன்றிலிருந்து ஆரோக்கியமான விரிவான சுயவிமர்சனங்களை சமூக மாற்றத்திற்காக அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக செயற்பட விரும்பும் ஒவ்வொருவரும் முன்வைப்போமா?
நம்பிக்கையுடன்
மீராபாரதி
மனிதகுலவரலாறு சமாந்தர நேர்கோட்டில் வந்ததுமில்லை; போவதுமில்லை. மனித சமுகம் பன்முகத்தன்மை கொணடது. அதன் தொழிற்பாடு சமுகத்தில் ஊடுருவி பர்னமிக்கும். இதனுர்டே பலதரப்பட்டவர்களிள் ஆளுமைகளும் செயற்பாடுகளும் முதன்மைப்பாத்திரம் வகிக்கும். இதனாலேயே மாவோ நுர்று மலர்கள் மலரட்டும் ஆயிரம கருத்துக்கள் முட்டி மோதட்டும் என்றார். புலிகளின் அழிவிற்கு பின்னான அரசியல் வெற்றிடம் பலதரப்பட்ட வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. இந்நிலையிலேயே மே 18 இயக்கமும் தோன்றியுள்ளது; இதுவும் இதன்மீதும் பெரும் கேள்விகளும் விர்சனங்களும் வைக்கப்படுகின்றன. அது விமர்சனம் சுயவிமர்சனங்களுக்கு ஊடாக மக்கள் நலன் சார்ந்து சென்றால் தன் குறித்த இலக்கை நோக்கிச் செல்லும். வரலாற்pறப் படைப்பவர்கள் நாம் அல்ல. மக்களே.
எனது பின்னுட்டத்திற்கான பின் குறிப்பு……
சசீவன் – சிறுபான்மைச் சமூகங்கள் மீதான ஆவணப்படுத்தலின் அரசியல் –
க்ட்ட்ப்://ச்கசேவன்நெப்லொக்.ப்லொக்ச்பொட்.சொம்/2009/12/0.க்ட்ம்ல்
“எண்பதுகளில் நாம் எல்லோரும் இழைத்த தவறுகள் புலிகளை வளர்த்தெடுத்தது”
புலிகள் தமது பாசிச வலிமுறைகளை மட்டும் கைக்கொள்ளாமல் இருந்திருந்தால், சில போது தமிழீலம் இன்று உருவாகிருக்கும்.
தோழர் சபாநாவலன் அவர்களே, உங்களின் சில கட்டுரைகளை வாசித்தவற்றிலிருந்து ஒரு மார்க்சிய வாதி என்ற முறையில் சில கருத்துக்களை தெரிவிக்கவிரும்புகிறேன்.
1. மார்க்சியம்=புரட்சி, புரட்சி=மார்க்சியம் என்ற அகநிலை பொருள்முதல்வாதப் பார்வையை கைவிடுங்கள்.
2. புரட்சிக்கான அணுகுமுறைகளை முன்வைக்க முடியாத சமூக வரலாற்றுக்கட்டங்களை அங்கீகரியுங்கள்.
3.உங்கள் கருத்துக்கள் 1960 க்கும் பொருந்தும் .80 க்கும் பொருந்தும்,2020 க்கும் மாறாது. .ஏனெனில் அதில் இயங்கியல் இல்லை.ஆனால் உலகமும் ஈழநிலைமைகளும் இயங்கியலையே கொண்டிருக்கின்றன.
4. மேலும் நமக்கு அப்பால் புறவயமாக போக்கு எடுத்திருக்கும் ஈழவிடுதலை என்ற எதார்த்தத்தை அங்கீகரிக்காததால் பொருள்முதல்வாதப் பார்வையையே கைவிடுகிறீர்கள்.அதற்க்கு மாற்றாக புரட்சியை அகவயமாக முன்வைத்து, புறத்தை அங்கீகரிக்கும் புறநிலை கருத்துமுதல்வாதியாகக் கூட இல்லாமல்,எண்ணங்களிலிருந்து(புரட்சி) எதார்த்தத்தை பார்க்கும் அகநிலைக் கருத்துமுதல்வாதியாகவே இருக்கிறீர்கள்.
5 மார்க்சியத்தில் எதார்த்தத்தை விளங்கி கொள்ளவே சமன்பாடுகள் உள்ளன.மாற்றுவதற்கு சமன்பாடுகள் இல்லை. அப்படி இருப்பதாக யார் கருதினாலும் அது மானிடவிடுதலைவரை நடைமுறைச் சோதனைக்கு உட்பட்டதுதான்.புரட்சி என்பது அத்தகைய சமன்பாடு அல்ல. புரட்சி என்பது தவிர்க்க முடியாத விதி அல்ல. அது இடம் காலம் சூழல் சார்ந்த வாய்ப்பு.இந்த வாய்ப்பு 19 ம்நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இருந்தது.அதன் பிறகு ஐரோப்பா தவிர்த்த பிற பகுதிகளில் இருந்தது. தற்போது பொதுப்போக்காக இல்லாமல், தனிச்சிறப்பு கொண்ட வாய்ப்பாக உள்ளது.மீண்டும் நினைவு படுத்துகிறேன்,19 ம் நூற்றாண்டிலிருந்து புரட்சி ஒரு வாய்ப்பாகவே இருந்துவருகிறது,விதியாக அல்ல. எனவே இலங்கையில் மற்ற நாடுகளில் அல்லாத தனிச்சிறப்பான புரட்சிக்கான வாய்க்ப்புகள் இருப்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டும். அப்புரட்சி அண்மையானதகவும்,ஈழ மக்களின் உடனடி இன விடுதலைக்கு அண்மித்து இருப்பதையும் நிரூபிக்கவேண்டும்.இவையெல்லாம் முடியாவிட்டால் ஈழவிடுதலையே அம்மக்களின் தீர்வு என முடிவு செய்து அதற்க்கு களம் இறங்கவேண்டும்.நம்பிக்கையுடன் பிரபாகரன்.(praba.k865@gmail.com)
மார்க்சியத்தில் வாய்ப்பாடுகளோ சமன்பாடுகளோ இல்லை.
ஒரு விஞ்ஞான ரீதியான ஆய்வுமுறையே உள்ளது.
பிறகு ஏன் அல்லற் படுகிறீர்கள்?
சுதந்திரத்திற்கு பின்னானஇந்தியாவும்> அழிவிற்குப் பின்னான ஜேர்மனியும்> படுகொலைகளுக்கு பின்னான ருவாண்டாவும் > ஆக்கிரமிப்பிற்குப் பின்னான ஈராக்ககும் எதைை நோக்கிச் சென்றன. – செல்கின்றன. இப்போராட்டங்களின் பின்னான வெற்றிடங்களும் மாற்ளங்களும் மக்கள் நலன் – மக்கள் விடுதலை சார்ந்து செல்லவில்லை. காரணம் இந்த வெற்றிடங்களை கையில் எடுத்தவர்கள் அதிகார வர்க்கத்தினரே. இதை மே 18இயக்கமும் கணக்கில் கொள்ளவேண்டும்.
சபா நா? வலன்? அவர்களே! நல்ல பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு நாக்கு மட்டும்தான் நீளமாக இருக்கிறது. கை குட்டையாகவே உள்ளதோ? அல்லது மடித்துக்கட்டிவைத்துள்ளீர்களோ?
சொல்வது எளிது ; செயல் என்பதுதான் சிரமத்திலும் சிரமம் . இவ்வளவு பொரிந்து தள்ளுகிறிறீர்களே!
சரி ஐயா! உங்கள் கருத்துப்படியே : புலிகள் என்றால் , ‘ பாசிசப்புலிகள்’ , கொடியவர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
இந்தக்கொடியவர்களிடம் எமது மக்களை அம்போ என்று விட்டுவிட்டு , தப்பியோடியவர்தானே நீங்கள்?
பாசிசப்புலிகளாம் பாசிசப்புலிகள்!
உங்கள் ஆதங்கம் எமக்கு நன்றாகப்புரிகிறது; அதாவது, ‘ யாரும் எங்கேயும் எதுவும் செய்யலாம் ; ஆனால் உங்கள் தலைமையை ஏற்றுக்கொன்டால் சரி !
அப்படித்தானே!
சரி! இப்போது சொல்லுங்கள்! நாம் 80 களில் யாருக்கு ஆத்ரவு கொடுத்திருக்கவேனண்டும்?
90 களில் யாருக்குக்குக்கொடுத்திருக்கவேண்டும்?
எந்தச்சிங்களன் வந்தாலும் கால் நக்கிப்பிழைக்கும் _
இவ்வளவு நடந்த பிறகும் ‘ கஞ்சி வாங்கித்தருவதாக டம்பமடிக்கும் , டக்ளஸ் தேவானந்தாவா? அன்றி
புல்லுருவி கருணாவா? பிள்ளையானா?
யாரைக் கைகாட்டப்போகிறீர்கள்?
ஒஹோஹோ ! நீங்கள்தானே உங்கள் பக்கமே காட்டிக்கொண்டிருக்கிறீர்களே !
இனி யாரைக்காட்டவேண்டும்?
கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு.
அன்ப
ரே! உங்கள் மார்க்ஸியம், கம்யூனிஸம் என்ற ஏமாற்றுவித்தைகளின் சாயமெல்லாம் _
சோவியத்யூனியனின் வீழ்ச்சி, கிழக்கு ஐரோப்பாவில் யூகோஸ்லேவியாவின் அராஜகம்,
எல்லவற்றுக்கும் மேலாக, அனைத்து வகையான கம்யூனிஸ்டுகளும்
சிறிலங்காவின் இனப்படுகொலையை ஆதரித்தமை \ நியாயப்படுத்தியமை
_ என்று வெளுத்துக்கொண்டே வருகிறது.
இனியும், உங்களைப்போன்ற
போலிப்புரட்சியாளர்கள் செஞ்சட்டைக்
கு உரிமைகோரமுடியாது.
அது என்றோ , சீமான் போன்ற உண்மைப்புரட்சியாளர்களிடம் போய்விட்டது.
நெஞ்சில் உரமில்லாதவர்களெல்லாம் ஒளிந்து நின்று ஒப்பாரிவைக்க வந்துவிட்டீர்கள்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே !
வாய்ச்சொல்லில் வீரரடி !
You are right Mr. Sivam Amuthasivam!
Mr.Sabanavalan, who wrote this article is a traitor.Such peaple want to capture the leadership only!
We have to recognise and write off them.
சிவம் அமுதசிவத்தின் பின்னூட்டம் காந்தி பற்றிய ஒரு கதையை நினைவூட்டுகிறது.
ஆங்கிலேய இளைஞன் ஒருவன் காந்தியைப் பலவாறாக நிந்நித்துப் பல பக்க நீளத்திற்கு ஒரு வசைப் புராணம் எழுதி அவரிடம் கொடுத்தானாம்.
காந்தி அதைப் பொறுமையாக வாசித்துவிட்டு அதைக் குப்பைத் தொட்டியிற் போட்டாராம்.
ஆங்கிலேய இளைஞனு க்குக் கோபம் தலைக்குமேலேறிக் காந்தியிடம் “இவ்வளவு எழுதினேனே இதில் உங்களுக்குப் பயனுள்ளது எதுவுமே தெரியவில்லையா?” என்று சினந்தானாம்.
காந்தி “எனக்குப் பயனுள்ளதை ஏற்கெனவே எடுத்துக்கொண்டேனே” என்று தாள்களைச் சேர்த்துக் குத்தியிருந்த மொட்டூசியைக் (பின்) காடடினாராம்.
சிவம் அமுதசிவத்தின் பின்னுட்டத்திற் சபா நாவலன் பயன்படுத்த ஒரு “பின்” கூட இல்லையே.