Monday, March 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மே 18 ஆம் நாளில் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலிக்கு அப்பால்…:இனியொரு…

இனியொரு... by இனியொரு...
05/18/2014
in இன்றைய செய்திகள்
0 0
2
Home இன்றைய செய்திகள்

genocideஇன்று இலங்கை அரச பாசிசப் படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட லட்சக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட நாள! . இலங்கை அரசு, அதன் உள்ளூர்த் தொங்கு தசைகள், இந்திய அரசு, மேற்கு ஏகாபோக நாடுகள், புலம்பெயர் புலி வேடதாரிகள், தமிழ் நாட்டின் வாக்குப்பொறுக்கும் அரசியல் வாதிகள் போன்ற அனைவரதும் துணையுடன் மிகத் தந்திரமாகத் திட்டமிட்டு புலிகளும் மக்களும் அழிக்கப்பட்ட நாள்!!

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் மேலும் சிக்கலான அரசியல் சூழலுக்குள் இழுத்துவரப்பட்ட இந்த நாளில் ராஜபக்ச குடும்ப அரசு உலக கிரிமினல் அரசுகளால் பாராட்டப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க அரசு, இந்திய அரசு போன்ற அனைத்து உலக நாடுகளும் சுற்றிவர அமர்ந்து அனாசயமாகப் பார்த்துக்கொண்டிருக்க முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.

குழந்தைகள், முதியவர்கள், நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற அனைவரும் எந்த வேறுபாடுமின்றி சாரிசாரியாகக் கொலைசெய்யப்பட்டு மனிதப் பிணங்களின் மேல் இலங்கையரசு தனது வெற்றியை நிலைனாட்டிக்கொண்டது.

சாரிசாரியாக நடத்தப்பட்ட மனிதப் படுகொலைகளை மீட்பு நடவடிக்கை என உலக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மலைய-முஸ்லீம் தமிழர்களுக்கும் தனது ஊதுகுழல் ஊடகங்களூடாக இலங்கையரசு பிரச்சாரம் மேற்கொண்டது.

உலகின் ஒரு மூலையில் அதிபயங்கரக் கொலைகாரர்களால் ஆளப்படும் பாசிச அரசு எந்த அச்சமும் இன்றி நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று அறிவித்தது.

சிறிது சிறிதாக இலங்கை அரசும் அதன் ஏகபோக எஜமானர்களும் விரும்பிய அரசியல் பொறிமுறை நிலைநாட்டப்பட்டது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இப்படுகொலைகளின் பின்னர், திட்டமிட்டபடியே தமிழ் அரசியல் தலைமை விதேசிகளின் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டெழ வேண்டிய போராட்டத்தை தவறாக வழி நடத்திய தமிழ் அரசியல் தலைமைகள் மக்களிடமிருந்து உண்மைகளை மறைத்தன. போலி நம்பிக்கைகளை வழங்கி போராட்டத்தை முழுமையாகச் சிதைத்து நீண்ட காலத்திற்குப் பிந்தள்ளின. ஐந்து வருடங்களின் தமிழ்ப் பேசும் மக்களின் நிலங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. இராணுவக் குடியிருப்புக்களால் வடக்கும் கிழக்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் வடக்கும் கிழக்கும் நிரப்பப்பட்டுள்ளது. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களால் மக்களின் எஞ்சிய உழைப்பும் கொள்ளையிடப்படுகின்றது.

போராட்டத்தை அழித்தவர்களால் உலகம் முழுவதும் கையகப்படுத்தப்பட்ட தமிழ் தலைமைகள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் விட்டுக்கொடுப்புக்களுக்கும் சரணடைவுகளுக்கும் அப்பால் முன்னெடுக்கபட வேண்டும் என்பதை இந்த நாளில் நினைவுகொள்வோம்.

-இனியொரு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்-தனியாகவே போராடினேன்:அனந்தி சசிதரன்

யாழ்பாண அரசியல்வாதிகள் முதுகெலும்பற்றவர்கள்-தனியாகவே போராடினேன்:அனந்தி சசிதரன்

Comments 2

  1. Sakivara says:
    12 years ago

    தேசியத் தலைவர் இல்லை என இனித்தான் வரும் நவம்பரில்  தமிழ் மக்களை சுடுகாட்டிற்கு அனுப்பியவர்கள் அறிவிக்க போகிறார்களாம் (நெடியவன். விநாயகம். குழு)

  2. Dr. Sri S. Sriskanda says:
    12 years ago

    May 18, 2014. Five years. Celebrations at Matara. War Victory. Be patient. Nest Passover in Jerusalem. Jews waited for 4,000 years. The majority community is taking its own time to move in everything and anything.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...