சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தை பார்த்த எனது மகன் தன்னை ஒரு இலங்கையர் எனவும், பௌத்தர் எனவும் கூற வெட்கப்படுகிறேன் எனத் தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“28 வயதான எனது மகன் பிரித்தானிய தொலைக்காட்சியில் ஆவணப்படத்தை பார்த்த பின்னர் தான் ஓர் இலங்கையர் எனவும், பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த காலை நேரத்தை எனது வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன்” என சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார்.
எனது மகளும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார். எமது நாட்டவர்கள் இத்தகைய பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து அவர் அதிர்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.
ஒரு தேசம் என்ற வகையில் இலங்கையர்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் தன்னடக்கத்தை நாம் கொண்டிருப்போம். எமது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான நேர்மையையும் திருத்தங்களை செய்வதற்கான பெருந்தன்மையையும் நாம் கொண்டிருப்போம்.
நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக நிராகரிப்பது எவரினதும் பிரச்சினையை தீர்க்காது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் தெரிவித்தார்.
இந்த நாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டமே காரணம் என அவர் கூறினார்.
No. Most thought that the Tamils are all Thosai and Gingilly Oil.
மகிந்தரும் ஆட்சி அதிகாரமற்று புலம்பும் இறுதிநாட்களில் அவருடைய சொற்களும், சிந்தனைகளும் இவ்வாறுதான் வெளிப்படும். கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் செய்ய விளையும் தலைவர்களை மிக மிக அதிகமாகக் கொண்டதுதான் சிறீலங்கா என்பதை அவ்வப்போது நிரூபித்துக்கொண்டே இருப்பார்கள்.
முழு புலுடாவையும் பிரசுரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மகன் விமுக்தியின் அரசியல் பிரவேசத்திற்கு அத்திவாரம் போட தனக்குக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் பயன் படுத்த இந்த பெண் தங்குவதில்லைபோல் தெரிகிறது.
சமாதானப் புறா நான் என்று மொத்த இலங்கையரையும் ஏமாற்றி பதவிக்கு வந்த இரத்தக் காட்டேரி பதவிக்காலத்தில் அப்பனின் கொள்கையில் சற்றும் மாறாது எந்த தமிழருடன் பேச்சு வார்த்தை செய்து ஏமாற்றி காலத்தைக் கடத்துவதே எமது கொள்கை என்ற அரசியல் நடத்தி தமிழ் பிரதேசங்களில் இரத்த ஆறு ஓட வைத்த சிங்கள இனவெறி பிடித்த இவரையெல்லாம் ஒரு அரசியல்வாதி என்று தமிழர் மேடையில் பேச அழைக்கிறார்களே, இவர்களை என்ன என்று சொல்வது.
இலங்கைத் தமிழர் வந்தேறு குடி என்று ஒருபோது சொன்ன இப்பெண் இப்போது சொல்வது என்னவெனறால் தமிழ்நாட்டிலிருந்து தமிழர் படை எடுப்பாரென்று இன்றும் சிங்களவர் பயப்படுகிறார்களாம்.
அம்மணி ஆட்சிகட்டில் இருக்கும் போது சிங்களச் சட்டங்கள் அல்லாமல் அரபியர் சட்டமா இலங்கையில் இருந்தது? கணவனையும் கண்ணீரையும் காட்டி தமிழரை ஏமாற்றி சமாதானம் கொண்டுவருவதாக புலம்பி பின் செம்மணி அம்மணியால் உலகப் புகழ்பெற்றது இன்னமும் தமிழர் மனதை விட்டு அகலவில்லை. அகலவும் அகலாது. நிச்சயமாய் விமுக்தியின் உடலில் விஜய குமரரணதுங்காவின் இரத்தம் தான் ஓடுகிறது. எனினும் உங்கள் உடலில் உங்கள் தந்தை தாயின் சிங்கள வெறி இரத்தமே ஓடுகிறது, இனியும் ஏமாற உலகம் என்ன உங்கள் கைப்பையிலா?
அதிலும் அம்மணி ரணிலிடமிருந்து எத்தனை அமைச்சுக்களை பிடுங்கினார்?ரனில் ஒன்றும் சமாதான விரும்பியல்ல,அமெரிக்க அடிவருடி தான்!இருப்பினும் ஒரு வேளை நீடித்திருந்திருந்தால் அழிவு குறைந்திருக்குமோ?(நப்பாசை)
அம்மணியின் கருத்துகளுக்கு காரணம் இன்னும் குடிப்பழக்கத்தை விடாததுதான். நாங்கள் ஏன் பெரிசுபடுத்தவேண்டும்?
just make a comment about his comment