30.11.2008.
சோசலிச கியூபாவின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோவை, ரஷ்ய ஜனா திபதி டிமிட்ரி மெத்வதேவ் நேரில் சந்தித்துப் பேசினார். கியூபாவில் பயணம் மேற் கொண்ட மெத்வதேவ், வெள்ளியன்று ஹவானா வில் 82 வயது தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந் தித்து உலக நிலவரம் குறித்து விவாதித்தார். அதன் பின் னர் அங்கிருந்து மாஸ்கோ புறப்பட்ட போது, ‘பிரேன் ஸா லத்தீனா’ எனும் ஏட் டிற்கு பேட்டியளித்த மெத் வதேவ், பிடல் காஸ்ட்ரோ வுடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், ஏராளமான விஷ யங்கள் குறித்து விவாதித் தோம் என்றும் குறிப்பிட் டார். ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோவை ரஷ்யா வருமாறு அழைப்பு விடுத்த தாகவும் அவர் குறிப்பிட் டார்.
இச்சந்திப்புக்குப் பின் னர் பிடல் காஸ்ட்ரோ எழு தியுள்ள கட்டுரை ஒன்று கியூப அரசு இணையதளத் தில் வெளியிடப்பட்டுள் ளது. அக்குறிப்பில் கியூபா வின் குவாண்டனாமோ வில், அமெரிக்கா ராணுவ தளம் என்ற பெயரில் ஆக் கிரமிக்கப்பட்டுள்ள கியூ பாவுக்குச் சொந்தமான நிலத்தின் கடைசி சதுர அடி வரை திருப்பிக் கொடுக் கப்பட வேண்டும் என்ற கியூ பாவின் நீண்ட கால கோரிக் கையை முழுமையாக ஆத ரிப்பதாக மெத்வதேவ் தன் னிடம் உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எங்களது அமைதிக்கு தொடர்ச்சியான அச்சுறுத் தல் இருக்கிறது என்பதை ரஷ்யாவை விட வேறு எவ ரும் மிகச் சரியான முறை யில் புரிந்து கொள்ள முடி யாது எனக் குறிப்பிட்டுள்ள பிடல் காஸ்ட்ரோ, ஐரோப் பாவிலும் தனது நாசகர ஏவுகணை கட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா திட் டமிட்டிருப்பதையும் சுட் டிக்காட்டியுள்ளார்.
மெத்வதேவும் நானும் ஒரு பன்முக உலகம் உரு வாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித் தோம் என குறிப்பிட்டுள்ள காஸ்ட்ரோ, எந்த ரஷ்ய தலைவரும், எந்த சோவியத் தலைவரும் கூட இதுவரை பயணிக்காத நாடுகளின் நிலைமை பற்றியும் கூட நாங்கள் பேசினோம் என் றும் குறிப்பிட்டுள்ளார்.