மூன்று இலங்கையரை ‘’பயங்கரவாதிகள்’’ என்று பிரகடனம் செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்திய மலேசியாவின் செயலை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும், அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பும் கண்டித்துள்ளன.
இவர்கள் தற்போது இலங்கைக்கு வந்து சேர்ந்துவிட்ட்தாக இலங்கை பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.
இவர்களில் இருவர் ஏற்கனவே மலேசியாவில் யூ என் எச் சீ ஆர் அமைப்பினால் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் என்றும் ஏனைய ஒருவர் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்றும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன.
‘மலேசிய பொலிஸார் இந்த மூவரையும் கடந்த மே 15ஆம் திகதி கைதுசெய்தனர். அவர்களை 14 நாட்கள் வரையில் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் (26) அவர்கள் நாடு கடத்தப்பட்டது சட்டப்படி தவறாகும். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாகவே பொலிஸார் எம்மிடம் தெரிவித்தனர். எனினும், குடும்பத்தார், ஐ.நா. அகதிகள் அலுவலகம், அவர்களின் விவகாரங்களைக் கையாண்ட மனித உரிமை அமைப்பு ஆகியவற்றுக்கு அறியத்தராமல் இவர்கள் அவசரமாக, இரகசியமாக நாடுகடத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் எமக்கு பெய்கூறிவிட்டனர். இந்த மூவரும் நடத்தப்பட்ட முறை குடிநுழைவு சட்டத்திற்கு முற்றலும் முரணானதாகும். குடிநுழைவுச் சட்டம் முற்றிலும் உதாசினப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியா அனைத்துலக சட்டத்தை மீறிவிட்டது. இந்த மூவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றால் மலேசியா பொலிஸார் ஏன் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவில்லை. இவர்களில் இருவர் ஐ.நா.வின் அகதி அந்தஸ்து பெற்றவர்கள். எனினும், மலேசிய பொலிஸார் இவர்களை தீவிரவாதிகள் என்று கூறியிருந்தது. இதனை அவர்கள் நிரூபித்திருக்க வேண்டும். நீதிமன்றில் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது வெறுமனே நாடு கடத்தியதன் அடிப்படை மற்றும் உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது’ என மலேசியாவின் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
கோலாலம்பூரில் ஐநா அகதிகளுக்கான அமைப்பான யூ என் எச் சீ ஆர் சார்பில் பேசவல்ல யந்தி இஸ்மாயில் கூறுகையில், அந்த மூவருடைய பாதுகாப்பு குறித்து, அவர்கள் அகதிகளுக்கான பாதுகாப்பு பெறுவதற்கு அருகதை உடையவர்களா என்பது குறித்து ஆராய்வதற்கு கால அவகாசம் எதுவும் தராமல் மலேசிய அதிகாரிகள் அவர்களை நாடு கடத்திவிட்டதாக கவலை வெளியிட்டுள்ளார்.
நாடுகடத்தப்பட்ட மூவரையும் இலங்கையில் சென்று சந்தித்து அவர்களை மீள பாதுகாப்பான நாடு ஒன்றிற்கு அழைத்துவருவது அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் கடமை என்ப்தால் அந்த அமைப்பிற்கு எதிரான ஆர்பாட்டம் ஒன்றை புலம்பெயர் தமிழர்கள் ஒழுங்கு செய்துவருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.மேலதிக தகவல்கள் விரைவில்…