அணுவாயுத யுத்ததிற்குத் தயாராவதற்கு முன்னர் பிரித்தானிய மாகாராணி மக்களுக்கான உரை ஒன்றைத் தயார் செய்திருந்தார். பிரித்தானிய அரசு சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அணு ஆயுத யுத்தம் ஒன்றைத் தயார் செய்திருந்தது. மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த யுத்தத் தயாரிப்பின் அடிப்படை நோக்கம் அணுவாயுத யுத்ததைப் பரிசோதனை செய்வதாகும். இந்தத் தகவலை பிரித்தானிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. நீண்டகால இரகசிய ஆவணங்களை பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகம் வெளியிடுவது வழமை. அவ்வாறு வெளியிடப்பட்ட தகவல் ஒன்றிலேயே பிரித்தானிய அரசின் அணு ஆயுத யுத்தத்திற்கான தயாரிப்புக்களில் ஒன்றாக மகாராணியின் உரை தயார் செய்யப்பட்டதுஎன்ற தகவல் வெளியாகியுள்ளது .
இந்த உரை பிரித்தானிய அரச நிர்வாக சேவையிலிருக்கும் ஒருவரால் மகாராணிக்காக எழுதப்பட்டது.
உலகில் மீள முடியாத அழிவுகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய இந்த யுத்தத் தயாரிப்பு 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. நேட்டோ நாடுகள் அப்போது இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க மறுத்தமையால் யுத்தத் தயாரிப்பு இடை நிறுத்தப்பட்டது.
வியட்னாமை பிரஞ்சு அரசு ஆக்கிரமித்திருந்த போது போராளிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.
அருமையான தகவல், இப்பதான் இராமிய் எழுதிய பதிவின் அருமை மற்றவர்களுக்கு விளங்கும். கம்யூனிச நாடுகள் பற்றி இவர்கள் அவதூறுப்பிரச்சாரம் செய்து மக்களை தங்களது பணத்துக்காக கொன்று குவித்துள்ளார்கள். இலங்கையில் மக்கள் கொல்லப்பட காரணமானவர்களும் இந்த முதலாளித்துவ நாடுகளே. அதில் கேவலமானது என்ன வென்றால் கொன்றது மட்டுமல்ல மக்களது ஆதரவும் அவர்களுக்கேஎ