கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதென கட்சித் தலைமை எடுத்தத் தீர்மானம் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசினுள் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள எடுத்தத் தீர்மானத்திற்கு பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொழும்பு சார் ஊடகங்கள் இத்தகவல்களை வெளியிட்ட போதும் முஸ்லீம் காங்கிரஸ் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இலங்கை அரசிற்கு எதிரான தமிழ்ப் பேசும் முஸ்லீம்களின் எதிர்ப்புணர்வை முஸ்லீம் காங்கிரசில் உள்ள ஒரு பகுதியினர் பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு புதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ளலாம் என எதிர்பார்ப்பதகத் தெரிகிறது.
Late Leader Mohammed Hussain Mohammed Ashraff was a Family Friend.